டெல்லி மாணவி கற்பழித்து கொலை:
தண்டனை நாளை அறிவிப்பு Delhi student
murder case Tomorrow sentence announced
டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர்
மாதம் 16–ந்தேதி ஓடும் பஸ்சில் 23
வயது மருத்து மாணவியை 6
வாலிபர்கள் மிகக் கொடூரமாக
தாக்கி கற்பழித்தது உலகம் முழுவதும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
படுகாயம் அடைந்த அந்த
மாணவி டெல்லி சப்தர்ஜங்
மருத்துவமனையில் 10 நாட்கள்
உயிருக்குப் போராடினார்.
பிறகு மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர்
ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட
அந்த மாணவி டிசம்பர் 29–ந்தேதி மரணம்
அடைந்தார்.
மருத்துவ
மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம்
நாடெங்கும் மக்களிடம் குறிப்பாக
பெண்களிடம் கடும்
கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து டெல்லி போலீசார்
அதிரடி வேட்டை நடத்தி குற்றவாளிகளான
ராம்சிங், வினய், அக்ஷய், முகேஷ், பவன்
மற்றும் மைனர் சிறுவன் ஆகிய 6
பேரை கைது செய்தனர்.
மைனர் சிறுவன் மீதான வழக்கு சிறார்
நீதிமன்றத்தில் நடந்தது. மற்ற 5
வாலிபர்களும் விரைவு நீதிமன்றத்தில்
விசாரிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் முக்கிய
குற்றவாளியான பஸ் டிரைவர் ராம்சிங்
கடந்த மார்ச் மாதம் 11–
ந்தேதி டெல்லி திகார் ஜெயிலில்
உள்ள தன் அறைக்குள் தூக்குப்
போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இதனால் மற்ற 4 வாலிபர்கள் மீதான
குற்றச்சாட்டுக்களை விரைவு கோர்ட்டு நடத்தி வந்தது.
இதற்கிடையே மைனர் சிறுவன் மீதான
விசாரணை கடந்த மாதம் முடிந்தது.
இதையடுத்து கடந்த மாதம் 31–
ந்தேதி மைனர் சிறுவனுக்கு 3
ஆண்டு தண்டனை விதித்து சிறார்
நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மைனர் சிறுவனுக்கு அளிக்கப்பட்ட
தண்டனை போதாது என்ற
உணர்வு மக்களிடம் நிலவி வரும்
நிலையில் மற்ற 4 வாலிபர்களுக்கும்
எத்தகைய தண்டனை அளிக்கப்படும் என்ற
எதிர்பார்ப்பு நாடெங்கும்
ஏற்பட்டது கடந்த பிப்ரவரி மாதம் 2–
ந்தேதி தொடங்கிய அவர்கள் மீதான
வழக்கு விசாரணை கடந்த 3–
ந்தேதி முடிந்தது.
மாணவியை மீட்ட போலீஸ்காரர்கள்,
சிகிச்சை அளித்த டாக்டர்கள்,
மாணவியின் நண்பர்கள் என 84 பேர்
சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர்.
அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு பப்ளிக்
பிராசிக்யூட்டர் தயான் கிருஷணன்
இறுதி நாள் வாதாடுகையில், 4
வாலிபர்களும் குற்றம் செய்ததற்கான
ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளேன்.
அது நிரூபிக்கப்பட்டும் உள்ளது.
எனவே 4 குற்றவாளி களுக்கும்
அதிகபட்ச தண்டனையாக மரண
தண்டனை விதிக்கக் கேட்டுக்
கொள்கிறேன் என்றார்.
4 வாலிபர்கள் மீதும் கும்பலாக
கற்பழித்தல், கொலை, கடத்தல்,
இயற்கைக்கு மாறாக குற்றம் புரிதல்,
கொலை முயற்சி, கொள்ளை,
ஆதாரங்களை அழித்தல், சதி திட்டம்
என்பன போன்ற 13 பிரிவுகளில்
வழக்குகள் பதிவாகி இருந்தன. இந்த 13
குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டது.
கடந்த 3–ந்தேதி சாட்சிகள்
விசாரணை உள்பட
எல்லா விசாரணைகளும் முடிந்ததும்
தீர்ப்பை விரைவு கோர்ட்டு நீதிபதி ஒத்தி வைத்திருந்தார்.
இன்று அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படும்
என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4
பேரையும் குற்றவாளிகள்
என்று அறிவித்த நீதிபதி,
தண்டனை விவரத்தை நாளை வெளியிடுவதாக
அறிவித்தார்.
இன்று கோர்ட்டுக்கு வந்திருந்த
மாணவியின் தாயும், தந்தையும் 4
குற்றவாளிகளையும் தூக்கில் போட
வேண்டும் என்று கண்ணீர் மல்க
கூறினார்கள்.
[Continue reading...]