Thursday, 12 September 2013

குருபூஜைகளுக்கு தடை விதிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை gurupooja ban tamil nadu government high court recommended

- 0 comments

குருபூஜைகளுக்கு தடை விதிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை gurupooja ban tamil nadu government high court recommended

Tamil News

சென்னை, செப். 12- தமிழகத்தில் மறைந்த தலைவர்களுக்கு குருபூஜை நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த குருபூஜைக்காக அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் செல்லும்போது, எதிர்தரப்பினருடன் ஏற்படும் கருத்து மோதல்களால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுகின்றன. குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் தலைவரின் குருபூஜையில், அந்த சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களின் செல்வாக்கு அதிகம் இருப்பதால், மற்ற சமுதாயத்தினர் அங்கு செலும்போது பிரச்சினை ஏற்படுகிறது. சில நேரங்களில் கலவரம் ஏற்பட்டு உயிர்ப்பலியில் முடிகிறது.

இந்நிலையில், ஒண்டிவீரன் குருபூஜை குறித்து சிவக்குமார் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். குருபூஜையில் பங்கேற்க வாகனங்களில் செல்ல அவர் அனுமதி கோரியிருந்தார். அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றபோது, ஜாதி தலைவர்களின் குருபூஜைகளின்போது சொத்து சேதம் மற்றும் உயிர்ச்சேதம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி தென்மண்டல ஐ.ஜி. சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். இந்நிலையில் விசாரணை முடிவடைந்த நிலையில், சிவக்குமாரின் மனுவை நீதிபதி கிருபாகரன் இன்று தள்ளுபடி செய்தார். மேலும், குருபூஜைகளுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் அல்லது கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தார்.

"குருபூஜை என்ற பெயரில் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி அரசியல் கட்சி தலைவர்கள் குருபூஜைகளில் கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டும்" என்றும் நீதிபதி அறிவுறுத்தினார். ...
Show commentsOpen link

[Continue reading...]

சௌந்தர்யா ரஜினிகாந்தின் காதல் ரகசியம் soundarya love story

- 0 comments

சௌந்தர்யா ரஜினிகாந்தின் காதல் ரகசியம்
ஆண் நண்பருடனான ...

எனது தந்தையிடம் அனுமதி பெற்ற பின்னரே அஸ்வின் என்னிடம் காதலை சொன்னார் என்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா.

இவர் தனது தந்தையை வைத்து கோச்சடையான் படத்தை இயக்கியுள்ளார். தற்போது அப்படத்தின் டீஸரையும் வெளியிட்டுள்ளார்.

தனது குடும்பம் வாழ்க்கை குறித்து கூறும் சௌந்தர்யா, எங்கள் வீட்டில் எங்கள் அம்மா தான் பாஸ்.

மேலும் எனது கணவர் அஸ்வினுக்கு என் நிஜப் பெயரான ஷக்கு பாய் ராவ் கெய்க்வாட் தான் பிடிக்கும்.

என் காதல் கணவர் அஸ்வின் தனது காதலை சொல்லி மோதிரம் அணிவிக்கும் முன்பு அதை என் அப்பாவிடம் தெரிவித்து சம்மதம் வாங்கினார்.

சுல்தான் படத்தை நான் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கினேன்.

ஆனால் பல்வேறு காரணங்களால் படம் கைவிடப்பட்டது. சுல்தானுக்கும் கோச்சடையானுக்கும் தொடர்பில்லை என்கிறார் சௌந்தர்யா.

Visit website

[Continue reading...]

தமிழ் ரசிகர்களை மிரட்ட வருகிறது தி கான்ஜுரிங் tamil fans english movie

- 0 comments

தமிழ் ரசிகர்களை மிரட்ட வருகிறது தி கான்ஜுரிங்
ஆண் நண்பருடனான ...

சமீபத்தில் வெளியாகி உலகையே பயமுறுத்தி கொண்டிருக்கும் தி கான்ஜுரிங் தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது. 

அதிக ரத்தம், கொலை என்று இல்லாமல் வெறும் காட்சி அமைப்புகள், பின்னணி இசை மூலமே மிரட்டியிருக்கிறார்களாம்.

வழக்கமான பேய்பட கதைதான். ஒரு பழைய வீட்டுக்கு புதிதாக குடிபோகிறது ஒரு குடும்பம்.

அந்த வீட்டுக்குள் இருக்கும் தீயசக்தி அவர்களை எப்படி ஆட்டிப்படைக்கிறது, அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்கிற கதை.

ஜேம்ஸ் வானின் இயக்கத்தில் வேரா பார்மிங்கா, பேட்ரிக் வில்சன் நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படம் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

இந்தப் படத்தை பார்துவிட்டு ரஜினி மகள் ஐஸ்வர்யா நான் இரண்டு நாள் இரவில் வீட்டைவிட்டே வெளியில் வர பயந்தேன், இரவில் தூக்கம் இல்லாமல் தவித்தேன் என்று டூவிட்டரில் எழுத ஏகத்துக்கு படம் எகிறிவிட்டது.

சென்னை மால் திரையரங்குகளில் ஒரு வாரத்துக்கு ஹவுஸ்புல்லாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Visit website

[Continue reading...]

முன்னாள் காதலனுக்கு டாட்டா காட்டிய ப்ரியங்கா சோப்ரா bye to ex lover

- 0 comments

முன்னாள் காதலனுக்கு டாட்டா காட்டிய ப்ரியங்கா சோப்ரா
by

ஆண் நண்பருடனான ... -

தனது முன்னாள் காதலுடனுன் நடிக்க மறுக்கிறார் ப்ரியங்கா சோப்ரா.
மிலன் டாக்கீஸில் இம்ரான் கானும், ப்‌ரியங்கா சோப்ராவும் நடிப்பதாக இருந்தது.

இந்நிலையில் இம்ரான் கான் படத்திலிருந்து வெளியேற, ஷாகித் கபூரை புதிதாக ஒப்பந்தம் செய்தனர்.

கதாநாயகன் ஷாகித் கபூர் என்றதும் ப்‌ரியங்காவும் மிலன் டாக்கீஸுக்கு டாட்டா காட்டியிருக்கிறார்.

ப்‌ரியங்கா ஏற்கனவே ஒப்புக் கொண்ட படத்தில் கால்ஷீட்டும், மிலன் டாக்கீஸும் கிளாஷானதால்தான் அவர் வெளியேறினார் என்று ஏக்தா கபூர் சமாளித்தாலும் ப்‌ரியங்காவின் வெளியேற்றத்துக்கு காரணம் கால்ஷீட் இல்லை காதல்.

அவருக்குப் பதில் வேறு நடிகையை தேடி வருகிறார்கள்.

ஷாகித் கபூர் ப்‌ரியங்கா சோப்ராவின் முன்னாள் காதலர்.

இருவரும் கருத்து வேறுபாடல் பி‌ரிந்த பிறகு சேர்ந்து நடிக்கவில்லை. ப்‌ரியங்காவின் திடீர் விலகலுக்கு இந்த முன்னாள் காதல்தான் காரணமாம்.

Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger