Wednesday, 15 February 2012

தமிழக அரசின் நலத்திட்ட உதவி சான்றிதழ்களுக்கான விண்ணப்ப படிவங்கள் டவுன்லோடிங் !

- 0 comments
 
 
பல்வேறு காரியங்களுக்காக அரசு சான்றிதழ் பெற நாம் அரசிடம் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது .அவ்வாறு விண்ணப்பிப்பதற்காக விண்ணப்பப் படிவங்களை இணைய தளம் மூலமாக தரவிறக்கம் செய்து பயன் படுத்திக்கொள்ளலாம் .
 
இங்கே வெவ்வேறு சான்றிதல்களுக்கான விண்ணப்பப் படிவங்கள் பெற லிங்க் கொடுக்கப் பட்டுள்ளது .தேவைப் படுவோர் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
[Continue reading...]

அடுத்த படத்தில் பிகினியில் தோன்றுவாரா த்ரிஷா?

- 0 comments
 


நடிகை த்ரிஷா தமிழில் நடித்த மங்காத்தா படத்தின் வெற்றிக்கு அடுத்து பாடிகார்ட் என்ற தெலுங்கு படத்தில் வெங்கடேஷ் ஜோடியாக நடித்து வருகிறார். தெலுங்கு படங்களில் பிஸியானதால் தமிழ்த் திரைத்துறை பக்கம் வராமலிருந்தார்.



த்ரிஷாவிற்கு வயதாகிவிட்டதால் இளம் நடிகர்கள் நடிக்க மறுக்கிறார்கள் எனவும், ஒரு படத்தில் பிகினி உடையில் நடிக்க கூடுதலாக 25 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டார் எனவும் செய்திகள் பரவி வந்தன.


இதை பற்றி ஐதராபாத்தில் த்ரிஷா அளித்த பேட்டியில் "எனக்கு வயதாகிவிட்டது என்று கூறுபவர்கள் பாடிகார்ட் படம் பாருங்கள். சில வருடங்களுக்கு முன் நடித்த "வர்ஷம்" படத்தில் எப்படி இருந்தேனோ அப்படியே தான் இந்த படத்திலும் இருக்கிறேன். சரி வயதானால் மட்டும் என்ன? ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவி போன்றவர்கள் வயதான பின்பும் திறமையாக நடிக்கவில்லையா. நடிப்பிற்கும் வயதிற்கும் சம்பந்தமே இல்லை. எனக்கு 29 வயது தான் ஆகிறது. சினிமா துறையில் நீடித்திருக்க இந்த வயதே போதும்.


நான் பிகினி உடையில் நடிக்க 25லட்சம் ரூபாய் கூடுதல் சம்பளம் கேட்டதாக சொல்கிறீர்கள், நான் ஏன் பிகினி உடையில் நடிக்க வேண்டும். எனக்கென்று சில கோட்பாடுகள் உள்ளன அதன்படி தான் நடித்துக்கொண்டிருக்கிறேன்.


தமிழ், மளையாளம் மொழிகளில் வெளிவந்துள்ள பாடிகார்ட் படத்தின் ஹீரோயின்களான அசின் மற்றும் நயன்தாரா போல, தெலுங்கு பாடிகார்ட் படத்தில் நடிக்க நான் முயற்சி செய்வதாக பேசப்படுகிறது. எனக்கென்று ஒரு தனி பாணி அமைத்து நடிக்கும் போதே நான் தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முண்ணனி நடிகையாக இருக்கிறேன். நான் ஏன் மற்றவர்களைப் போல் நடிக்க வேண்டும்.

நான் இந்தி பட உலகிற்கு போகப் போகிறேன் என்பது எல்லாம் வெறும் வதந்தி. எனக்கு பிடித்தது சென்னை தான்" என்று கூறினார்.
[Continue reading...]

கல்லா கட்டும் தோனி - திரை விமர்சனம்!

- 0 comments
 
 
 
மனைவியை இழந்து மகன், மகளோடு பட்ஜெட் வாழ்க்கை நடத்தும் பிரகாஷ்ராஜ், ரிஜிஸ்தர் ஆபீஸ் கிளர்க். சம்பளம் போதாமல் ஊறுகாய் வியாபாரம், கடன் என்று காலம் கழிக்கிறார். அவருக்கு, மகன் எம்பிஏ படித்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பது கனவு. ஆனால், மகனுக்கு கிரிக்கெட்டராக வேண்டும் என்பது லட்சியம். படிப்பு வரவில்லை. கோபத்தின் உச்சத்துக்கு செல்லும் பிரகாஷ்ராஜ், மகனை வேகமாக அடிக்க, தலையில் காயமடைந்து கோமா நிலைக்குச் செல்கிறான். பிறகு மகனை, தான் அடிக்கவில்லை, இந்த சமூகம், கல்வி முறை அடிக்க வைத்தது என்பதை உணர்கிறார். தனிமனிதனாக தன் மகனை காப்பாற்றவும், கல்விமுறையை மாற்றவும் போராடுகிறார். அதில் வெற்றி பெற்றாரா என்பது கதை.



காய்கறிகாரரிடம் பேரம் பேசி பொருள் வாங்குவதும், ஆபீஸ் வேலையாக போகும்போது சொந்த வேலையையும் சேர்த்து செய்வதும், பார்க்கிறவர்களிடமெல்லாம் ஊறுகாய் விற்பதுமாக சராசரி மனிதனாக வாழ்ந்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். மகனுக்காக அவன் படிக்கும் பள்ளியில் கெஞ்சிக்கூத்தாடுவதும், அவனுக்காக ஆசிரியர்களிடம் கெஞ்சி டியூசன் சேர்ப்பதும், அப்படியும் படிக்காத மகனை விரக்தியில் அடிப்பதுமாக, பக்கத்து வீட்டு மனிதர்களை பிரதிபலிக்கிறார். பிரகாஷ்ராஜுக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார் மாஸ்டர் ஆகாஷ். 'எனக்கு மேக்ஸ் வரலைப்பா. கிரிக்கெட்தான் பிடிக்குது' என்று கெஞ்சும்போதும், கிரிக்கெட் புள்ளி விவரங்களை அள்ளி வீசும்போதும் அபாரம்.


அபார்ட்மென்டில் இருந்து கொண்டு பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக ராதிகா ஆப்தே. 'புருஷன் ஓடிட்டான். ரெண்டு குழந்தைங்க. வயதான அப்பா அம்மா. எனக்கு வேற வழி தெரியல' என்று தன் கேரக்டருக்கு விளக்கம் கொடுப்பதும் அதுவரை வெறுத்து வந்த பிரகாஷ்ராஜ் அவளின் மனிதாபிமானத்தை நினைத்து உருகும் காட்சியும் நெகிழ வைக்கிறது. 'ஒரு கிளாஸ்ல, 40 புள்ளைங்க இருந்தா, அதுல 10 பேர் நல்லா படிப்பாங்க. மீதி 30 புள்ளைங்களும் மக்குன்னு எப்படி முடிவு பண்ணுறீங்க? அவங்ககிட்ட வேற ஏதோ திறமை இருக்கு. அதை கண்டுபிடிக்கணும், பெத்தவங்க, பள்ளி, அரசாங்கம் கண்டுபிடிக்கணும்'- என்பது உட்பட படம் முழுக்கத் தெறிக்கும் வசனங்கள் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது. பிரம்மச்சாரி ரிஜிஸ்தார் பிரம்மானந்தம், பிரகாஷ்ராஜ் மகள் ஸ்ரீஜிதா, கோச் நாசர் என அனைவருமே தங்கள் பங்கை சரியாகச் செய்கிறார்கள்.


இளையராஜாவின் இசை கதையின் வலுவையும், காட்சியின் வலியையும் உணர வைக்கிறது. கே.வி.குகனின் ஒளிப்பதிவு கச்சிதம். சமுதாயத்துக்கு தேவையான கருத்தோடு இயக்குனர் பயணத்தை துவக்கி இருக்கும் பிரகாஷ் ராஜின் முயற்சி பாராட்டுக்குரியது. டி.வி நிகழ்ச்சியிலேயே பிரகாஷ்ராஜ் ஹீரோவாவது, கிளைமாக்சில் முதல்வரை சந்திக்க எடுக்கும் முயற்சி, கந்துவட்டிகாரன் நெகிழ்ந்து திருந்துவது எல்லாமே டிராமா ஸ்டைல். இப்படி குறைகள் இருந்தாலும் படத்தின் நோக்கம் உயர்வானது.
[Continue reading...]

ஆஞ்சநேயனுடன் 2வது திருமணத்திற்கு அனன்யா சம்மதம்...?

- 0 comments
 

ஆஞ்சநேயனுடனான 2வது திருமணத்தில் அனன்யாவுக்கு விருப்பம் இருப்பதாகவும், ஆனால் அனன்யாவின் பெற்றோருக்குத் தான் இதில் விருப்பம் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகை அனன்யாவுக்கும், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஆஞ்சநேயன் என்பவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயம் நடந்தது. இந்நிலையில் ஆஞ்சநேயனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து முடிந்து விட்டதாகவும், அதை மறைத்து தமது மகளை திருமணம் செய்ய முயன்றதாகவும், ஆஞ்சநேயன் மீது அனன்யாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே ஆஞ்சநேயனுக்கு, 2வது மனைவியாக வர அனன்யா சம்மதம் தெரிவித்து தான் நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நிச்சயதார்த்தத்திற்கு முன்பே தனக்கு திருமணம் ஆனது பற்றியும், விவாகரத்துக்கு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருப்பது பற்றியும் அனன்யாவிடம், ஆஞ்ச‌நேயன் தெரிவித்ததாகவும், ஆனால் அனன்யா தான் அவரின் பெற்றோரிடம் இதை சொல்லாமல் மறைத்து விட்டதாகவும், இப்போது இந்த விஷயம் அவர்களுக்கு தெரிய வர திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்பிரச்னை தொடர்பாக அனன்யா வீட்டை வெளியேறாமல் இருக்க வீட்டிலேயே அடைத்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒருபக்கம் அனன்யாவை ஏமாற்றி 2வது திருமணம் செய்ய முயற்சித்ததாக ஆஞ்சநேயன் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மற்றொருபுறம் அனன்யாவுக்கு தெரிந்து தான் இந்த திருமணம் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி இருதரப்பட்ட கருத்துக்கள் மாறி மாறி நிலவுவதால், இந்த விஷயத்தில் எது உண்மை, எது பொய் என்பதை அனன்யா ஒருவரே விளக்கி கூற வேண்டும்.
[Continue reading...]

இரண்டான் தாரமாக வாழ அனன்யா ரெடி?

- 0 comments
 
 
தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்தும் அவருக்கு 2வது மனைவியாக அனன்யா தயாராக இருப்பதாகவும், ஆனால் அவரது பெற்றோர் எதிர்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை அன்னயாவுக்கும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு ஆஞ்சநேயனுக்கு கடந்த 2008ம் ஆண்டே வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அன்னயாவின் தந்தை பெரும்பாவூர் போலீசில் புகார் கொடுத்தார். இந்நிலையில் ஆஞ்சநேயனின் 2வது மனைவியாக அனன்யா தயாராக இருப்பதாகக் கூறப்படுகின்றது.



மேலும் ஆஞ்சநேயன் தனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது என்றும், முதல் மனைவியை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அனன்யாவிடம் முன்பே கூறிவிட்டாராம். ஆனால் அனன்யா தனது பெற்றோரிடம் இந்த விவரத்தைத் தெரிவிக்காமல் மறைத்துவிட்டாராம்.

2வது மனைவியாக அவர் தயாராக இருந்தாலும் அவரது பெற்றோர்கள் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும், இதனால் அவரை வீட்டில் பூட்டி வைத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
[Continue reading...]

பிரச்சினைகள் தீர்க்கப்படாத வரை பிரபாகரன்கள் தோன்றிக் கொண்டே இருப்பர்!

- 0 comments
 
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனின் மரணச் செய்தி குறித்து இந்தியாவின் ஊடகங்கள் வெளியிட்டு இருந்த கருத்துக்கள் மற்றும் அவதானங்கள் மிகவும் சுவாரஷியமானவை.
 
இப்பத்திரிகைகள் பிரபாகரனின் மரணம் தொடர்பாக அந்நாட்களில் பிரசுரித்து இருந்த விடயங்களை டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் தொகுத்து 2009 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைத்து இருக்கின்றது.
 
குறிப்பாக தினமணி தமிழ் பத்திரிகை, பிரஜாவாணி கன்னடப் பத்திரிகை ஆகியவை வெளியிட்டு இருந்த கருத்துக்கள் மற்றும் அவதானங்கள் மிகவும் முக்கியமானவையாக உள்ளன.
 
இலங்கைத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றிக் கொடுக்கப்படுதல் வேண்டும், இது நிறைவேறாத வரை ஒவ்வொரு தமிழ் பெண்ணின் கருப்பையிலும் பிரபாகரன்கள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள் என்று தினமணி எழுதி உள்ளது.
 
புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டமையுடன் தமிழர் பிரச்சினைகள் தீர்ந்து விடவில்லை என்பதை இலங்கை அரசு உணர்தல் வேண்டும், தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படாத வரை இன்னும் பல பிரபாகரன்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள் என்று பிரஜாவாணி எழுதி உள்ளது.
[Continue reading...]

விஜய் யை போல உத்டோடு உதடு முத்தமிட மாட்டேன் இலியானாவின் அதிரடி அறிவிப்பு

- 0 comments
 

மீண்டும் தமிழ் பங்களில் நடிக்க நோ சொ்ன இலியானா இப்போது தெலுங்கிலும் சீன் போட ஆரம்பித்து விட்டாராம்.. நண்பனில் வருவது போன்ற முத்த காட்சி ஒன்று வேண்டுமென கேட்ட இயக்குனருக்கு நண்பன் ஒரு பிரம்மாண்மா படம் அந்த கதைக்கு தேவைப்பட்டது போல முத்தமி்டேன் அதை வி்ட உங்கள் சின்ன பஜ்ஜெட் படங்களுக்கு கவர்ச்சிக்காக என்னால் முத்தமிட முடியாது. த்ரீ இடியட்ஸ் போலநண்பனும் பெரிய்ய ஹிட் நான் இப்போது தமிழிலும் முன்னணியில் இருக்கிறேன். தெலுங்கு சினிமாவில் சம்பளத்தை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறேன். என கூறினாராம்.

நெத்தலி கருவாடு போல இருக்கும் இந்த பொண்ணுக்கு இவ்வளவு சீன் கூடுாது என உதவி இயக்குனர்கள் தமக்குள் பேசிக்கொண்டனராம்...!
 
[Continue reading...]

சினேகா, பிரசன்னாவின் காதலர் தின போஸ்

- 0 comments
 
 
சினேகாவும் பிரசன்னாவும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். இருவரும் 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் இணைந்து நடித்தபோது, காதல் வயப்பட்டனர். திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து காதலை பிரசன்னா சமீபத்தில் வெளிப்படையாக அறிவித்தார்.

விரைவில் இருவீட்டினரும் கலந்து பேசி திருமண தேதியை முடிவு செய்வார்கள் என்றும் கூறினார். சினேகா தற்போது முரட்டுக்காளை, விடியல், ஹரிதாஸ் போன்ற தமிழ் படங்களிலும் ஜோஸட்டன்டே ஹீரோ என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். இவற்றின் படப்பிடிப்பு ஓரிரு மாதங்களில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு சினேகா விரும்பினால் சினிமாவில் தொடர்ந்து நடிக்கலாம். தடைபோடமாட்டேன் என்று பிரசன்னா கூறினார். சினேகாவிடம் இது குறித்து கேட்டபோது, திருமணத்துக்கு பின் சினிமாவில் நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.

இந்த நிலையில் சினேகாவும் பிரசன்னாவும் காதலர் தினத்தையொட்டி சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டனர். கைகோர்த்தும் நெருக்கமாக நின்றும் விதம் விதமாக போட்டோ எடுத்தார்கள். வடக்கில் இருந்து வெளியா கும் பத்திரிகையொன்று இதற்கான ஏற்பாட்டை செய்து இருந்தது. காதலர் தினத்தையொட்டி இப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
[Continue reading...]

என் மனைவியுடன் குற்றப்பிரிவு எஸ்.ஐ. தொடர்பு – வாய்பேச முடியாத கணவர் புகார்

- 0 comments
 

மதுரை, செல்லூர் குற்றப்பிரிவு எஸ்.ஐ., பெருமாள் ராஜ், 55, தன் மனைவியுடன் தொடர்பு வைத்துள்ளதாக, தென்மண்டல ஐ.ஜி., ராஜேஷ்தாசிடம், வாய்பேச முடியாத கணவர் புகார் செய்தார்.செல்லூர் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் துரை. மெக்கானிக்கான இவர், வாய்பேச முடியாதவர். நேற்று வக்கீல் நீலமேகத்துடன், ஐ.ஜி.,யிடம் புகார் அளித்தார்.

புகாரில், மனைவி காளீஸ்வரியுடன், 2009 முதல் எஸ்.ஐ., பெருமாள்ராஜ் சுற்றிக் கொண்டுள்ளார். தட்டி கேட்டபோது தாக்கப்பட்டேன். எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரிக்கும்படி, சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் திருநாவுக்கரசுக்கு ஐ.ஜி., உத்தரவிட்டார்.

எஸ்.ஐ., பெருமாள்ராஜ் கூறுகையில், "கஷ்டப்படுகிறார்களே என உதவி செய்தது எனக்கு வினையாக மாறியுள்ளது. என் மீதான புகாரில் உண்மையில்லை," என்றார்.

காளீஸ்வரி கூறுகையில், "என் கணவருக்கு தெரிந்துதான் எஸ்.ஐ., உதவி செய்கிறார். குடும்பம் நடத்த சம்பளம் தராதது குறித்து கணவரிடம் கேட்டபோது என்னை அடித்தார். இந்நிலையில், என்னையும், எஸ்.ஐ.,யையும் தொடர்படுத்தி புகார் கூறியுள்ளார்," என்றார்.

[Continue reading...]

சிகிச்சைக்காக மொட்டை புதிய தோற்றத்தில் யுவராஜ் சிங்!(வீடியோ,போட்டோ )

- 0 comments
 
 


அமெரிக்காவில் நுரையீரல் கட்டிக்காக சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான யுவராஜ்சிங் தாம் நலமுடன் இருப்பதாக சமூக வலைதளமான டுவிட்டரிப் பதிவு செய்திருக்கிறார்.

மேலும் தலைமுடி இல்லாத தற்போதைய தோற்றத்தை வெளிப்படுத்தும் புகைப்படத்தையும் டுவிட்டரில் யுவராஜ்சிங் வெளியிட்டுள்ளார்.

டுவிட்டரில்" கடைசியாக முடிதான் போச்சு! நான் நல்லா இருக்கேன்! யுவ்வலுவாக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் யுவராஜ்சிங் தற்போது பாஸ்டன் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு டுவிட்டரில், தாம் முன்னைவிட வலுவாக திரும்பி களத்துக்கு வருவேன். ஏனெனில் என்னுடைய நாடே எனக்காக பிரார்த்திக்கிறது! என்னுடைய தனிமையை மதித்து ஆதரித்து வரும் ஊடகங்களுக்கும் நன்றி என்று குறிப்பிட்டிருந்தார்.

30 வயதாகும் யுவராஜ்சிங் இதுவரை 37 டெஸ்ட் போட்டிகலில் விளையாடி 1775 ரன்களைக் குவித்துள்ளார்.
274 ஒருநாள் போட்டிகளில் ஆடி 8051 ரன்களை எடுத்துள்ளார்.

கடந்த உலகக் கோப்பை போட்டியில் மிக அபாரமாக ஆடியவர் யுவராஜ்சிங்.

யுவராஜுக்கு முதலில் நுரையீரல் புற்றுநோய் என்று சொல்லப்பட்டது. பின்னர் அவரது மருத்துவர்கள் நுரையீரலில் கட்டிதான் அது புற்றுநோய் அல்ல என விளக்கம் அளித்திருந்தனர்.







[Continue reading...]

காதலனின் ஜீன்ஸை கட்டிலில் உருவும் போது மகளை திடீரென எட்டிப்பார்த்த அம்மா - ஹாட் வீடியோ.

- 0 comments
 
 
 
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger