Tuesday, 20 December 2011

மெருகேறிய அஜீத் !

- 0 comments
 
 
 
அஜித், பார்வதி ஒமணக்குட்டன் நடிப்பில் தயாராகும் படம் ' பில்லா-2'. சக்ரி டொலெட்டி இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை இந்துஜா குழுமத்தின் IN Entertainment நிறுவனம் தயாரிக்கிறது.
 
இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்தது. 'பில்லா' மற்றும் 'மங்காத்தா' படத்திற்கு கிடைத்த வரவேற்பால், இப்படத்திற்கு அஜித் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
 
'பில்லா-2' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடித்து படக்குழு ஊர் திரும்பிவிட்டது. இறுதிக் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. அங்கு பனிமலையில் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.
 
இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள ராஜசேகர் " அஜித்துடன் நான் 'ரெட்' படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். மிக நல்ல மனிதர். அப்போது எப்படி பழகினாரோ இப்போதும் அப்படியே தான் பழகுகிறார். நடிப்பைப் பொருத்தவரை 'ரெட்' படத்தை விட இப்போது நன்றாக மெருகேறி இருக்கிறார். இப்படத்தின் மொத்த காட்சிகளையும் சக்ரி முன்னரே தெளிவாக, தயாராக வைத்திருந்ததால், பட படப்பிடிப்பு வேலைகள் எளிதாக சீக்கிரம் முடிந்தது. " என்று கூறியுள்ளார்.
 
படத்தின் படத்தொகுப்பு மற்றும் பிற பணிகள் முடித்து, பொங்கலுக்கு டிரெய்லர் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். 'பில்லா-2' 2012 கோடை விடுமுறையின் போது வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



[Continue reading...]

விபத்தில் முன்னாள் மந்திரி மகன் உள்பட 3 பேர் பலி

- 0 comments
 
 
ஆந்திரா மாநில முன்னாள் மந்திரி கோமத்ரெட்டி வெங்கட் ரெட்டி. தனி தெலுங்கானா மாநிலத்துக்காக மந்திரி பதவியை ராஜினாமா செய்தவர். தற்போது எம்.எல்.ஏ.வாக மட்டும் உள்ளார்.
 
இவரது மகன் பிரதீக் ரெட்டி. தனது நண்பர்கள் சுனீத்ரெட்டி, சந்திரா ரெட்டி, அரவ ரெட்டி ஆகியோருடன் இன்று ஒரு காரில் சென்றார். ஐதராபாத் நகர வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் கூட்டமாக வந்த ஆட்டு மந்தை மீது மோதாமல் இருக்க பிரதீக் ரெட்டி காரை திருப்பினார்.
 
அப்போது கார் நிலைதடுமாறி, சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் காரில் இருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அரவ ரெட்டி தவிர மற்ற 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்



[Continue reading...]

வைகோவை தேடும் உள���ுத்துறை - கூடலூர���க்குள் ரகசியமாகச்சென்றாரா?

- 0 comments


பெரியாறு அணையை உடைக்க முயலும் கேரள அரசைக் கண்டித்து கேரளா செல்லும் அனைத்து வழித்தடங்களையும் அடைத்து நாளை போராட்டம் நடத்த உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் கம்பத்தில் வைகோ கலந்து கொள்வதாகவும் மற்ற இடங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவு இயக்கத்தினர் பங்கேற்பர் என்றும் அறிவிக்கப்பட்டது. வைகோவின் போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகள், சங்கங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெரியாறு அணை விவகாரத்தில் கம்பத்தில் வைகோ தலைமையில் நடக்க இருந்த உண்ணாவிரதம், அங்கு பிறப்பிக்கப்பட்ட 144 தடையுத்தரவால் தேனியில் நடந்தது.

ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் தினமும் திரண்டு கேரள எல்லையை முற்றுகையிட்டு வரும் நிலையில், வைகோ கம்பம் பகுதிக்கு சென்றால் பிரச்னை பெரிதாகி விடும் என்று உளவுத்துறை தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளது.

மேலும் வைகோவின் செயல்பாடுகளை கடந்த நான்கு நாட்களாக உளவுத்துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது. கம்பத்தில் 144 தடையுத்தரவு தொடர்வதால், தேனியிலேயே வைகோவை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், நேற்று நள்ளிரவு கம்பம், கூடலூர் பகுதியில் உள்ள கிராமத்திற்கு வைகோ ரகசியமாக சென்றதாக தகவல் பரவியுள்ளது.

நேற்று முன்தினம் கோவை மாவட்டத்தில் உள்ள கேரள எல்லைகளை பார்வையிட்டு, போராட்டம் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து வைகோ ஆலோசனை நடத்தினார். பின்னர் கோவையில் நடந்த பெரியாறு அணையின் உண்மை நிலை குறித்த குறும்பட சிடி வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.

நேற்று தேனியில் கேரள அரசை கண்டித்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்பவர் திடீரென தீக்குளித்தார். படுகாயம் அடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரை நேற்று இரவு வைகோ சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஆனால் அதன் பின்னர் வைகோ எங்கு சென்றார் என தெரியாததால் போலீஸ், உளவுத்துறை குழம்பி போய் உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வைகோவின் உறவினர்கள், கட்சியினரிடம் போலீசார் ரகசியமாக விசாரித்தபடி உள்ளனர்.


http://actressmasaala.blogspot.com



  • http://tamil-friend.blogspot.com

  • [Continue reading...]

    கேரளம் நோக்கிச் ���ெல்லும் சாலைகளில் முற்றுகைப் போ���ாட்டம்: பழ. நெடுமாறன் அறிவிப்பு

    - 0 comments


    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை மதிக்க கேரளம் மறுப்பதையும் புதிய அணை கட்டவேண்டும் என பிடிவாதமாக கேரளம் வற்புறுத்துவதையும் கண்டிக்கும் வகையில் தமிழகத்திலிருந்து கேரளம் நோக்கிச் செல்லும் 13 சாலைகளிலும் எந்தப் பொருளையும் கொண்டுச்செல்லாமல் தடுக்கும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது.

    எதிர்வரும் 21ஆம் நாள் காலை 10 மணிக்கு இந்த முற்றுகைப் போராட்டம் 13 சாலைகளிலும் நடைபெறும். கம்பம் லோயர் கேம்ப் பகுதியில் நடைபெறும் முற்றுகைப் போராட்டத்தில் வைகோ அவர்களும் கலந்துகொள்ளுகிறோம். முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவில் அங்கம் வகிக்கும் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும் தோழர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

    அறவழியில் நடத்தப்படும் இப்போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும்படி மக்களை வேண்டிக்கொள்கிறேன்.

    என பழநெடுமாறன் அவர்கள் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    http://actressmasaala.blogspot.com



  • http://tamil-friend.blogspot.com

  • [Continue reading...]

    சனி பெயர்ச்சி சச��� பெயர்ச்சியாகிவிட்டது: எஸ்.வி.சே��ர் கமெண்ட்

    - 0 comments


    அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவி முதல் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சசிகலா நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நடிகரும், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான (அதிமுக) எஸ்.வி.சேகரிடம், தனியார் தொலைக்காட்சி ஒன்று கருத்து கேட்டது.

    இதற்கு பதில் அளித்துப் பேசிய அவர், ஜெயலலிதா அவர்கள் உற்ற தோழி, நெருங்கிய தோழி என்ற பதவியை எடுக்கவில்லை. உற்ற தோழியாக இருக்கலாம். நெருங்கிய தோழியாக இருக்கலாம். அவர்கள் அறிவித்திருப்பது என்னவென்றால், அதிமுகவில் இருக்கக் கூடிய பதவியை பறித்திருக்கிறார்கள். இல்லத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார்கள். வெளியேற்றப்படவில்லை. இல்லத்தில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பே வெளியே போய்விட்டதாக சொல்லுகிறார்கள். அதைப்பற்றி பேசத்தேவையில்லை. நம்மைப் பொறுத்தவரை அதிமுகவில் இருந்து ஒரு பவர் செக்டராக இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

    இது என்றைக்கோ நடக்கும் என்று பலபேர் எதிர்பார்த்தார்கள். பலபேர் சாபமிட்டார்கள். பலபேர் இதுநடக்காதா என ஏங்கினார்கள். அது இன்று நடந்திருக்கிறது. நாளைக்கு சனி பெயர்ச்சி. அது சசி பெயர்ச்சியாகிவிட்டது என்றார்.


    http://actressmasaala.blogspot.com



  • http://tamil-friend.blogspot.com

  • [Continue reading...]

    கார்டன் அதிரடிக்கு காரணம் குஜராத் சியெம் மோடியாம்...ஒரு பகீர் ரிப்போர்ட்.

    - 0 comments
     
     
     
     
     
    சியெம்மின் அதிரடிக்கு காரணம், குஜராத் சியெம் மோடி என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பலமாக ஒலிக்க துவங்கியுள்ளது. நம்ம சியெம்முக்கு மருத்துவ உதவிக்காக மோடி அனுப்பிய நர்ஸ், கார்டன்ல நடக்கிற விஷயத்தை மோடி தரப்புக்கு கொண்டு போயிட்டாராம்... இதனால, சியெம்முக்கு மோடி அட்வைஸ் பண்ணினாராம்...
     
     
    அதுல சுதாரிச்சுக்கிட்டவங்க, எல்லாருக்கும் கல்தா கொடுக்க, வாய்ப்பை எதிர்பார்த்திட்டு இருந்தாராம்... வாய்ப்பு கிடைச்சதுமே கழற்றி விட்டுட்டார்னு கார்டனுக்கு நெருக்கமானவங்க, பேச ஆரம்பிச்சிருக்காங்களாம்... சியெம்மோட அண்ணன் மகள்தான், இப்போ அவருக்கு உதவியா கார்டன்ல தங்கியிருக்காராம்.
     
    இந்த நடவடிக்கையால, அரசு லாயர்ஸ் ஒரு பகுதியினர் ஆடிப்போயி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் சசிகலா ரெகமண்ட்ல வந்தவங்களாம். உயிர் தோழி நீக்கப்பட்ட விஷயம் தெரிஞ்சதும் சில வக்கீல்கள் ராஜினாமா செய்யற முடிவுக்குக் கூட வந்துட்டாங்களாம்... கலங்கிப் போனவங்க லிஸ்ட்ல சில அமைச்சர்களும், பல அரசு வக்கீல்களும்தான் முன்னணி இடத்துல இருப்பதாக கூறப்படுகிறது.
     
     
    முதல்வர் ஜெயலலிதாவை சுத்தி இருந்த மன்னார்குடி கூட்டம் துரத்தப்பட்டதால் இனி அடிக்கடி எந்த மாற்றமும் நடக்காது என்று கட்சிக்காரங்க நம்புறாங்களாம்...' 'கட்சி வேலைகளை ஒழுங்கா செய்யலாம்... காங்கிரீட்டான நம்பிக்கையில பொறுப்பை வகிக்கலாம்'னு முக்கிய நிர்வாகிகள் பேசிக்கிறாங்களாம்... இந்த அதிரடி நீக்கத்தால ரொம்ப சந்தோசமானது சியெம் குடும்பம்தானாம்...
     
    அப்படி என்றால் தோழி ஆட்சி போயி இன்னும் ஜெ.யின் குடும்ப ஆட்சி ஆரம்பமாக போகுதோ...! இன்னும் தமிழக மக்கள் இதுவரை தெரியாத முதல்வர் ஜெயலலிதாவின் பல உறவுகளை, சொந்தங்களை தெரிந்து கொள்ளலாம்...!! என்ன தவம் செய்தாயோ தமிழா...!!! நீ விலக நினைத்தாலும் உறவுகள்...சொந்தங்கள்...(குடும்ப ஆட்சி) உன்னை விலக மறுக்கிறதே...!!!!



    [Continue reading...]

    அடுத்த முதல்வர் ���தவிக்கு ஜாதகம் ��ணித்த சசிகலா

    - 0 comments


    சொத்துக்குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்றால், அடுத்த முதல்வரை யாரை நியமிப்பது என, சசிகலா உறவினர்கள் ஜோதிடம் பார்த்த தகவல் மற்றும் சசிகலா, இளவரசிக்காக சட்ட நிபுணரிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது, தி.மு.க., குடும்பத்தினரிடம் மறைமுக தொடர்பு வைத்த விவகாரம் போன்றவை தெரிய வந்ததால், மன்னார்குடி குடும்பத்தினருக்கு கூண்டோடு கல்தா கொடுக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    சசிகலா குடும்பத்தினர்முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள், கட்சி நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து, முதல்வரின், "குட்புக்'கிலிருந்து அவர்களை வெளியேற்றுவதில் சசிகலாவின் உறவினர்களின் முக்கிய பணியாக இருந்தது.முதல்வர் ஜெயலலிதாவை தினமும் யார் சந்திக்க வேண்டும், எந்தெந்த கடிதங்கள் அவரது பார்வைக்கு அனுப்ப வேண்டும், எந்தெந்த பைல்களை அனுப்பி கையெழுத்து பெற வேண்டும் போன்ற பணிகளை சசிகலா செய்து வந்தார்.அவரது கண் அசைவு இன்றி, போயஸ் கார்டன் வீட்டில் எந்த காரியமும் நடக்காது.சர்வ வல்லமையுடன் கோலோச்சி வந்த சசிகலாவை, கட்சியிலிருந்து நீக்குவதற்கு அவரது குடும்ப அதிகார மையமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சசிகலாவின் உறவினர் ஒருவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளார். அவருக்கும், தி.மு.க., குடும்பத்தினர் சிலருக்கும் மறைமுக நட்பு இருந்துள்ளது. தி.மு.க., குடும்பத்தினருக்கு வேண்டிய ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பதவிகளில் நியமிக்க வைப்பதில், அவரது கைங்கர்யம் உண்டு.

    குடும்பத்தினரை காப்பாற்ற முயற்சி : முதல்வருக்கு அரசியல் ஆலோசனை கூறும் முக்கிய பிரமுகர் ஒருவரின் உறவினர் கட்டிய கட்டடத்திற்கு, சி.எம்.டி.ஏ., அனுமதி பெறுவதற்கு சசிகலா உறவினர் ஒருவர் பணம் கேட்ட தகவல், முதல்வருக்கு தெரிய வந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சகிகலா குடும்பத்தினரை மட்டும் காப்பாற்றுவதற்காக, சட்ட நிபுணர் ஒருவர் மூலமாக, முன்னாள் நீதிபதியிடம் பேச்சுவார்த்தை நடத்திய தகவலும் கிடைத்துள்ளது.சமீபத்தில் சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராவதற்கு சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் பெங்களூரு சென்றனர். அப்போது, அங்கு சசிகலாவின் குடும்பத்தினர் அனைவரும் சென்றுள்ளனர். முதல்வர் பெங்களூரு கோர்ட்டிற்கு சென்ற போது, சசிகலா குடும்பத்தினர் யாரும் வரவில்லை; இதுவும் முதல்வருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    அடுத்த முதல்வர் யார்?தி.மு.க., குடும்பத்தினர் மற்றும் மத்திய அமைச்சர் ஒருவர் நடத்தும் மதுபான நிறுவனங்களுக்கு, டாஸ்மாக் கடைகளில் விற்பதற்கான ஏற்பாடுகளை சசிகலா உறவினர்கள் செய்துள்ளனர். பிரபல மதுபான நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்த தகவலை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.இவை அனைத்தும் விட மிக முத்தாய்ப்பாக, சொத்து குவிப்பு வழக்கில் முதல்வருக்கு எதிரான தீர்ப்பு கிடைக்குமானால், அடுத்த முதல்வர் யாரை நியமிக்கலாம் என்பதை ஜோதிடர் மூலம் சசிகலாவின் உறவினர்கள், பிரபல ஜோதிடர் ஒருவரை சந்தித்து, மூத்த அமைச்சர் ஒருவரின் ஜாதகத்தையும், ஜூனியர் அமைச்சர் ஒருவரின் ஜாதகத்தையும் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மூத்த அமைச்சரின் ஜாதகத்தை ஜோதிடர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், ஜூனியர் அமைச்சரை தேர்வு செய்யலாம் என ஜோதிடர் தெரிவித்த தகவலும் கசிந்துள்ளது.

    ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் புகார்:வட மாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலர், தங்களை மத்திய அரசு பணிக்கு அனுப்பி வையுங்கள் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கான காரணங்கள் குறித்து முதல்வர் கேட்டதாகக் கூறப்படுகிறது.அப்போது, தி.மு.க.,வுக்கு வேண்டிய அதிகாரிகளுக்கு, முக்கிய பதவி கொடுப்பதற்கு சசிகலா உறவினர்கள் படாத பாடு படுத்திய விவரங்களையும் அதிகாரிகள், முதல்வரிடம் பட்டியலிட்டுள்ளனர். கடந்த பார்லிமென்ட், சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்களில் சீட் வழங்கப்பட்டதில், சசிகலாவின் உறவினர்கள் பல கோடிகளை வசூலித்த புகாரும் மற்றொரு காரணமாக அமைந்துள்ளது.

    இது குறித்து கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:போயஸ் கார்டனில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் பலர் சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்கள். அவர்களை முதலில் மாற்ற வேண்டும். அவர்களில் சிலர், தம் மனைவி மற்றும் உறவினர்கள் பெயரில் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளனர். பாதுகாப்பு பணி போலீசாரின் சகோதரர் ஒருவர், எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். எங்களை, "சின்னம்மா போலீஸ்' என வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

    டாஸ்மாக்கில் ஆதிக்கம், கவுன்சிலர்கள் வேட்பாளர்கள் தேர்விலும், மண்டலக் குழுத் தலைவர்கள் நியமனத்திலும், மாவட்ட நிர்வாகிகள் நியமனத்திலும் வசூல் வேட்டை, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில், தி.மு.க., ஆதரவாளர்கள் நியமனம், ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்த நடவடிக்கை குறித்து தகவல் பரிமாற்றம் செய்தது, கட்சிக்குள் கோஷ்டிப் பூசலை வளர்த்தது, அதிகார மையங்களின் அராஜகச் செயல் போன்றவை தான், சசிகலாவின் குடும்பத்தினரை வெளியேற்றுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துவிட்டன.இவ்வாறு அவர் கூறினார்.


    http://actressmasaala.blogspot.com



  • http://tamil-friend.blogspot.com

  • [Continue reading...]

    பவர் புல் பைல்: ஜ��யலலிதா கண்ணில் பட்டது எப்படி?

    - 0 comments


    டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து போயஸ் கார்டனுக்கு அனுப்பப்பட்ட ரகசிய பைல், முதல்வரின் கண்ணில் படாமல் மறைக்கப்பட்டது. அந்த பைலை, வெள்ளிக்கிழமை அன்று முதல்வர் ஜெயலலிதா எடுத்து படித்துள்ளார். அதன் பின்னர் தான் சசிகலாவின் ஆதரவர்களாக வலம் வந்த அதிகாரிகள், ஒவ்வொருவராக, "கழற்றி' விடப்பட்டுகின்றனர்.

    "எம்.ஜி.ஆர்., கூட இந்தளவிற்கு தனி மெஜாரிட்டியில் ஜெயிக்கலைங்க… இந்தம்மாவிடம் (ஜெயலலிதா) பொதுமக்கள் நிறைய எதிர்பார்க்கிறாங்க' என்ற பேச்சு, தமிழகத்தின் அடிமட்ட அரசியல் தொண்டனிடம் இருந்து, ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள் வரை பேசப்பட்டது.

    முதல்வரின் நிழலாக பின் தொடரும் சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள், "தமிழகத்தில் நடப்பது எங்கள் ஆட்சி' என்ற தோரணையில் தலைமைச் செயலகத்தில் வலம் வந்தனர்.தற்போது நீக்கப்பட்ட, 14 பேரில் ராகவன் என்பவர், தேர்தல் முடிவு வந்து கொண்டிருந்த நேரத்தில், சி.எம்.டி.ஏ., பிரின்சிபல் செக்ரடரி தயானந்த கட்காரியை போனில் அழைத்து, "நாங்கள் சொல்லும் பைலில் கையெழுத்து போடா விட்டால் நடப்பதே வேறு' என மிரட்டியுள்ளார்.

    அந்த நபர், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை என, தலையிட்டு, கடைசியாக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் துறையிலும் தலையை நீட்டினார். "2 ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சரின் ஆசியுடன், கடந்த ஆட்சியில் சென்னையில் பணியாற்றி வந்த, "ஜிம் பாடி பில்டர்' ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர், கார்டன் அதிகார நபரை பிடித்தார்.அடுத்த சில நாட்களில் அந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி, மேற்கு மண்டலத்தில் உள்ள வளமான மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டார். இது போன்ற ஏகப்பட்ட தலையீடுகள், போலீஸ் துறையில் அரங்கேறின.

    கார்டன் அதிகார மையத்தினரால் நடத்தப்படும் வசூல் வேட்டை குறித்து, டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து ரகசிய, "பைல்' முதல்வருக்கு அனுப்பப்பட்டது. அந்த பைலை முதல்வரின் பார்வையில் படாமல் கார்டனில் உள்ள சிலர் மறைத்து விட்டனர்.டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து கார்டனுக்கு அனுப்பப்பட்ட ரகசிய பைல், ஒரு மாதத்திற்கும் மேலாக கார்டனில் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருந்தது. இம்மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை, அந்த பைலை ஜெயலலிதா படித்துள்ளார்.அதில், சசிகலா மற்றும் அவரது வகையறாக்கள் ஒவ்வொருவரை பற்றியும், வசூல் வேட்டை பற்றியும் விலாவாரியாக, "புட்டு புட்டு' வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, கார்டன் அதிகார மையத்தினரால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் தகவல், நியாயமான, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளால் முதல்வரிடம் தயக்கத்துடன் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பின் தான், முதல்வர் சாட்டையை சுழற்றினார். தலைமைச் செயலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த, சிறப்பு திட்ட செயலரான பன்னீர்செல்வம் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.அவர், சசிகலாவின் கணவர் நடராஜனின் தீவிர விசுவாசி. பன்னீர்செல்வம், ஐ.ஏ.எஸ்., ஆனதற்கு, நடராஜன் உதவியதாக கூறப்படுகிறது. பன்னீர்செல்வத்திற்கு அடுத்து, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான, திருமலைச்சாமி, கார்டனில் இருந்து விரட்டப்பட்டார்.இவர், கார்டன் அதிகார மையத்திற்கு மிகவும் நெருக்கமானவர். கார்டனில் நடக்கும் விஷயங்களை கேட்டு முகம் சிவந்த ஜெயலலிதா, திருமலைச்சாமியிடம் நேரடியாக விசாரித்த போது, பல தகவல்கள் முதல்வரை அதிர்ச்சியடை செய்தன.திருமலைச்சாமியின் வாக்கு மூலத்தை, அமைச்சர்களை நேரில் அழைத்து விசாரித்து, நூறு சதவீதம் உறுதி செய்தார் ஜெயலலிதா. இனிமேலும் தாமதித்தால் எல்லாம் வீணாகிப் போய்விடும் என்ற எண்ணத்தில், கழக தலைமைக் செயற்குழு குழு உறுப்பினர் சசிகலா, அவரது கணவர் நடராஜன், அவரது சகோதரர் ராமச்சந்திரன் உட்பட, 14 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், மற்ற பொறுப்புகளில் இருந்து ஜெயலலிதா விடுவித்து உத்தரவிட்டார்.

    விடுமுறையில் ஓட்டம்:கார்டன் அதிகார மையத்திற்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் பலர், செய்தித் துறையில் பல இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அந்த அதிகாரிகள், "எம்.என்., – எம்.ஆர்.,' வீட்டில் எடுபிடி வேலைகளை செய்து வந்துள்ளனர். நேற்று, ஜெ., வின் அதிரடியால், செய்தித் துறையில் பணியாற்றி வந்த ஆதரவு அதிகாரிகள் சிலர், மொபைல் போனை, "ஆப்' செய்து விட்டு, "எஸ்கேப்' ஆகி விட்டனர். முதல்வரின், "ஹிட் லிஸ்டில்' உள்ளவர்களில் சிலர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


    http://actressmasaala.blogspot.com



  • http://tamil-friend.blogspot.com

  • [Continue reading...]

    சுவிசில் நடைபெற��ற அன்ரன் பாலசிங்கம், தமிழ்ச்செல்���ன் உட்பட 7 மாவீரர்களின் வணக்க நிக���்வு (படங்கள் இணை���்பு)

    - 0 comments


    தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், பிறிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஏழு மாவீரர்களின் வணக்க நிகழ்வு சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

    18.12.2011 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 15.30 மணி தொடக்கம் நடைபெற்ற நிகழ்வில்,

    தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர்மாலை அணியப்பட்டு சுடரேற்றி வைக்கப்பட்டது.

    இதனையடுத்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மலரஞ்சலி, தீபாஞ்சலி ஆகியவையும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.

    தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோரின் தமிழீழ விடுதலைப் போராட்டகால பணிகள் பற்றிய காணொளிக் காட்சிப்படுத்துகை, கவிதாஞ்சலி, எழுச்சி நடனம், எழுச்சிப் பாடல்கள், சு.ப.தமிழச்செல்வன் பற்றிய வரலாற்றை நினைவுபடுத்தும் உரை, கருத்துரை என்பனவும் சிறப்பாக இடம்பெற்றன.

    இந்நிகழ்வில் உரையாற்றிய ஆய்தஎழுத்துப் பத்திரிகையின் இணை ஆசிரியர் கனகரவி,

    விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்தவர்களின் வணக்க நிகழ்வுகளைச் செய்வது காலத்தின் தேவையாகும். ஆனால் அந்த நிகழ்வுகளைச் செய்வது மட்டும் தமிழரின் விடுதலைக்கான அரசியல் பணியாகாதென தெரிவித்தார்.

    தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

    தமிழரின் தாயகத்தில் இன்றும் தமிழ்மக்கள் அடக்குமுறைக்குள் தான் உள்ளனர். எனவே போராட்டத்தின் அவசியம் இன்னும் தேவையாகவுள்ளதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    தமிழ்மக்கள் தாங்களாக உணர்ந்து என்றைக்கு ஓரணியில் திரள்கின்றார்களோ அன்று தான் விடுதலைக்கான நல்லதொரு அறிகுறி தென்படும். அடுத்த வணக்க நிகழ்விற்கிடைப்பட்ட அரசியல்ப் பணி என்ன என்பது பற்றி செயற்படுவோர் சிந்திப்பதும். அதனை மக்கள் ஆதரிப்பதும் மட்டுமே போராட்டம் வளர்ச்சியை நோக்கிச் செல்வதாக அமையும்.

    ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் போராட்டம் செய்யப்படவுள்ளதை அறிந்ததும் பேரூந்து வருமோ? என்ற வினாத்தொடுக்காமல் என்று மக்கள் தாங்களாக ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கூடுகின்றனரோ அன்றுதான் தமிழரின் அரசியல் உரிமைப் போராட்டத்தை உலகம் இன்னும் உன்னிப்பாகக் கவனிக்கும்.

    புலத்து வாழ் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தவர்கள் தான் ஆனால் தனிப்பட்ட முன்னேற்றத்திற்குப் பாடுபட்டது போல் விடுதலைப் போராட்டத்திற்காக ஒட்டு மொத்தப் புலத்துவாழ் மக்களும் உழைக்கவில்லை. இந்தக் கசப்பான உண்மையை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    எதிர்காலம்... உழைத்தால் தான் தமிழர் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய நிலமையை தோற்றுவிக்கும். அடுத்தவரைக் கேள்வி கேட்பவர்கள் தாங்கள் விடுதலைக்காக எந்தவகையில் உழைத்திருக்கின்றோம் எனத் தங்களைத் தாங்களே கேட்பது தான் மிகவும் பொருத்தமானதாக அமையும் எனவும் அவரின் உரையில் தெரிவித்தார்.










    http://actressmasaala.blogspot.com



  • http://tamil-friend.blogspot.com

  • [Continue reading...]

    ஏன் இந்த கொல வெறி?

    - 0 comments
     
     
     
    'வொய் திஸ் கொல வெறி' என்ற ஒரே பாடலின் மூலம் பிரபலத்தின் உச்சம் தொட்டிருக்கும் அறிமுக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். அமிதாப் பச்சன், ஆனந்த் மஹிந்திரா தொடங்கி சர்வதேசப் பிரபலங்கள் வரை பலரும் இந்தப் பாட்டுக்குப் பாராட்டுத் தெரிவிக்க, இணையத்தில் காட்டுத் தீயாகப் பற்றி எரிகிறது பாடல்.
    அனிருத்துக்கு வயசு 21. ஆளே ஜீன்ஸ் மாட்டிய கிடார் மாதிரிதான் இருக்கிறார். செம குறும்புப் பையன் என்பது பேசும்போது புரிகிறது. ஜஸ்ட் லைக் தட் ஜெனரேஷன்!
    ''ம்ம்ம்... என் அம்மாகிட்ட கேட்டா, மூணு வயசுலயே ஏதாவது பாட்டு கேட்டா பொம்மை கீ-போர்டில் நானே டியூன் போடுவேன்னு சொல்வாங்க. நாலு வயசுலயே பியானோ கத்துக்கிட்டேனாம். சென்னையில் டிரினிட்டி காலேஜ் ஆஃப் லண்டன் நடத்தும் இசைத் தேர்வுகளில் எல்லா கிரேடும் முடிச்சிட்டேன். பத்ம சேஷாத்ரியில் படிச்சப்போ, கர்னாடிக் மியூஸிக் கத்துக்கிட்டேன். லயோலா கல்லூரியில் பி.காம். படிச்சப்ப, ராக் பேண் டில் இருந்தேன். அதனால், 20 வயசுக்குள்ளேயே ஒரு மாதிரி எல்லாவிதமான இசையிலும் நல்ல அனுபவங்கள் கிடைச்சது. சன் டி.வி. நடத்திய 'ஊலல்லா' மியூஸிக் ஷோவில் ஏ.ஆர்.ரஹ்மான் சார் கையால் 'சிறந்த இசையமைப்பாளர்' விருது வாங்கினேன். அதுதான் செம ஓப்பனிங். ஐஸ்வர்யா மேடத்தோட மாமா பையன் நான். காலேஜ் சமயமே ஐஸ்வர்யா மேடம் எடுத்த 12 குறும்படங்களுக்கும் நான்தான் மியூஸிக் பண்ணேன். அந்த நம்பிக்கையில்தான் '3' படத்துக்கு என்னை மியூஸிக் பண்ணச் சொல்லிட்டாங்க!''
     
    ''ஓ.கே. மேக்கிங் ஆஃப் 'வொய் திஸ் கொல வெறி' சொல்லுங்க?''

    ''அது வந்து... காதல் தோல்வியில் ஒரு பையன் புலம்புறதுதான் சிச்சுவேஷன்னு ஐஸ்வர்யா மேடம் சொன் னாங்க. 100 பசங்கள்ல 90 பசங்க இதை அனுபவிச்சு இருப்போம். ரெண்டு, மூணு நிமிஷத்துக்குள்ளேயே மனசுக்குள்ள ஒரு டியூன் ஓட ஆரம்பிச்சது... சும்மா அப்ப டியே கீ-போர்டில் வாசிச்சேன். ஐஸ்வர்யா மேடத்துக்கு அது ரொம்பப் பிடிச்சுப் போச்சு. உடனே, தனுஷ் சாருக்கு போன்ல சொல்லவும்... அவர் 10 நிமிஷத்துல ஸ்டுடியோ வந்துட்டார். டியூனைக் கேட்டுட்டு, 'வொய் திஸ் கொல வெறிடி'னு பாட ஆரம்பிச்சார். தமிழும் இங்கிலீஷ§ம் கலந்து சிம்பிள் அண்ட் ஸ்வீட்டா இருந்தது. உடனே, வரிகளை அப்படியே டெவலப் பண்ணச் சொன்னோம். 'லவ்வு லவ்வு ஓ மை லவ்வு'னு ஆரம்பிச்சு கடைசி யில 'ஃப்ளாப் ஸாங்'னு முழுப் பாட்டையும் 25 நிமிஷத்துக்குள் முடிச்சிட்டோம். ஜஸ்ட் லைக் தட் பாட ஆரம்பிச்சதால், இப்போ வரை இந்தப் பாட்டுக்குனு லிரிக்ஸ் ஷீட்னு ஒண்ணு இல்லவே இல்லை!''


    ''அது என்ன சூப் ஸாங்?''

    ''லவ்ல மொக்கை வாங்கின பசங்களுக்கு ஏதாவது பேர் வைக்கலாம்னு யோசிச்சப்ப, 'சூப் பாய்ஸ்'னு தனுஷ் சார் வெச்ச பேர் அது!''

    ''தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள் யாராவது பாராட்டினாங்களா?''
    ''இல்லை... இதுவரை இல்லை!''

    ''உங்க ரோல் மாடல் யார்?''

    ''நைன்டீஸ் ஜெனரேஷன் என்பதால், ஏ.ஆர்.ரஹ்மான் சார்தான் என் ரோல் மாடல். இளையராஜா சார் மியூஸிக்கும் ரொம்பப் பிடிக்கும்!''
    ''முதல் பாட்டே செம ஹிட். மத்த பாடல்களுக்கு இந்த எதிர்பார்ப்பே நெகட்டிவ்வா இருக்குமே...''

    ''அந்தப் பதற்றம் கொஞ்சம் இருக்குதான். ஆனா, 'கொல வெறி' மாதிரி இன்னொரு பாட்டு '3' படத்தில் இல்லை. அதனால், நிச்சயம் எல்லாப் பாடல்களுமே ஹிட் ஆகும். படத்தில் அஞ்சு பாடல்களை தனுஷ் எழுதியிருக்கார். ஒரு பாட்டு ஐஸ்வர்யா எழுதி இருக்காங்க. எப்பவும் ஃபாஸ்ட் நம்பர்ஸ் மட்டுமே பாடிட்டு இருந்த ஸ்ருதி மேடம், இதில் ஒரு ஸ்லோ டியூன் பாடி இருக்காங்க. நான் ஒரு பாட்டு பாடி இருக் கேன். டூயட், கிளப் ஸாங், குத்துனு எல்லாப் பாட்டுமே வேற வேற ஸ்டைல். '3' படத்தின் மியூஸிக் தமிழ் மியூஸிக்ல இது வரைக்கும் வராதவை. அது வொர்க்-அவுட் ஆனா, பயங்கர ஹிட் ஆகும். எனக்குனு ஒரு தனி இடம் கிடைக்கும்!''

    நன்றி - விகடன்


     


    [Continue reading...]

    முல்லைப்பெரியாறு காக்க சென்னை மெரினாவில் டிசம்ப��் 25ம் தேதி, கண்ணக��சிலையருகே லட்சம��� தமிழர்களாய் ஒன��று கூடுவோம்

    - 0 comments


    முல்லைப் பெரியாறு காப்பது தமிழரின் கடமை

    முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்பதற்கான அவசியத்தை, தமிழகம் சாராத பிற, இந்திய பகுதி முழுவதும் செய்திகள் விதைக்கப்படுகின்றன. தமிழரின் நியாயம் என்பதாக எதுவும் இல்லாமல் மலையாளிகளின் பயம் மட்டுமே அரசியலாக மையப்படுத்தப்பட்டு கருத்துப் பரப்பல்களும், செய்தி பரப்பல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தமிழர்கள் மீதான தாக்குதல், தமிழ் பெண்கள் மீதான வன்முறைகள் மறைக்கப்பட்டன, மறைக்கப்படுகின்றன. இதை வெளிகொணர்ந்த ஆங்கில ஏடுகளின் பத்திரிக்கையாளர்கள் கூட கடும் நெருக்கடிக்கு உள்ளானதை நாம் அறிவோம்.

    முல்லைப் பெரியாறை உடைப்பதற்கு ஆதரவு தெரிவித்து நீதியரசர் வி.ஆர் கிருட்டின அய்யர் வெளிப்படையாக மனித சங்கிலியில் கலந்து கொண்டது நாம் அறிவோம். இதற்கு பின்னதாக தற்பொழுது அணையை உடைக்க வேண்டும் என்பதற்கு ஆதரவு குரல்கள் இந்திய அளிவில் மலையாளிகள் அல்லாத நபர்களிடமும் வர ஆரம்பித்துள்ளது கவலைக்குறியது. இந்திய அளவில் அறியப்பட்ட சமூக ஆர்வலர்கள் கூட, மேதாபட்கர் உட்பட, இதற்கு ஆதரவு தெரிவித்து பேசுவது தமிழர்கள் தனது நியாயத்தினை தமிழகம் தாண்டி எடுத்துச் செல்வதில் பின் தங்கிவிட்டொம் என்பதை உணர்த்துகிறது. தற்போதய சூழலில் முல்லைப் பெரியாறு என்பது உடைக்கப்பட்டால் கூட அது மிக நியாயமான செயலாகவே பார்க்கப்படும். பாதுகாப்பை கருத்தில் கொண்ட மலையாளிகள் தனது வாழ்க்கையை காக்க உச்ச நீதி மன்றத்தினை பொருட்படுத்தாது தாமாக செயல்பட்ட்து வரவேற்கப்படும். ஏனெனில் மக்கள் பிரச்சனை சார்ந்து பேசக்கூடய ஆங்கில இதழ்களில் கூட மலையாளி மக்களின் நியாயத்தை நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது எனக் கட்டுரைகள் வெளியிட ஆரம்பித்துள்ளன. மேலும் மைய தண்ணீர் நடுவத்தின் கருத்தினை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளும் அவசியம் இல்லை, ஏனெனில இந்த நடுவம் எப்பொழுதும் முழுமையாக-சரியாக இருக்க முடியாது எனும் கருத்தும் விதைக்கப்படுகின்றன.

    முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய பாதுகப்பு படை தேவையில்லை எனும் சூழலை கேரளா உருவாக்கி இருக்கிறது. அதே நேரம் முல்லைப் பெரியாறு பலமுறை மலையாளிகளின் கட்சி தொண்டர்களால் முற்றுகையிடப்பட்டு இருக்கிறது. இந்தப் பிரச்சனையை பற்றி மத்திய அரசு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்பது மட்டுமல்லாமல் அதைப் பற்றிய அக்கறை ஏதும் இருப்பதாக தெரியவில்லை. கிட்ட்தட்ட நரசிம்மராவின் அரசைப் போல தனியார்மயமாக்கும், உலகமையமாக்கும் WTO கொள்கையை நிறைவேற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தி பிற விடயங்களை புறந்தள்ளும் உத்தியை இந்த அரசு மேற்கொள்கிறது.

    இதே தொடர்ச்சியில் மத்திய பாதுகாப்பும் வழங்கப் படவில்லை எனில் முல்லைப் பெரியாறு எவ்வாறு காக்கப்படும். அது இப்பொழுது ஒரு பாபர் மசூதியைப் போல தனித்து பாதுகாப்பற்று நிற்கிறது. பாபர் மசூதிக்கு கிடைத்த மத்தியபாதுகாப்பு கூட இந்த அணைக்கு கிடையாது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அணையை சாதாரண மக்களால் உடைக்க முடியுமா என்றால், அரசு ஆதரவிருந்தால் எதுவும் சாத்தியம் என்பது அரசியல் அறிந்தவர்களுக்கு புரியும். இதற்கு முன்னோட்டமாய் அணையின் நீர்தேக்க உயரம் குறைக்கப்படலாம், அதன் பிறகு படிப்படியாக செயல்கள் நகர்த்தப்படலாம். தற்போதய கோரிக்கை அனையின் மட்டம் குறைப்பது பற்றியே முன்வைக்கப்படுகிறது. எகனாமிக்-பொலிடிக்கல்-வீக்லியில் கிட்ட்தட்ட 13 அறிஞர்கள்-செயல்பாட்டாளர்கள் (மேதாபட்கர் உட்பட) இத்தக உள்ளடக்கத்தோடு பிரதமருக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதி உள்ளனர்.

    பாபர் மசூதியைப் போல முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட்டபின் அந்த அநியாயத்திற்காக யாரும் ஒருவேளை கைது செய்யப்படாமலோ, அல்லது தண்டிக்கப்படாமலோ கூட போகப்படலாம். ஆனால் தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத அளவிற்கு இழப்பு ஏற்படும். முல்லைப்பெரியாறு அணையும் அந்த ஒப்பந்தமும் நியாயமற்றவை என்கிற மாதிரியான கட்டுரைகள் ஒராளாவு நியாயமாக பேசக் கூடியவை என அறியப்பட்ட தெகல்கா, எகனாமிக் பொலிடிக்கல் வீக்லி, ஃப்ரண்ட் லைன் ஆகிய இதழ்களில் மலையாளிகளின் நியாயங்களுடனும் தமிழர்களின் பக்கமான குரலை மறைத்தும் செய்தி வெளியிடுகின்றன. பிரண்ட் லைனில் வைக்கப்பட்டிருக்கும் கட்டுரை தமிழர்கள் முல்லைப் பெரியாறு அணையின் நீருக்கு மாற்றான தண்ணீர் சேமிக்கும் வழிகளை சிந்திக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது. இந்த கட்டுரைகள், இந்த குரல்கள் நமக்கு முல்லைப் பெரியாரை ஒரு உடைக்கப்பட போகும் ஒரு பாபர் மசூதியாக தான் காட்டுகிறது.

    மேலும் முல்லைப் பெரியாற்றினை நாம் இழந்தால் தண்ணீர் பகிர்வு பிரச்சனை இத்தோடு முடிந்து விடக் கூடியதாக இல்லை. இதன் பிறகு பரம்பிக்குளம்- ஆழியாறு அணையில் நீர் பகிர்வு பற்றிய பேச்சு வார்த்தை முடிவு எட்டப்படாத நிலையில் அதிலும் நமது உரிமையை இழக்க நேரிடும். பரம்பிக்குளம்-ஆழியாறு நீர்பகிர்வு ஒப்பந்தம் கிட்ட்தட்ட 1988 வருடமே முடிவுற்ற நிலையில் நீர்பகிர்வு பேச்சுவார்த்தை இதுவரை ஒரு முடிவை எட்டவில்லை. தமிழகம் கேட்கும் நீரை கேரளா அளிப்பதற்கு இதுவரை எந்த முடிவும் சொல்லவில்லை. மேலும் 15 கி.மீ நீளத்திற்கு தண்ணீர் குழாய்கள் அமைக்க தமிழகம் கேட்ட கோரிக்கைக்கும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பதில் சொல்லப்படவில்லை. இதே போல பவானி ஆற்றில் அணைகட்டப்படுவதற்கான கேரள அரசின் முனைப்பும் முல்லைப் பெரியாறை இழந்த பின் நடைபெற ஆரம்பிக்கும். தமிழகத்தின் மேற்கு எல்லையில் தண்ணீர் பிடிப்பு பகுதிகளில் நடைபெறும் இந்த சச்சரவுகள் நமக்கு வெகுவிரைவில் வாழ்வாதார பிரச்சனையாக மாறப் போகிறது. மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்கள் முல்லைப் பெரியாற்று அணை உடைக்கப்பட்டால் பாதிக்கப்படுவது போல பரம்பிக்குளம் ஆழியாறு அணை நீர்பகிர்வும், பவானி ஆற்று பகிர்வும் கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை தண்ணீரற்ற/ வறட்சி பகுதிகளாக மாறும். மேலும் பாலாற்றில் ஆந்திரா கட்டுவதாக சொல்லும் அணை தமிழகத்தின் வட மாவட்டங்களை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும். இதனுடன் கர்நாடகத்தினால் காவேரி மறுக்கப்படுவதும், ஹொகேனக்கல் நீர் பகிர்தலும் தமிழர்களின் நிலையையும், தொழில், விவசாயத்தை முடக்கும். இதே நிலையை நாம் கூடன்குளத்தில் பார்க்கலாம். அங்கே மின் உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும் போது தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க ஆரம்பித்தால், ஏற்கனெவே தனியார்மயமாக செய்யப்பட்டிருக்கும் தாமிரபரணி மேலும் தண்ணீரற்று போகும்.

    இந்தச் சூழலில் முல்லைப் பெரியாறை காப்பது நம் அவசியமாகிறது. முல்லைப் பெரியாறு காப்பு போராட்டம் தேனி-கம்பம்- மதுரை பகுதி மக்கள் சார்ந்த பிரச்சனை மட்டுமன்று இது தமிழகத்தின் பிரச்சனை. இதற்காக தமிழகம் முழுவதும் குரல்கள் எழும்ப வேண்டும். முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசும், இந்திய மக்களும் உணரும் வகையில் சென்னையில் மாபெரும் தமிழர்களின் ஒன்று திரட்டலை வரும் டிசம்பர் 25ம் தேதி மாலை சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறத்தில் நட்த்த மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கிறது. இந்த நிகழ்ச்சி கட்சி, சாதி, மத வேறுபாடுகளை கடந்து தமிழர்கள் தண்ணீர் மீதான தனது உரிமைகளை வலியுறுத்தவும், இந்தப் பிரச்சனையின் பின்புறம் நின்று தமிழர்களின் மீது தாக்குதலை நட்த்தும் தேசிய கட்சிகளான காங்கிரஸ், சி.பி.எம், பாஜக ஆகிய கட்சிகளை கண்டித்தும், தொடர்ச்சியாக தமிழர்களின் மீது போர் தொடுப்பது போல இந்திய அரசு செயல்படுவதை கண்டித்தும் தமிழர்கள் ஒன்று கூட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

    சென்னை மெரினா 25-டிசம்பர் மாலை 3 மணியளவில் கண்ணகி சிலையருகே ஒன்று கூடுவோம்.

    நாம் வெல்வோம்

    மே பதினேழு இயக்கம்.

    9444146806


    http://actressmasaala.blogspot.com



  • http://tamil-friend.blogspot.com

  • [Continue reading...]

    மெருகேறிய அஜீத் !

    - 0 comments
     
     
    அஜித், பார்வதி ஒமணக்குட்டன் நடிப்பில் தயாராகும் படம் ' பில்லா-2'. சக்ரி டொலெட்டி இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை இந்துஜா குழுமத்தின் IN Entertainment நிறுவனம் தயாரிக்கிறது.
     
    இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்தது. 'பில்லா' மற்றும் 'மங்காத்தா' படத்திற்கு கிடைத்த வரவேற்பால், இப்படத்திற்கு அஜித் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
     
    'பில்லா-2' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடித்து படக்குழு ஊர் திரும்பிவிட்டது. இறுதிக் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. அங்கு பனிமலையில் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.
     
    இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள ராஜசேகர் " அஜித்துடன் நான் 'ரெட்' படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். மிக நல்ல மனிதர். அப்போது எப்படி பழகினாரோ இப்போதும் அப்படியே தான் பழகுகிறார். நடிப்பைப் பொருத்தவரை 'ரெட்' படத்தை விட இப்போது நன்றாக மெருகேறி இருக்கிறார். இப்படத்தின் மொத்த காட்சிகளையும் சக்ரி முன்னரே தெளிவாக, தயாராக வைத்திருந்ததால், பட படப்பிடிப்பு வேலைகள் எளிதாக சீக்கிரம் முடிந்தது. " என்று கூறியுள்ளார்.
     
    படத்தின் படத்தொகுப்பு மற்றும் பிற பணிகள் முடித்து, பொங்கலுக்கு டிரெய்லர் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். 'பில்லா-2' 2012 கோடை விடுமுறையின் போது வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    [Continue reading...]

    வடிவேலு சொன்ன குட்டி கதை !

    - 0 comments
     


    மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது பிரச்சினை வரத்தான் செய்யும். பிரச்சினை இல்லாத மனிதன் யாராவது உண்டா? உங்களை எல்லாம் சிரிக்க வைக்கும் எனக்கு சில பிரச்சினைகள் இருக்கு. எந்த நேரமும் சிரிச்சுக்கிட்டே இருந்தா சரியாகுமா? சில நேரம் பிரச்சினையும் வரத்தான் செய்யும். அப்படித்தான் எனக்கும் பிரச்சினை வந்துள்ளது. எனக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வரவில்லை என்று செய்தி வெளியிடுகிறார்கள். நிறைய வாய்ப்புகள் இப்பவும் வரத்தான் செய்கிறது. நான்தான் அந்த வாய்ப்புகளை மறுத்து வருகிறேன்.
    அவர் சொன்ன குட்டி கதை கீழே...

    ஒருத்தர் மருத்துவர்கிட்ட போய், ஐயா எனக்கு தூக்கம் வரல. ரொம்ப மன உளச்சலா இருக்கு மருந்து கொடுங்கன்னு கேட்டாராம். அதுக்கு மருத்துவரோ, சனி, ஞாயிற்றுக்கிழமைன்னா எனக்கும் அப்படித்தான் வருது. இன்னிக்கு சனிக்கிழமை, அதனால நீங்க போயிட்டு திங்கட்கிழமை வாங்க. உங்களுக்கு வைத்தியம் பார்க்கிறேன்னு சொன்னாராம்.

    அவரோ, ஐயா எனக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைலதான் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். மற்ற நாட்களில் எனக்கு வேலை அதிகம். எனக்கு இன்னிக்கு ஏதாவது வைத்தியம் பாருங்கண்ணு சொன்னாராம்.

    சிறிது நேரம் யோசிச்ச மருத்துவர் ஐயா, நான் சனி, ஞாயிற்றுக்கிழமைகள்ல தூக்கம் வராம மன உளைச்சலில் அவதிப்படுகிறதால பக்கத்தில் வாராவாரம் நடக்கிற 'பபுன்' நிகழ்ச்சிக்கு போயி மனம் விட்டு சிரிச்சிட்டு வந்துடுவேன். அப்பத்தான் நிம்மதியாக தூங்க முடியும். இந்த வாரமும் அந்த நிகழ்ச்சிக்குத்தான் கிளம்பிட்டு இருக்கிறேன். எனக்கும், எனது மனைவிக்கும் நுழைவு சீட்டு வாங்கி இருக்கேன். வேணும்னா இன்னிக்கு மனைவியை விட்டு விடுகிறேன். உங்களுக்கு ஒரு சீட்டை தருகிறேன். வாங்க அந்த 'பபுன்' பார்த்துட்டு வந்தாலே கவலை எல்லாம் பறந்து போயிடும்னு சொன்னாராம்.

    அப்போ இடைமறித்த அவரோ, ஐயா நான் தாங்க அந்த 'பபுன்' என்றாராம். மருத்துவர் அதிர்ந்து போய் பார்த்தாராம். அந்த 'பபுன்' நிலைதாங்க என்னோட நிலையும் என்றார் வடிவேலு.
    பாவம் யாரு பெத்த புள்ளையோ தனியா புலம்பிகிட்டு இருக்கு :-)

    [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger