Wednesday 2 January 2013

24 years ago 10 paise Swallow female removal group 20 doctors

- 0 comments
24 வருடம் முன்பு 10 பைசாவை விழுங்கிய பெண்: 20 டாக்டர்கள் குழு அகற்றியது 24 years ago 10 paise Swallow female removal group 20 doctors
மும்பை, ஜன.3-
24 வருடங்களுக்கு முன் ஒரு பெண் விழுங்கிய 10 பைசா நேற்று ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது.
மும்பை பரேல் பகுதியைச் சேர்ந்த பெண் ரத்னா அஹிர் (29). இவர் தனக்கு 5 வயதாக இருந்தபோது தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது விளையாட்டுக்காக 10 பைசாவை வாயில் மறைத்து வைக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த பைசா அவரது தொண்டைக்குள் நழுவிக் கொண்டு சென்றது. உடனே அவர் தனது தாயாரிடம் இதுபற்றி கூறினார். அவரும் சில வாழைப்பழங்களை உண்டால் அது வெளியேறி விடும் என கூறி கொடுத்தார். ஆனால் அதன்பிறகு அதைப்பற்றி அவர்கள் கண்டு கொள்ளவில்லை. காரணம் அதனால் எந்த தொந்தரவும் ஏற்படவில்லை.
அஹிருக்கு 20 வயதில் திருமணம் ஆனது. திருமணத்திற்கு பின் அவர் உணவை விழுங்குவதில் சிறிது சிரமத்தை உணர்ந்தார். எதையும் சரியாக அவரால் விழுங்க முடியவில்லை. இதை அறிந்த அவரது கணவர், அஹிரை உடனே டாக்டர்களை ஆலோசிக்கும்படி கூறினார். அப்போதும் அவர் உதாசீனப்படுத்தி விட்டார்.
ஆனால் 2 மாதத்துக்கு முன்புதான் இந்த பிரச்சினை தீவிரமானது. தொண்டைப் பகுதியில் அதிக வலி ஏற்பட்டது. பிறகு அவர்கள் பரேலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு ஸ்கேன் எடுத்து பார்த்தபோது 10 பைசா அவரது தொண்டைப் பகுதியில் இருப்பது தெரிந்து உடனே ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
டாக்டர்கள் இதுபற்றி கூறுகையில் , இதுமாதிரி கேஸ் சகஜம்தான். ஆனால் 24 வருடங்களுக்கு முன்பு விழுங்கப்பட்ட 10 பைசா காயினை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். அதிக வருடம் காரணமாக அந்த காயின் துருப்பிடித்திருந்தது. அதை சுற்றி தசை வளர்ந்திருந்தது. மயக்க மருந்து நிபுணர்கள் உள்பட 20 டாக்டர்கள் கொண்ட குழு ஒன்று இதை ஆபரேஷன் செய்து அகற்றி உள்ளோம்.
கஷ்டமான 2 என்டாஸ் கோபி முறைகளையும் கையாள வேண்டியிருந்தது. அந்த பெண் அமிர்ஷ்டசாலி. அவரது உணவுக் குழாய்க்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அரசு மருத்துவமனை என்பதால் அவருக்கு அதிக செலவும் இல்லை. என்றாலும் அவர் விழுங்கிய 10 பைசா, அவரது ஸ்கேனுக்கு ரூ.2,500 செலவை ஏற்படுத்தி விட்டது என டாக்டர்கள் கூறினர்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger