Showing posts with label விளையாட்டு செய்திகள். Show all posts
Showing posts with label விளையாட்டு செய்திகள். Show all posts

Friday, 12 July 2013

மீண்டும் முதலிடத்தில் இந்தியா

- 0 comments

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான
ஆண்டு தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி.
இன்று வெளியிட்டது. இதில் இந்தியா மீண்டும்
முதலிடத்தைப் பிடித்தது.
உலக சாம்பியனான இந்தியா, இங்கிலாந்தில்
நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி மற்றும்
வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற
முத்தரப்பு தொடரில் அபார
வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியதால்,
122 புள்ளிகளுடன்
இந்தியா முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
114 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 2-
வது இடத்திலும், 112 புள்ளிகள் பெற்றுள்ள
இங்கிலாந்து 3-வது இடத்திலும் உள்ளன.
ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான
தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி 3-
வது இடத்திலும், டோனி 6-வது இடத்திலும்
உள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ்
முதலிடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர் வரிசையில் வெஸ்ட் இண்டீஸ்
வீரர் சுனில் நரைன் முதலிடத்திலும்,
பாகிஸ்தான் வீரர் அஜ்மல் 2-ம் இடத்திலும்,
இங்கிலாந்தின் ஸ்டீவன் பின் 3-
வது இடத்திலும் உள்ளனர்.
டாப்-10 வரிசையில் இந்திய வீரர்களில் ஆல்
ரவுண்டர் ஜடேஜா ஓரிரு இடங்கள்
சரிந்தபோதிலும் தற்போது 5-வது இடத்தில்
இருக்கிறார். முத்தரப்பு தொடரில் 10
விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்
புவனேஸ்குமார் 29 இடங்கள்
முன்னேறி டாப்-20 வரிசையில் இடம்பிடித்தார்.
தற்போது அவர் 20-வது இடத்தில் இருக்கிறார்.

[Continue reading...]

Thursday, 11 July 2013

மு‌த்தரப்பு கிரிக்கெட் இந்தியா சாம்பியன்

- 0 comments
வெஸ்ட் இண்டீஸில் நடந்த முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் பைனலில் இலங்கையை வென்று சாம்பியன் ஆனது.இதில் முதலில் இலங்கை 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 203ரன்கள் எடுத்து ‌வெற்றி பெற்றது.

முத்தரப்பு கிரி்க்கெட் : மேற்கு இந்திய தீவில் இலங்கை,இந்தியா, மேற்கு இந்திய தீவு அணிகள் ‌ ஆகிய முன்று நாடுகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. லீ்க் சுற்று ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் ‌மோதின . இதில் டக்ஸ் வொர்த் முறையில் இந்திய அணி வெற்றி பெற்றது. புள்ளிகளின் அடிப்படையில் மீ்ண்டும் இந்தியா - இலங்கை அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுக‌ளையும் இழந்து 201 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி விக்‌கெட்டுகளை இழந்து ‌வெற்றிக்காக தத்தளித்து கொண்டிருந்த நிலையில் அணியின் கேப்டன் அதிரடியாக விளையாடி 52 பந்துகளுக்கு 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியை ‌தேடி தந்தார்
[Continue reading...]

Tuesday, 9 July 2013

இந்தியா அபார வெற்றி இறுதிப் போட்டிக்கு தகுதி - tri series india beat sri lanka

- 0 comments
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய 3 நாடுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த போட்டியின் கடைசி லீக் ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று இரவு நடந்தது. இதில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் இந்தியா அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையுடன் களம் கண்டது.
[Continue reading...]

Monday, 8 July 2013

முக்கியமான ஆட்டத்தில் இந்தியா இலங்கை அணிகள் மோதல்

- 0 comments
3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில்
இன்று நடைபெறும் முக்கியமான கடைசி லீக்
ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள்
மோதுகின்றன.
வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, இலங்கை ஆகிய
3 நாடுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட்
போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன்
தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக்
முடிவில் முதல்
இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள்
இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்த போட்டியின் 4-வது லீக் ஆட்டம்
முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3
ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி,
ஒரு தோல்வி கண்டு 9 புள்ளிகளுடன்
முதலிடத்தில் உள்ளது. இலங்கை அணி 2
ஆட்டத்தில் ஆடி ஒரு வெற்றி,
ஒரு தோல்வியுடன் 5 புள்ளிகள் பெற்று ரன்
ரேட் அடிப்படையில் 2-வது இடத்திலும்,
இந்திய அணி 3 ஆட்டத்தில்
[Continue reading...]

Sunday, 23 June 2013

சூப்பர் சாம்பியன் இந்தியா - இளசுகளின் அசத்தல் ஆட்டம்

- 0 comments

பர்மிங்காம்: சாம்பியன்ஸ்
டிராபியை "சூப்பராக' கைப்பற்றியது இந்திய
அணி. கடைசி பந்து வரை பரபரப்பாக இருந்த
பைனலில் இங்கிலாந்தை 5 ரன்கள்
வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இங்கிலாந்தில், 7வது மற்றும்
கடைசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்
(மினி உலக கோப்பை) நடந்தது. பர்மிங்காமில்
உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில்
நேற்று நடந்த பைனலில் இந்தியா,
இங்கிலாந்து அணிகள் மோதின. "டாஸ்'
வென்ற இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக்,
"பீல்டிங்' தேர்வு செய்தார்.
20 ஓவர் போட்டி:
கனமழை மற்றும் மைதானத்தில் தேங்கி இருந்த
தண்ணீர் காரணமாக போட்டி துவங்குவதில்
தாமதம் ஏற்பட்டது. சுமார் 6
மணி நேரத்துக்கு பின், தலா 20 ஓவர்களாக
குறைக்கப்பட்டு போட்டி நடந்தது.
மழை குறுக்கீடு:
இந்திய அணிக்கு ரோகித் சர்மா (9) ஏமாற்றம்
அளித்தார். 5.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 28
ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட,
போட்டி நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில்
மீண்டும் போட்டி துவங்கியது.
தவான் அசத்தல்:
அபாரமாக ஆடிய ஷிகர் தவான், பிராட்
பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். இந்திய
அணி 6.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 38
ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும்
மழை பெய்ய, ஆட்டம் நிறுத்தப்பட்டது. சுமார்
45 நிமிடங்களுக்கு பின், போட்டி துவங்கியது.
தொடர்ந்து அசத்திய தவான், டிரட்வெல்
பந்தில்
அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்தார்.
இவர், 31 ரன்கள் எடுத்த
போது ரவி போபரா பந்தில் வெளியேறினார்.
மந்தமாக ஆடிய தினேஷ் கார்த்திக் (6)
நிலைக்கவில்லை.
ஆட்டத்தின் 13வது ஓவரை வீசிய
போபரா இரட்டை "அடி' கொடுத்தார்.
இவரது பந்துவீச்சில் ரெய்னா (1), கேப்டன்
தோனி (0) வெளியேறினார். இதையடுத்து,
ஒரு விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்திருந்த
இந்திய அணி, திடீரென 5 விக்கெட்டுக்கு 66
ரன்கள் எடுத்து திணறியது.
கோஹ்லி அபாரம்:
பின் இணைந்த கோஹ்லி, ரவிந்திர
ஜடேஜா ஜோடி துணிச்சலாக ஆடியது.
போபரா பந்தில் இரண்டு பவுண்டரி அடித்த
கோஹ்லி, பிராட்
பந்தை சிக்சருக்கு அனுப்பினார்.
இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஜடேஜா,
ஆண்டர்சன் பந்தில் சிக்சர் அடித்தார்.
ஆறாவது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்த
போது, கோஹ்லி (43) அவுட்டானார். அஷ்வின்
(1) "ரன்-அவுட்' ஆனார்.
இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 129
ரன்கள் எடுத்தது. ஜடேஜா (33), புவனேஷ்வர்
குமார் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
இங்கிலாந்து சார்பில் போபரா அதிகபட்சமாக 3
விக்கெட் கைப்பற்றினார்.
சவாலான இலக்கை விரட்டிய
இங்கிலாந்து அணிக்கு துவக்கத்திலேயே "ஷாக்'
கொடுத்தார் உமேஷ் யாதவ்.
இவரது "வேகத்தில்' கேப்டன் குக்(2)
அவுட்டானார். அடுத்து வந்த ஜோனாதான்
டிராட், புவனேஷ்வர் ஓவரில்
இரண்டு பவுண்டரி அடித்தார்.
அஷ்வின் ஜாலம்:
இதற்கு பின் அஷ்வின் "சுழல்' ஜாலம்
காட்டினார். இவர் "வைடாக' வீசிய பந்தில்
தோனியின் துடிப்பான "ஸ்டம்பிங்கில்' டிராட்
(20) வெளியேறினார். இவரது அடுத்த ஓவரில்
ஜோ ரூட்(7) சிக்கினார். ஜடேஜா பந்தில் பெல்
(13) சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டானார்.
இதையடுத்து இங்கிலாந்து 8.4 ஓவரில் 4
விக்கெட்டுக்கு 46 ரன்கள்
எடுத்து தத்தளித்தது.
பின் இயான் மார்கன்,
ரவி போபரா சேர்ந்து அசத்தினர். இஷாந்த்,
ஜடேஜா பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார்
போபரா.
"ஹீரோ' இஷாந்த்:
இந்த நேரத்தில் போட்டியின்
18வது ஓவரை வீசிய இஷாந்த்
சர்மா திருப்புமுனை ஏற்படுத்தினார்.
இரண்டாவது பந்தில் மார்கன் சிக்சர் அடித்தார்.
3வது பந்தில் மார்கன்(33) அவுட்டானார்.
4வது பந்தில் போபரா(30) வெளியேற, இந்திய
வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.
கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 15
ரன்கள் தேவைப்பட்டன. அஷ்வின் அருமையாக
பந்துவீசினார். முதல் பந்தில் ஸ்டூவர்ட் பிராட்
கண்டம் தப்ப, ரன் இல்லை.
இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்தார்.
மூன்றாவது பந்தில் ஒரு ரன். 4வது பந்தில் 2
ரன். 5வது பந்தில் 2 ரன். 6வது பந்தில் ரன்
இல்லை. இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8
விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டும்
எடுத்து தோல்வி அடைந்து, இரண்டாம் இடம்
பெற்றது.
இந்தியா சார்பில் அஷ்வின், ஜடேஜா, இஷாந்த்
தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
"ஆல்-ரவுண்டராக' அசத்திய ரவிந்திர ஜடேஜா,
ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இதுவரை சாம்பியன்
சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில், இந்திய
அணி இரண்டாவது முறையாக
கோப்பை வென்றது. முன்னதாக 2002ல்
இலங்கையுடன்
கோப்பையை பகிர்ந்து கொண்டது.
இதுவரை சாம்பியன்ஸ் டிராபி வென்ற
அணிகள்:
ஆண்டு சாம்பியன் எதிரணி இடம்
1998 தென் ஆப்ரிக்கா வெஸ்ட் இண்டீஸ்
வங்கதேசம்
2000 நியூசிலாந்து இந்தியா கென்யா
2002 இந்தியா+இலங்கை - இலங்கை
2004 வெஸ்ட் இண்டீஸ்
இங்கிலாந்து இங்கிலாந்து
2006 ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ்
இந்தியா
2009 ஆஸ்திரேலியா நியூசிலாந்து தென்
ஆப்ரிக்கா
2013 <இந்தியா இங்கிலாந்து இங்கிலாந்து
* கடந்த 2002ல் மழையால் பைனல்
கைவிடப்பட, இந்தியா+இலங்கை அணிகள்
கோப்பையை பகிர்ந்து கொண்டன.
தவான் "கோல்டன் பேட்'
இம்முறை அதிக ரன்கள் எடுத்த
பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்தியாவின்
ஷிகர் தவான் முதலிடம் பிடித்தார். இவர், 5
போட்டியில் 2 சதம், ஒரு அரைசதம் உட்பட
363 ரன்கள் எடுத்தார். இதற்காக
இவருக்கு "கோல்டன் பேட்' வழங்கப்பட்டது.
இப்பட்டியலில் "டாப்-5' பேட்ஸ்மேன்கள்:
வீரர் போட்டி ரன்கள் 100/50
தவான் (இந்தியா) 5 363 2/1
டிராட் (இங்கிலாந்து) 5 229 0/2
சங்ககரா (இலங்கை) 4 222 1/1
ரோகித் (இந்தியா) 5 177 0/2
கோஹ்லி (இந்தியா) 5 176 0/1
ஜடேஜா "கோல்டன் பால்'
"சுழலில்' அசத்திய இந்தியாவின் ரவிந்திர
ஜடேஜா, இம்முறை அதிக விக்கெட் கைப்பற்றிய
பவுலர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.
இவர், ஐந்து போட்டியில் 12 விக்கெட்
வீழ்த்தினார். இதற்காக இவருக்கு "கோல்டன்
பால்' வழங்கப்பட்டது.
இவ்வரிசையில் "டாப்-5' பவுலர்கள்:
வீரர் போட்டி விக்கெட்
ஜடேஜா (இந்தியா) 5 12
மெக்லினகன் (நியூசிலாந்து) 3 11
ஆண்டர்சன் (இங்கிலாந்து) 5 11
இஷாந்த் (இந்தியா) 5 10
மெக்லாரன் (தென் ஆப்ரிக்கா) 4 8
அஷ்வின் (இந்தியா) 5 8
ரூ. 12 கோடி பரிசு
நேற்று பட்டம் வென்ற இந்திய
அணிக்கு "ஸ்டெர்லிங் சில்வர்'
கொண்டு தயாரிக்கப்பட்ட, 3.1 கி.கி.,
எடையுள்ள, சாம்பியன்ஸ்
டிராபி கோப்பை வழங்கப்பட்டது. இதன்
மதிப்பு ரூ. 12 லட்சம். தவிர, இந்திய
அணிக்கு ரூ. 12 கோடி பரிசாக
அளிக்கப்பட்டது.
தொடர்ச்சியான அட்டவணை
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய
இந்திய அணி வீரர்கள், வெஸ்ட் இண்டீசில்
நடக்கவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடரில்
(ஜூன் 28 - ஜூலை 11) பங்கேற்க உள்ளனர்.
மூன்றாவது அணியாக
இலங்கை அணி விளையாடுகிறது. அதன்பின்,
ஜிம்பாப்வே செல்லு<ம் இந்திய அணி,
ஐந்து போட்டிகள் (ஜூலை 24 - ஆக., 3)
கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
இதனையடுத்து, இந்திய அணி வீரர்கள், வரும்
ஆகஸ்ட் மாதம் தாயகம் திரும்ப உள்ளனர்.
அதேவேளையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான
ஒருநாள் தொடருக்கு சில சீனியர்
வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனத்
தெரிகிறது. இத்தொடருக்கான இந்திய அணி,
விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
கங்குலியை முந்திய தவான்
இம்முறை 363 ரன்கள் எடுத்த ஷிகர் தவான்,
ஒரு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக
ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில்
முன்னாள் கேப்டன்
கங்குலியை பின்தள்ளி முதலிடம் பிடித்தார்.
கென்யாவில், 2000ல் நடந்த தொடரில்
முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 348 ரன்கள்
எடுத்தார்.
தோனி சாதனை
கடந்த 2007ல் இந்திய அணியின் கேப்டனாக
தோனி நியமிக்கப்பட்டார். முதன்முதலில்
இவர், 2007ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த
"டுவென்டி-20' உலக
கோப்பை வென்று தந்தார். அதன்பின் 2011ல்
சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை (50
ஓவர்) தொடரில்,
இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக உலக
கோப்பை (50 ஓவர்) வென்று தந்தார்.
தற்போது, சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக
கோப்பை) தொடரில் 100 சதவீத வெற்றியுடன்
கோப்பை வென்று சாதித்தார். இதன்மூலம்
"டுவென்டி-20' உலக கோப்பை, உலக
கோப்பை (50 ஓவர்) மற்றும் சாம்பியன்ஸ்
டிராபி வென்ற முதல் கேப்டன் என்ற
சாதனை படைத்தார்.
தவிர இவர், டெஸ்ட் மற்றும் ஒருநாள்
போட்டிக்கான ஐ.சி.சி., ரேங்கிங்கில் (தரவரிசை)
இந்திய அணியை "நம்பர்-1'
இடத்துக்கு அழைத்து சென்றார்.
பெல் "அவுட்' சர்ச்சை
நேற்று போட்டியின் 9வது ஓவரை வீசிய
ரவிந்திர ஜடேஜாவின் 4வது பந்தில்
இங்கிலாந்தின் இயான் பெல்லை(13),
தோனி "ஸ்டம்பிங்' செய்தார். இது தொடர்பாக
சந்தேகம் எழ, மூன்றாவது அம்பயரிடம்
கேட்கப்பட்டது. "ரீப்ளே'வில் பெல்,
காலை "கிரீசுக்குள்' வைத்திருந்தது தெளிவாக
தெரிந்தது. ஆனால், மூன்றாவது அம்பயர்
ஆக்சன்போர்டு(ஆஸ்திரேலியா) தவறாக
"அவுட்' கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.
இதையடுத்து பெல்(13) விரக்தியுடன்
வெளியேறினார்.
விருது அர்ப்பணம்
தொடர் நாயகன் விருதை வென்ற மகிழ்ச்சியில்
மீசையை முறுக்கி விட்ட தவான்
கூறுகையில்,""பந்துகள் எகிறும்
இங்கிலாந்து ஆடுகளங்கள்
எனது பேட்டிங்கிற்கு ஒத்துழைத்தது. இந்த
விருதை உத்தரகாண்ட் வெள்ளத்தில்
பாதிக்கப்பட்ட
மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்,''என்றார்.

[Continue reading...]

Friday, 21 June 2013

இந்திய அணியில் முண்ணனி வீரர்கள் நீக்கம் ,இளம் வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு young indian cricket team

- 0 comments
இந்திய கிரிக்கெட் அணியின்
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான
போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இந்திய அணி ஜூலை 24-
ந்தேதி முதல் ஆகஸ்டு 3-
ந்தேதி வரை ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம்
செய்து 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில்
விளையாடுகிறது.
ஜூலை 24-ந்தேதி, ஜூலை 26, ஜூலை 28,
ஜூலை 31 மற்றும் ஆகஸ்டு 3-ந்தேதி ஆகிய
நாட்களில் ஒரு நாள் போட்டிகள் நடக்கின்றன.
இதில் முதல் 3 ஆட்டங்கள் ஹராரே நகரிலும்,
கடைசி இரு ஆட்டங்கள் புலவாயோவிலும்
நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கு,
முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு 2-
ம் தர அணியை அனுப்ப இந்திய கிரிக்கெட்
வாரியம் திட்டமிட்டுள்ளது. 2010-ம்
ஆண்டு அங்கு நடந்த முத்தரப்பு தொடரில்
இந்திய அணி சுரேஷ் ரெய்னா தலைமையில்
பங்கேற்றது நினைவு கூரத்தக்கது.
[Continue reading...]

Thursday, 20 June 2013

இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கு தகுதி

- 0 comments

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 2-
வது அரைஇறுதிப்போட்டி இன்று கார்டிபில்
நடைபெற்றது. இதில் இந்தியா -
இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற
இந்தியா முதலில்
பந்து வீச்சை தேர்வு செய்தது.
இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக
பெரெரா மற்றும் டில்சன் களமிறங்கினார்கள்.
இதில் பெரெரா 4 ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர் வந்த வீரர்கள் இந்திய அணியின்
பந்து வீச்சை சமாளிக்க முடியாமல்
இலங்கை வீரர்கள் சொற்ப ரன்களில்
வெளியேறினார்கள்.
இறுதியில் இலங்கை அணி 50 ஓவர் முடிவில்
8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள்
மட்டுமே எடுத்தது. அணியின் கேப்டன்
மேத்யூஸ் அதிகபட்சமாக 51 ரன்கள்
எடுத்து அவுட் ஆனார்.
இந்தியா தரப்பில் இசாந்த் சர்மா மற்றும்
அஸ்வின் தலா 3
விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
182 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன்
இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர்களாக
தவான் மற்றும் சர்மா களமிறங்கினார்கள்.
இருவரும் நிதானமாக விளையாடி அணியின்
ஸ்கோரை உயர்த்தினர். இவர்கள் ஜோடியில்
இந்திய அணி 77 ரன்கள் பெற்றது.
சர்மா 33 ரன்னிலும், சிறப்பாக
விளையாடி அரைசதம் அடித்த தவான் 68
ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
பின்னர் வந்த கோலி மற்றும்
ரெய்னா ஜோடி சேர்ந்து அதிரடியாக
விளையாடியதால், இந்திய அணி ( 35 ஓவர்,
182/2) 2
விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலங்கையை
எளிதாக வென்றது.
கோலி 58 ரன்னிலும், ரெய்னா 7 ரன்னிலும்
கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சிறப்பாக பந்து வீசிய இசாந்த் சர்மா ஆட்ட
நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிபோட்டியில்
இங்கிலாந்து - இந்தியா வரும

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger