ஆஞ்சநேயனுடனான 2வது திருமணத்தில் அனன்யாவுக்கு விருப்பம் இருப்பதாகவும், ஆனால் அனன்யாவின் பெற்றோருக்குத் தான் இதில் விருப்பம் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகை அனன்யாவுக்கும், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஆஞ்சநேயன் என்பவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயம் நடந்தது. இந்நிலையில் ஆஞ்சநேயனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து முடிந்து விட்டதாகவும், அதை மறைத்து தமது மகளை திருமணம் செய்ய முயன்றதாகவும், ஆஞ்சநேயன் மீது அனன்யாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே ஆஞ்சநேயனுக்கு, 2வது மனைவியாக வர அனன்யா சம்மதம் தெரிவித்து தான் நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நிச்சயதார்த்தத்திற்கு முன்பே தனக்கு திருமணம் ஆனது பற்றியும், விவாகரத்துக்கு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருப்பது பற்றியும் அனன்யாவிடம், ஆஞ்சநேயன் தெரிவித்ததாகவும், ஆனால் அனன்யா தான் அவரின் பெற்றோரிடம் இதை சொல்லாமல் மறைத்து விட்டதாகவும், இப்போது இந்த விஷயம் அவர்களுக்கு தெரிய வர திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்பிரச்னை தொடர்பாக அனன்யா வீட்டை வெளியேறாமல் இருக்க வீட்டிலேயே அடைத்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒருபக்கம் அனன்யாவை ஏமாற்றி 2வது திருமணம் செய்ய முயற்சித்ததாக ஆஞ்சநேயன் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மற்றொருபுறம் அனன்யாவுக்கு தெரிந்து தான் இந்த திருமணம் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி இருதரப்பட்ட கருத்துக்கள் மாறி மாறி நிலவுவதால், இந்த விஷயத்தில் எது உண்மை, எது பொய் என்பதை அனன்யா ஒருவரே விளக்கி கூற வேண்டும்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?