Tuesday, 23 July 2013

திருமணம் 4 முறை தடை ஏற்பட்டதால் தூக்கில் தொங்கிய வாலிபர்

4 முறை நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போனதால் மனம் உடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லிவாசிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு டெல்லி கஜூரி காஸ் பகுதியை சேர்ந்தவர் அதீக் அகமது (22). வாலிபத்தின் வசந்த காலத்தில் நிற்கும் மகனுக்கு விரைவாக திருமணம் செய்து வைக்க விரும்பிய பெற்றோர் பெண் தேட தொடங்கினர்.

கடந்த ஓராண்டு காலத்தில் 3 முறை பெண் பார்க்கும் படலங்கள் நடந்தது. நிச்சயதார்த்தம் முடிந்தும், 3 தடவையும் கடைசி நேரத்தில் அவரது திருமணம் தடைபட்டு நின்றது.

இந்நிலையில், கடந்த வாரம் அதீக் அகமதுவுக்கு மற்றொரு பெண் பார்த்தனர். இந்த முறையும் திருமண தேதி முடிவாகாமல், புதுமண முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதனால், மனம் உடைந்த அதீக் அகமது நேற்று அதிகாலை தனது படுக்கையறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு பிணமாக தொங்கினார்.

பிணத்தை கைப்பற்றிய போலீசார், அந்த அறையில் தற்கொலை தொடர்பான கடிதம் ஏதும் கிடைக்காததால் குடும்பத்தாரிடம் விசாரித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger