தூத்துக்குடி ரயில் நிலையத்தில் முத்துநகர்
எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று திங்கள்(22-07-2013)
காலை 7.30 மணிக்கு வந்தது. பயணிகள்
அனைவரும் இறங்கி சென்ற பின்னர்,
ஒரே ஒரு சிறுவன் மட்டும்
தனியே நின்று கொண்டிருந்தான். இதனைப்
பார்த்த ரயில்வே போலீஸ் ஏட்டுகள்
அசோக்குமார், சித்திரையப்பன் ஆகியோர்
சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அந்த சிறுவன் முன்னுக்குப்பின் முரணான
தகவல்களை தெரிவித்தான். இதையடுத்து சப்
இன்ஸ்பெக்டர் ஜாண் பீட்டர் மேத்யூவிடம்
சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். அவர்
சிறுவனிடம் நடத்திய விசாரணையில், அந்த
சிறுவனின் பெயர் முத்துக்குமார் (எ)
முத்து சாமி (8), தகப்பனார் பெயர்
உண்ணிகிருஷ்ணன், தாயார் பெயர்
சரஸ்வதி என்றும், தனக்கு 2 தங்கைகள்
உள்ளதாகவும் கூறியுள்ளான்.
மேலும், தனது தயார் வீட்டில்
வைத்து தன்னை சூடுபோட வந்தபோது,
வீட்டிலிருந்து 100 ருபாய்
பணத்தை எடுத்துக்கொண்டு அவரிடம்
இருந்து தப்பித்து பஸ்
ஏறி திருநெல்வேலி சென்றேன்.
அங்கிருந்து ரயிலில் மதுரை சென்றேன்.
மதுரையில் பணம் முழுவதும் காலியானதும்
ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்தேன்.
அப்போது அங்கு ஒருவர்
எனக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து முத்துநகர்
ரயிலில் ஏற்றிவிட்டார் என்று கூறியுள்ளான்.
ஆனால், இவ்வளவு விவரங்கள் கூறும் அந்த
சிறுவனால் தனது முகவரியை மட்டும்
கூறத்தெரியவிலலை.
தனது வீடு தூத்துக்குடியில் தான்
உள்ளது எனவும், வீட்டருகே நிறைய லாரிகள்
நிற்கும் என்று கூறியுள்ளான். அந்த சிறுவன்
சைல்டு லைன் பாதுகாவலர் காசிராஜனிடம்
ஒப்படைக்கப்பட்டான். அவர்
சிறுவனை முத்துக்குவியல் காப்பகத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளார். # நண்பர்கள்
இதை ஷேர் செய்து சிறுவன்
பெற்றோரை சென்றடைய செய்ய உதவலாமே!
[Continue reading...]