அஜித், பார்வதி ஒமணக்குட்டன் நடிப்பில் தயாராகும் படம் ' பில்லா-2'. சக்ரி டொலெட்டி இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை இந்துஜா குழுமத்தின் IN Entertainment நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்தது. 'பில்லா' மற்றும் 'மங்காத்தா' படத்திற்கு கிடைத்த வரவேற்பால், இப்படத்திற்கு அஜித் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
'பில்லா-2' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடித்து படக்குழு ஊர் திரும்பிவிட்டது. இறுதிக் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. அங்கு பனிமலையில் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.
இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள ராஜசேகர் " அஜித்துடன் நான் 'ரெட்' படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். மிக நல்ல மனிதர். அப்போது எப்படி பழகினாரோ இப்போதும் அப்படியே தான் பழகுகிறார். நடிப்பைப் பொருத்தவரை 'ரெட்' படத்தை விட இப்போது நன்றாக மெருகேறி இருக்கிறார். இப்படத்தின் மொத்த காட்சிகளையும் சக்ரி முன்னரே தெளிவாக, தயாராக வைத்திருந்ததால், பட படப்பிடிப்பு வேலைகள் எளிதாக சீக்கிரம் முடிந்தது. " என்று கூறியுள்ளார்.
படத்தின் படத்தொகுப்பு மற்றும் பிற பணிகள் முடித்து, பொங்கலுக்கு டிரெய்லர் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். 'பில்லா-2' 2012 கோடை விடுமுறையின் போது வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?