நடிகை த்ரிஷா தமிழில் நடித்த மங்காத்தா படத்தின் வெற்றிக்கு அடுத்து பாடிகார்ட் என்ற தெலுங்கு படத்தில் வெங்கடேஷ் ஜோடியாக நடித்து வருகிறார். தெலுங்கு படங்களில் பிஸியானதால் தமிழ்த் திரைத்துறை பக்கம் வராமலிருந்தார்.
த்ரிஷாவிற்கு வயதாகிவிட்டதால் இளம் நடிகர்கள் நடிக்க மறுக்கிறார்கள் எனவும், ஒரு படத்தில் பிகினி உடையில் நடிக்க கூடுதலாக 25 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டார் எனவும் செய்திகள் பரவி வந்தன.
இதை பற்றி ஐதராபாத்தில் த்ரிஷா அளித்த பேட்டியில் "எனக்கு வயதாகிவிட்டது என்று கூறுபவர்கள் பாடிகார்ட் படம் பாருங்கள். சில வருடங்களுக்கு முன் நடித்த "வர்ஷம்" படத்தில் எப்படி இருந்தேனோ அப்படியே தான் இந்த படத்திலும் இருக்கிறேன். சரி வயதானால் மட்டும் என்ன? ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவி போன்றவர்கள் வயதான பின்பும் திறமையாக நடிக்கவில்லையா. நடிப்பிற்கும் வயதிற்கும் சம்பந்தமே இல்லை. எனக்கு 29 வயது தான் ஆகிறது. சினிமா துறையில் நீடித்திருக்க இந்த வயதே போதும்.
நான் பிகினி உடையில் நடிக்க 25லட்சம் ரூபாய் கூடுதல் சம்பளம் கேட்டதாக சொல்கிறீர்கள், நான் ஏன் பிகினி உடையில் நடிக்க வேண்டும். எனக்கென்று சில கோட்பாடுகள் உள்ளன அதன்படி தான் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
தமிழ், மளையாளம் மொழிகளில் வெளிவந்துள்ள பாடிகார்ட் படத்தின் ஹீரோயின்களான அசின் மற்றும் நயன்தாரா போல, தெலுங்கு பாடிகார்ட் படத்தில் நடிக்க நான் முயற்சி செய்வதாக பேசப்படுகிறது. எனக்கென்று ஒரு தனி பாணி அமைத்து நடிக்கும் போதே நான் தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முண்ணனி நடிகையாக இருக்கிறேன். நான் ஏன் மற்றவர்களைப் போல் நடிக்க வேண்டும்.
நான் இந்தி பட உலகிற்கு போகப் போகிறேன் என்பது எல்லாம் வெறும் வதந்தி. எனக்கு பிடித்தது சென்னை தான்" என்று கூறினார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?