ஈழப் போராட்டத்தை பின்னணியாக கொண்டு புலிப்பார்வை என்ற பெயரில் தமிழில் படம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்த படத்தில் ஈழப் போராட்டம் பின்னணி களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் மரண காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதில் பாலச்சந்திரன் ஒரு சிறார் போராளியாகவும், தமிழர்களை போராளிகளாகவும் சித்தரிக்கப்பட்டு இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தமிழ் ஈழ ஆதரவாளர்களும் படம் போட்டுக் காட்டப்பட்டது. அப்போது பாலச்சந்திரன் புலிகளின் சீருடையில் இருப்பது போன்ற காட்சிகளையும் வேறு சில காட்சிகளையும் மாற்றியமைக்க யோசனை கூறினார்கள். அதனை தயாரிப்பாளர் உடனடியாக ஏற்றுக் கொண்டார். அதன்படி படத்தின் காட்சிகள் திருத்தம் செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டன.
இதையடுத்து படத்தை தீபாவளிக்கே வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். விஜய்யின் கத்தி, பூஜை படங்களைத் தொடர்ந்து புலிப்பார்வையும் தீபாவளிக்கு ரிலீசாகிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?