குருபூஜைகளுக்கு தடை விதிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை gurupooja ban tamil nadu government high court recommended
Tamil News
சென்னை, செப். 12- தமிழகத்தில் மறைந்த தலைவர்களுக்கு குருபூஜை நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த குருபூஜைக்காக அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் செல்லும்போது, எதிர்தரப்பினருடன் ஏற்படும் கருத்து மோதல்களால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுகின்றன. குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் தலைவரின் குருபூஜையில், அந்த சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களின் செல்வாக்கு அதிகம் இருப்பதால், மற்ற சமுதாயத்தினர் அங்கு செலும்போது பிரச்சினை ஏற்படுகிறது. சில நேரங்களில் கலவரம் ஏற்பட்டு உயிர்ப்பலியில் முடிகிறது.
இந்நிலையில், ஒண்டிவீரன் குருபூஜை குறித்து சிவக்குமார் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். குருபூஜையில் பங்கேற்க வாகனங்களில் செல்ல அவர் அனுமதி கோரியிருந்தார். அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றபோது, ஜாதி தலைவர்களின் குருபூஜைகளின்போது சொத்து சேதம் மற்றும் உயிர்ச்சேதம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தென்மண்டல ஐ.ஜி. சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். இந்நிலையில் விசாரணை முடிவடைந்த நிலையில், சிவக்குமாரின் மனுவை நீதிபதி கிருபாகரன் இன்று தள்ளுபடி செய்தார். மேலும், குருபூஜைகளுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் அல்லது கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தார்.
"குருபூஜை என்ற பெயரில் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி அரசியல் கட்சி தலைவர்கள் குருபூஜைகளில் கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டும்" என்றும் நீதிபதி அறிவுறுத்தினார். ...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?