பாலையம்பட்டி, அக். 18–
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி வேல்முருகன் காலனி ராஜீவ்நகரை சேர்ந்தவர் ராமானுஜம். இவரது மனைவி லீலாவதி (வயது47).
இவருக்கும் தக்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த சின்னச்சாமி மகள் அனுசுயாவுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
இந்த முன் விரோதத்தில் சின்னச்சாமி அவரது உறவினர்கள் ராம கிருஷ்ணன், சதர்சனன், சீனிவாசன் மற்றும் 4 பேர் சேர்ந்து லீலாவதியை தாக்கி கத்தியை காட்டி கொலைமிரட்டல் விடுத்ததாக அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது.
சப்–இன்ஸ்பெக்டர் முனியாண்டி விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?