அணைக்கட்டு, அக்18–
அணைக்கட்டு ஒன்றியம் சத்தியமங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதில் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ரவி மகள் சரண்யா (11.) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறாள்.
இவருக்கு கடந்த 2 தினங்களாக மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவரை குடியாத்தம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சில சோதனைக்கு பின்னர் வேலூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் இதே ஊரை சேர்ந்தவர் சோமசுந்தரம் மகள் தீபிகா (13) 8-ம் வகுப்பு படித்து வரும் இவருக்கு திடீர் மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவரை பொய்கை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
தகவலறிந்து வட்டார மருத்துவர் கைலாஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் இந்த கிராமத்தில் முகாமிட்டு மருந்து தெளிப்பது, மாத்திரை வழங்குவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகவலறிந்து கலையரசு எம்.எல்.ஏ ஒன்றிய குழு தலைவர் சூரியகலா, துணைத் தலைவர் சேரன், ஒன்றிய கவுன்சிலர் செல்வம் ஊராட்சி மன்ற தலைவர் அசோகன் ஆகியோர் கிராமத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?