Tuesday, 10 September 2013

சேலையூரில் பள்ளி மாணவியிடம் சப்–இன்ஸ்பெக்டர் பாலியல் பலாத்கார முயற்சி try to school student molested sub inspector police investigation

தாம்பரத்தை அடுத்த சேலையூர் பவானி நகரை சேர்ந்தவர் ராஜாராம் கூலி தொழிலாளி. பா.ஜனதா தொண்டர். இவரது மகள் ஷோபா (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார்.
இதே தெருவில் குடியிருப்பவர் கிளமென்ட்ராஜ் (30). இவர் சேலையூர் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மாலை மாணவி ஷோபா தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ‘‘நீ கேட்ட புத்தகம் என்னிடம் இருக்கிறது. வீட்டுக்கு வா’’ என்று கிளமென்ட்ராஜ் அழைத்துள்ளார்.


கிளமென்ட்ராஜ் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் என்பதால், புத்தகம் வாங்க அவரது வீட்டுக்கு ஷோபா சென்றார். அப்போது கதவை சாத்திய கிளமென்ட் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
உடனே மாணவி ஷோபா அலறினார். சத்தம் கேட்டு மாணவியின் தாய் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சப்–இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு சென்று கதவை தட்டினார்கள்.

கதவை திறந்த கிளமென்ட்ராஜ், எதுவும் தெரியாதது போல, என்ன விஷயம்? இங்கு யாரும் இல்லை என்றார். ஆனால் உள்ளே மாணவியின் அழுகுரல் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தார் மாணவியிடம் விசாரித்தார்கள்.

அப்போது சப்–இன்ஸ்பெக்டர் கிளமென்ட்ராஜ் தன்னிடம் தவறாக நடந்தார். பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்று அங்கு வந்தவர்களிடம் மாணவி தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சப்–இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்தனர்.

தகவல் அறிந்ததும் மாணவியின் தந்தை அங்கு வந்தார். சேலையூர் போலீசில் சப்–இன்ஸ்பெக்டர் குறித்து புகார் செய்தார். ஆனால் அதை போலீசார் வாங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பா.ஜனதா பிரமுகர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம், பொற்றாமரை சந்திரன் உள்பட ஏராளமானோர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் சேலையூர் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் சென்று சப்–இன்ஸ்பெக்டர் கிளமென்ட்ராஜ் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக புகார் கொடுத்தனர்.

உதவி கமிஷனர் தன்ராஜ் புகாரை பெற்றுக் கொண்டார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன் பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். இன்று சப்–இன்ஸ்பெக்டர் கிளமென்ட்ராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது. சப்–இன்ஸ்பெக்டர் ஒருவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் சேலையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger