உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள
ரணியா பகுதியில் கடந்த 21-ம் தேதி டாக்டர்
சத்தீஷ் சந்திரா (42), என்பவர் மர்மமான
முறையில் கொல்லப்பட்டார்.
ரணியா பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில்
கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமான
முறையில் அவர் இறந்து கிடந்தார்.
அவரது மர்ம உறுப்பையும்
கொலயாளி துண்டித்திருந்ததால் இந்த
கொலையின் பின்னணி பற்றி போலீசார்
பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், இறந்து கிடந்த டாக்டரின்
மனைவிக்கு ஒரு பார்சல் ‘கொரியர்’ மூலம்
அனுப்பட்டது.
அந்த பார்சலில் இருந்து ரத்தம் வடிந்ததால்
சந்தேகப்பட்ட கொரியர் நிறுவன ஊழியர்கள்
போலீசில் புகார் அளித்தனர்.
பார்சலை பிரித்து பார்த்த போலீசார்
திகைப்படைந்தனர்.
கொரியர் நிறுவன ஊழியர்கள் கூறிய
அடையாளங்களை அடிப்படையாக
வைத்து போலீசார்
ஒரு பெண்ணை கைது செய்தனர்.
டாக்டரை கொன்றது ஏன் ? என்பது தொடர்பாக
போலீசாரிடம் வாக்குமூலம்
அளித்த அந்த
பெண் கூறியதாவது:-
சுமார் 13 வருடங்களாக
எனக்கு போதை ஊசி போட்டு டாக்டர்
என்னை தொடர்ந்து கற்பழித்து வந்தார்.
இதேபோல் கடந்த 16-ம் தேதி எனக்கு போன்
செய்து ரணியாவில் உள்ள
லாட்ஜுக்கு வரவழைத்தார்.
சம்பவத்தன்று நாங்கள் இருவரும் லாட்ஜ்
அறையில் ஒன்றாக மது குடித்தோம்.
போதையில் இருந்த டாக்டரின்
கழுத்தை அறுத்துக் கொன்றேன். மர்ம
உறுப்பையும்
வெட்டி எடுத்து அவரது மனைவிக்கு கொரியர்
மூலம் பார்சலாக அனுப்பி வைத்தேன்.
இவ்வாறு அந்த பெண் வாக்குமூலம்
அளித்துள்ளார்.
அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல்
இருப்பதாகவும், இதற்காக
அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும்
போலீசார் தெரிவித்தனர்.