மதுரை, செல்லூர் குற்றப்பிரிவு எஸ்.ஐ., பெருமாள் ராஜ், 55, தன் மனைவியுடன் தொடர்பு வைத்துள்ளதாக, தென்மண்டல ஐ.ஜி., ராஜேஷ்தாசிடம், வாய்பேச முடியாத கணவர் புகார் செய்தார்.செல்லூர் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் துரை. மெக்கானிக்கான இவர், வாய்பேச முடியாதவர். நேற்று வக்கீல் நீலமேகத்துடன், ஐ.ஜி.,யிடம் புகார் அளித்தார்.
புகாரில், மனைவி காளீஸ்வரியுடன், 2009 முதல் எஸ்.ஐ., பெருமாள்ராஜ் சுற்றிக் கொண்டுள்ளார். தட்டி கேட்டபோது தாக்கப்பட்டேன். எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரிக்கும்படி, சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் திருநாவுக்கரசுக்கு ஐ.ஜி., உத்தரவிட்டார்.
எஸ்.ஐ., பெருமாள்ராஜ் கூறுகையில், "கஷ்டப்படுகிறார்களே என உதவி செய்தது எனக்கு வினையாக மாறியுள்ளது. என் மீதான புகாரில் உண்மையில்லை," என்றார்.
காளீஸ்வரி கூறுகையில், "என் கணவருக்கு தெரிந்துதான் எஸ்.ஐ., உதவி செய்கிறார். குடும்பம் நடத்த சம்பளம் தராதது குறித்து கணவரிடம் கேட்டபோது என்னை அடித்தார். இந்நிலையில், என்னையும், எஸ்.ஐ.,யையும் தொடர்படுத்தி புகார் கூறியுள்ளார்," என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?