மதுரை, அக். 18–
மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் வீட்டில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஊமச்சிக்குளம் போலீசார் விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வீட்டில் 3 இளம்பெண்கள் இருந்தனர். அவர்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து 3 பெண்களையும் போலீசார் மீட்டனர். அவர்களது பெயர் பிரியா (வயது30), லட்சுமி (33), சரண்யா (40) என தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 3 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தத்தனேரி களத்துபொட்டலை சேர்ந்த அனார்கலி என்ற பெண் ஆசை வார்த்தை கூறி தங்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் அதிரடி விசாரணை நடத்தி அனார்கலியை கைது செய்தனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?