
களஞ்சியமும் மறுத்தனர். அஞ்சலியை யாரோ கடத்தி சென்று தங்கள் பிடியில் வைத்துக் கொண்டு தனக்கு எதிராக பேச வைப்பதாக பாரதிதேவி போலீசில் புகார் அளித்தார். அவரை கண்டு பிடிக்கும்படியும் புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
ஐகோர்ட்டிலும் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் ஐதராபாத் போலீசில் அஞ்சலி ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை என்று வாக்கு மூலம் அளித்தார்.
ஹேபியஸ் கார்பஸ் மனு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது அஞ்சலி மர்ம நபர் பிடியில் இருப்பதாகவும் எனவே அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் பாரதிதேவி வக்கீல் வாதிட்டார்.
இதையடுத்து 9–ந் தேதி அஞ்சலியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் போலீசார் ஐதராபாத் சென்று அஞ்சலியை தேடுகிறார்கள். அவரை கண்டு பிடித்து அழைத்து வந்து நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஞ்சலி தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். தமிழில் நடிப்பதை நிறுத்தி விட்டார். அஞ்சலியை வைத்து களஞ்சியம் இயக்கிய ஊர் சுற்றிபுராணம் படம் பாதியில் நிற்கிறது. அப்படத்தில் தொடர்ந்து நடிக்க மறுப்பதாக கூறப்படுகிறது. எனவே அஞ்சலி மீது டைரக்டர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் களஞ்சியம் புகார் அளித்துள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?