Tuesday, 10 September 2013

ஏழைகளுக்கு உணவு வழங்குவதால் பணம் வீணாகாது: ராகுல் காந்தி பேச்சு Rahul says providing food to poor is not wastage of money

ஏழைகளுக்கு உணவு வழங்குவதால்
பணம் வீணாகாது: ராகுல்
காந்தி பேச்சு Rahul says providing food to
poor is not wastage of money

புதுடெல்லி, செப். 10-
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்
காந்தி பேசியதாவது:-
நாட்டில் உள்ள ஏழைகளின் பசியைப்
போக்கும் நோக்கத்துடன்
உணவு பாதுகாப்பு சட்டம்
கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த
சட்டத்தின் மூலம் உணவுப் பொருட்கள்
வழங்குவதால் அரசுப் பணம்
வீணாகிறது என்று எதிர்க்கட்சி கூறுகிறது.
ஏழைகளுக்கு உணவு வழங்குவதற்கு செலவு செய்வதால்,
பொருளாதார வளம்
விரயமாகிறது என்று கூற
முடியாது. நாட்டில் உள்ள ஏழைகள்
தங்கள் சொந்தக் கால்களில் நிற்க
வேண்டும் என்று நாங்கள்
விரும்புகிறோம்.
நாங்கள்
மக்களுக்கு உரிமைகளை வழங்கிக்
கொண்டிருக்கிறோம். உரிமைகள்
என்பது வளர்ச்சிக்கான உத்தரவாதம்.
உணவு பாதுகாப்பு சட்டம்
அமல்படுத்தப்பட்ட பிறகு, நாட்டில்
ஒருவரும் பசியுடன் இருக்க
மாட்டார்கள்.
உணவு பாதுகாப்பு சட்டம், தகவல்
அறியும் உரிமைச் சட்டம்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக
வேலை உறுதியளிப்பு சட்டம்
போன்று கடந்த 10 ஆண்டுகளில் எண்ணற்ற
வளர்ச்சித்
திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.
மக்களின்
உரிமையை உறுதி செய்வதே இந்த
சட்டங்களின் நோக்கமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger