பரமத்திவேலூர், அக்.18–
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் ரத்தினகிரி. இவர் கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி வள்ளி (வயது35).
இந்த நிலையில் ரத்தினகிரி குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பிலிக்கல் பாளையத்தில் தங்கி கரும்பு வெட்டும் வேலையை செய்து வந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 15–ந்தேதி இரவு 11 மணியளவில் வள்ளி வீட்டில் உள்ள மண்எண்ணெய் அடுப்பை பற்ற வைத்தார். இதையடுத்து அவர் அடுப்பில் சுடு தண்ணீர் வைத்துக் கொண்டிருந்த போது காற்றில் அடுப்பில் இருந்த தீ வெளியேறி அவரது துணியில் பிடித்துக் கொண்டது.
தீ மளமளவென அவரது அவரது உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்க முடியாமல் அலறினார். தீயில் அவரது உடல் முழுவதும் கருகியது. அவரது சத்தத்தை கேட்டு கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சமையல் அறைக்கு விரைந்து சென்று இளம்பெண் வள்ளியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர் அங்கு இன்று காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?