Saturday, 18 October 2014

கம்ப்யூட்டரில் விளையாடியபோது 3 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை 3rd std child abused playing computer

கொழிஞ்சாம்பாறை, அக். 18

கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை ஆலாம்பாடி கிராமத்தில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வருபவர் யாசீன் (வயது 27). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

இவர் வீட்டிலேயே பிரிண்டிங் தொழில் நுட்பம் குறித்து பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 3ம் வகுப்பு மாணவி யாசீன் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். சம்பவத்தன்று அங்குள்ள தனி அறையில் இருந்த கம்ப்யூட்டரில் மாணவி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது யாசீன் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் மாணவி அலறி சத்தம் போட்டார். கண்ணாடி அறை என்பதால் மாணவியின் அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை.

யாசீன் பிடியில் இருந்து தப்பி வந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாயாரிடம் கூறி அழுதார். அதிர்ச்சியடைந்த தாயார் இது குறித்து கொழிஞ்சாம்பாறை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பினு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று யாசீனை கைது செய்தனர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி பாலியல் பலாத்காரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger