Friday, 26 July 2013

பிளாஸ்டிக் கழிவு குப்பைக்கு தங்க நாணயம் வாங்கப் போகிறீர்களா ?

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது கவுன்சிலர் தன்ராஜ் (அ.தி.மு.க.) எழுந்து சென்னை மாநகராட்சியே துப்புரவு பணியையும், சுகாதார பணியையும் மேற்கொள்ளுமா? என்று கேட்டார். இதற்கு பதில் அளித்து மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:-

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிக்காகவும், சுகாதார பணிக்காகவும்  தற்போது தேவைப்படும் கூடுதல்
பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். மாநகராட்சி விரிவாக்கத்திற்கு பிறகு சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்க துப்புரவு பணியை தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஒப்பந்த பணியாளர்கள் கண்காணிக்க புதிய முறை தற்போது அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி ஒரு பணியாளர் ஒரு தெருவை சுத்தம் செய்துவிட்டு அந்த தெருவில் உள்ள வெவ்வேறு கதவு இலக்கம் கொண்ட வீட்டின் உரிமையாளர்களிடமோ, வசிப்பவர்களிடமோ, அந்த ஊழியர் கையெழுத்து வாங்க வேண்டும். அவர்களின் முகவரி மற்றும் செல்போன் எண் போன்றவற்றையும் துப்புரவு ஊழியர் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்படி பெறப்பட்ட விவரங்களை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து அதன் அடிப்படையில்தான் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். புதிய முறை அமல்படுத்தப்பட்டால் தெருக்களில் குப்பைகள் தேங்காது சுத்தமாக இருக்கும். இந்த பணியில் தொய்வு இருந்தால் கவுன்சிலர்கள் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கவன்சிலர் தமிழ் செல்வன்:- 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவதை தடை செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

மேயர் சைதை துரைசாமி:- தினசரி உருவாகும் குப்பையில் இருந்து மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை பிரித் தெடுப்பது அவசியமாகிறது. முதற்கட்டமாக ஒரு சதவீதம் என்ற அளவிற்கு 48 மெட்ரிக்டன் மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகள் பிரித்தெடுக்கப்பட வேண்டும். இந்த திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்தி அதிக அளவு பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுத்து மாநகராட்சியிடம் வழங்கும் பொதுமக்களை ஊக்குவிக்க பரிசு வழங்கப்படும். குலுக்கல் முறையில் தேர்வு செய்து வார்டு ஒன்றுக்கு கிராம் தங்க நாணயம் மற்றும் அடுத்த 5 நபர்களுக்கு கை கடிகாரம் வழங்கப்படும்.

மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை நேரடியாக கொண்டு வந்து தரும் பொதுமக்களுக்கு ஒவ்வொரு கிலோவிற்கும் நம்பருடன் கூடிய டோக்கன் வழங்கப்படும். அந்த அடிப்படையில் அதிகம் டோக்கன் பெறும் பொது மக்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதை தடை செய்வது பற்றி மாநகராட்சியின் பொது சுகாதார துறை மூலம் சட்டபூர்வ ஆய்வு செய்து அறிக்கை பெற்று அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு மேயர் துரைசாமி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

சென்னை மாநகராட்சி மூலம் நடத்தப்படும் 200 அம்மா உணவகங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்படுகிறது. இதற்காக ரூ.1 கோடியே 7 லட்சத்து 39 ஆயிரம் செலவில் 600 கண்காணிப்பு காமிராக்கள் வாங்கப்படும். இதன் மூலம் அம்மா உணவகங்களில் நடைபெறும் நிகழ்வுகள் ரிப்பன் கட்டிடம் மற்றும் மண்டல அலுவலகங்களில் இருந்து கண்காணிக்க 200 இணைய தள இணைப்புகள் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. படித்த பட்டதாரி இளைஞர்கள், மாணவர்களின் கல்வி மேம்பாடுகளுக்கு பல துறைகளை சார்ந்த கல்வியை (சி.ஏ, ஐ.சி.டபிள்ï.ஏ, எம்.பி. பி.எஸ்., பி.இ., டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள்) அகில இந்திய மாநில அளவிலான பல வேலை வாய்ப்புகளை பெற போட்டி தேர்வுகள் எழுத இலவச பயிற்சி அளிக்கப்படும்.

ராயபுரம் ரெயில்வே மேம்பாலத்தை உயர்த்தி கட்டுவதற்கு கொள்கை அளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாதுகாப்பு பணி மேற்கொள்ள 240 இரவு காவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மேற்கண்டவை உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.          

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger