தமிழ் ரசிகர்களை மிரட்ட வருகிறது தி கான்ஜுரிங்
ஆண் நண்பருடனான ...
சமீபத்தில் வெளியாகி உலகையே பயமுறுத்தி கொண்டிருக்கும் தி கான்ஜுரிங் தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது.
அதிக ரத்தம், கொலை என்று இல்லாமல் வெறும் காட்சி அமைப்புகள், பின்னணி இசை மூலமே மிரட்டியிருக்கிறார்களாம்.
வழக்கமான பேய்பட கதைதான். ஒரு பழைய வீட்டுக்கு புதிதாக குடிபோகிறது ஒரு குடும்பம்.
அந்த வீட்டுக்குள் இருக்கும் தீயசக்தி அவர்களை எப்படி ஆட்டிப்படைக்கிறது, அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்கிற கதை.
ஜேம்ஸ் வானின் இயக்கத்தில் வேரா பார்மிங்கா, பேட்ரிக் வில்சன் நடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இப்படம் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
இந்தப் படத்தை பார்துவிட்டு ரஜினி மகள் ஐஸ்வர்யா நான் இரண்டு நாள் இரவில் வீட்டைவிட்டே வெளியில் வர பயந்தேன், இரவில் தூக்கம் இல்லாமல் தவித்தேன் என்று டூவிட்டரில் எழுத ஏகத்துக்கு படம் எகிறிவிட்டது.
சென்னை மால் திரையரங்குகளில் ஒரு வாரத்துக்கு ஹவுஸ்புல்லாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Visit website
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?