தற்போதைய பாராளு மன்றத்தின் பதவி காலம் 2014-ம் ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இந்த ஆண்டு இறுதியில் டெல்லி உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலும் வருகிறது. தேர்தலுக்கு முன்னோடியாக மத்திய மந்திரி சபையில் அதிரடி மாற்றங்கள் செய்ய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. நாளை (திங்கட்கிழமை) மத்திய மந்திரிசபை மாற்றி அமைக்கப்படுகிறது. அப்போது தேர்தல் பொறுப்பை கவனிக்கும் வகையில் மூத்த மந்திரிகள் கட்சிப்பணிக்கு அனுப்பப்படுகிறார்கள்.கூடுதல் பொறுப்பு கவனித்து வரும் சில மந்திரிகளின் இலாகாக்களும் மாற்றம் செய்யப்பட உள்ளன. ஏற்கனவே தி.மு.க. மந்திரிகள் ராஜினாமா செய்ததால் அவர்கள் கவனித்து வந்த இலாகாக்கள் மற்ற மந்திரிகளுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டன. அதன் பிறகு லஞ்சம் பெற்ற விவகாரத்தில் ரெயில் மந்திரி பி.கே.பன்சாலும், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பிரச்சினையில் அஸ்வினி குமாரும் பதவி விலகினார்கள். அவர்கள் வகித்த பொறுப்புகளையும் மற்ற மந்திரிகள் கூடுதலாக கவனிக்கிறார்கள். இதனால் இலாகாக்களை பகிர்ந்து அளிக்கும் வகையில் மத்திய மந்திரிசபை மாற்றி அமைக்கப்படுகிறது.நேற்று இரவு மத்திய வீட்டு வசதிமந்திரி அஜய் மக்கான் திடீர் என்று ராஜினாமா செய்தார். கட்சிப் பணிக்கு செல்ல விரும்பியே அவர் ராஜினாமா செய்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதேபோல் சி.பி.ஜோஷியும் மந்திரிபதவியை இருந்து ராஜினாமா செய்துள்ளார். இவர்களது ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதாக இன்று அறிவிக்கப்பட்டது. அஜய் மக்கான் டெல்லியைச் சேர்ந்தவர். இதனால் அவர் டெல்லிமாநில சட்டசபை தேர்தலை கவனிக்கும் பொறுப்புக்கு அனுப்பப்படுகிறார்.இந்த ஆண்டு இறுதியில் டெல்லி மாநில சட்ட சபை தேர்தல் நடை பெறுகிறது. அதற்குமுன் அவர் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராகவோ, அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளராகவோ நியமிக்கப்படுவார். சட்டசபை தேர்தலின் போது அவர்தான் காங்கிரஸ் பிரசாரத்தை வழி நடத்திச் செல்வார். காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றால் அவரையே முதல்-மந்திரி ஆக்கும் திட்டமும் காங்கிரசிடம் உள்ளது.ஷீலா தீட்சித் டெல்லியில் அசைக்க முடியாத முதல்- மந்திரியாக தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் டெல்லி மாநிலம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது. தலைநகர் டெல்லி நாட்டிலேயே அதிக குற்றங்கள் நடைபெறும் மாநிலமாகவும், கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் காங்கிரஸ் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.எனவே தான் ஷீலா தீட்சித் இந்த முறை தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் ஆனால் பிரசாரப்பணிகள் மற்றும் கட்சிப்பணிகளை கவனிப்பார் என்றும் தெரிகிறது. இதே போல் மற்ற மாநில சட்டசபை தேர்தலை கவனிக்கும் வகையில் மேலும் ஒரு மந்திரி இன்று ராஜினாமா செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?