3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில்
இன்று நடைபெறும் முக்கியமான கடைசி லீக்
ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள்
மோதுகின்றன.
வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, இலங்கை ஆகிய
3 நாடுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட்
போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன்
தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக்
முடிவில் முதல்
இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள்
இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்த போட்டியின் 4-வது லீக் ஆட்டம்
முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3
ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி,
ஒரு தோல்வி கண்டு 9 புள்ளிகளுடன்
முதலிடத்தில் உள்ளது. இலங்கை அணி 2
ஆட்டத்தில் ஆடி ஒரு வெற்றி,
ஒரு தோல்வியுடன் 5 புள்ளிகள் பெற்று ரன்
ரேட் அடிப்படையில் 2-வது இடத்திலும்,
இந்திய அணி 3 ஆட்டத்தில்
விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 5
புள்ளிகள் பெற்று 3-வது இடத்திலும்
உள்ளன.
4 லீக் ஆட்டங்கள் முடிவில் 3 அணிகளுக்கும்
இறுதிப்போட்டி வாய்ப்பு இருந்தது. இலங்கை-
வெஸ்ட் இண்டீஸ் அணிகள்
இடையே நேற்று முன்தினம் இரவு நடந்த 5-
வது லீக் ஆட்டம் மழையால்
பாதிக்கப்பட்டதால், அந்த ஆட்டம்
நேற்று இரவு தொடர்ந்து நடந்தது. இந்த
ஆட்டத்தில் முடிவை பொறுத்தே இந்திய
அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற எந்த
வித்தியாசத்தில் கடைசி லீக் ஆட்டத்தில்
வெற்றி பெற வேண்டும் என்று கணக்கிட
முடியும்.
இந்த நிலையில் 3 நாடுகள் போட்டியின்
கடைசி லீக் ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில்
இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில்
இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும்
முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாகும்.
முந்தைய ஆட்டம் மழையால்
பாதிக்கப்பட்டு நேற்று தொடர்ந்து நடைபெற்றதால்
இலங்கை அணியினர் எந்தவித ஓய்வும்
இல்லாமல் இன்றைய ஆட்டத்தில் விளையாட
வேண்டிய நிலை உள்ளது.
அதே நேரத்தில் இந்திய
அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெஸ்ட்
இண்டீஸ் அணியை 102 ரன் வித்தியாசத்தில்
வீழ்த்திய நம்பிக்கையுடன் தனது கடைசி லீக்
ஆட்டத்தில் களம் காணும்.
இந்திய அணி இந்த போட்டியில் இன்னும்
தனது முழு திறனையும்
வெளிப்படுத்தவில்லை. முந்தைய லீக்
ஆட்டத்தில் இலங்கையிடம் கண்ட
தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்க
முயற்சிக்கும். அதேநேரத்தில்
இறுதிப்போட்டிக்கு முன்னேற இரு அணிகளும்
துடிப்புடன் செயல்படும் என்பதால் இன்றைய
ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம்
இருக்காது.
இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7
மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி டென்
கிரிக்கெட் மற்றும் தூர்தர்ஷனில் நேரடியாக
ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியா-இலங்கை அணிகள் இதுவரை 141
முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
இதில் இந்திய அணி 76 முறையும்,
இலங்கை அணி 53 முறையும்
வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் டையில்
முடிந்தது. 11 ஆட்டங்கள் முடிவு இல்லாமல்
போனது.
இன்றைய போட்டிக்கான உத்தேச அணிகள்
வருமாறு:-
இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ஷிகர்
தவான், ரோகித் ஷர்மா, தினேஷ் கார்த்திக்,
சுரேஷ் ரெய்னா, எம்.விஜய், ரவீந்திர ஜடேஜா,
உமேஷ்யாதவ், இஷாந்த் ஷர்மா,
புவனேஷ்வர்குமார், அஸ்வின்.
இலங்கை: ஏஞ்சலோ மேத்யூஸ் (கேப்டன்),
உபுல் தரங்கா, ஜெயவர்த்தனே, சங்கக்கரா,
சன்டிமால், திரிமன்னே, ஜீவன் மென்டிஸ்,
குலசேகரா, செனநாயகே, மலிங்கா, எரங்கா.
இன்று நடைபெறும் முக்கியமான கடைசி லீக்
ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள்
மோதுகின்றன.
வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, இலங்கை ஆகிய
3 நாடுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட்
போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன்
தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக்
முடிவில் முதல்
இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள்
இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இந்த போட்டியின் 4-வது லீக் ஆட்டம்
முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3
ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி,
ஒரு தோல்வி கண்டு 9 புள்ளிகளுடன்
முதலிடத்தில் உள்ளது. இலங்கை அணி 2
ஆட்டத்தில் ஆடி ஒரு வெற்றி,
ஒரு தோல்வியுடன் 5 புள்ளிகள் பெற்று ரன்
ரேட் அடிப்படையில் 2-வது இடத்திலும்,
இந்திய அணி 3 ஆட்டத்தில்
விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 5
புள்ளிகள் பெற்று 3-வது இடத்திலும்
உள்ளன.
4 லீக் ஆட்டங்கள் முடிவில் 3 அணிகளுக்கும்
இறுதிப்போட்டி வாய்ப்பு இருந்தது. இலங்கை-
வெஸ்ட் இண்டீஸ் அணிகள்
இடையே நேற்று முன்தினம் இரவு நடந்த 5-
வது லீக் ஆட்டம் மழையால்
பாதிக்கப்பட்டதால், அந்த ஆட்டம்
நேற்று இரவு தொடர்ந்து நடந்தது. இந்த
ஆட்டத்தில் முடிவை பொறுத்தே இந்திய
அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற எந்த
வித்தியாசத்தில் கடைசி லீக் ஆட்டத்தில்
வெற்றி பெற வேண்டும் என்று கணக்கிட
முடியும்.
இந்த நிலையில் 3 நாடுகள் போட்டியின்
கடைசி லீக் ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில்
இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில்
இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும்
முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாகும்.
முந்தைய ஆட்டம் மழையால்
பாதிக்கப்பட்டு நேற்று தொடர்ந்து நடைபெற்றதால்
இலங்கை அணியினர் எந்தவித ஓய்வும்
இல்லாமல் இன்றைய ஆட்டத்தில் விளையாட
வேண்டிய நிலை உள்ளது.
அதே நேரத்தில் இந்திய
அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெஸ்ட்
இண்டீஸ் அணியை 102 ரன் வித்தியாசத்தில்
வீழ்த்திய நம்பிக்கையுடன் தனது கடைசி லீக்
ஆட்டத்தில் களம் காணும்.
இந்திய அணி இந்த போட்டியில் இன்னும்
தனது முழு திறனையும்
வெளிப்படுத்தவில்லை. முந்தைய லீக்
ஆட்டத்தில் இலங்கையிடம் கண்ட
தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்க
முயற்சிக்கும். அதேநேரத்தில்
இறுதிப்போட்டிக்கு முன்னேற இரு அணிகளும்
துடிப்புடன் செயல்படும் என்பதால் இன்றைய
ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம்
இருக்காது.
இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7
மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி டென்
கிரிக்கெட் மற்றும் தூர்தர்ஷனில் நேரடியாக
ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியா-இலங்கை அணிகள் இதுவரை 141
முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
இதில் இந்திய அணி 76 முறையும்,
இலங்கை அணி 53 முறையும்
வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டம் டையில்
முடிந்தது. 11 ஆட்டங்கள் முடிவு இல்லாமல்
போனது.
இன்றைய போட்டிக்கான உத்தேச அணிகள்
வருமாறு:-
இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ஷிகர்
தவான், ரோகித் ஷர்மா, தினேஷ் கார்த்திக்,
சுரேஷ் ரெய்னா, எம்.விஜய், ரவீந்திர ஜடேஜா,
உமேஷ்யாதவ், இஷாந்த் ஷர்மா,
புவனேஷ்வர்குமார், அஸ்வின்.
இலங்கை: ஏஞ்சலோ மேத்யூஸ் (கேப்டன்),
உபுல் தரங்கா, ஜெயவர்த்தனே, சங்கக்கரா,
சன்டிமால், திரிமன்னே, ஜீவன் மென்டிஸ்,
குலசேகரா, செனநாயகே, மலிங்கா, எரங்கா.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?