Tuesday, 21 February 2012

லஞ்ச, ஊழல் ஒழிய என்ன வழி அப்துல் கலாம் யோசனை

- 0 comments
 
 
 
லஞ்ச ஊழல் ஒழிப்பு, அவரவர் வீட்டிலிருந்தே துவங்க வேண்டும்; குழந்தைகள், பெற்றோரிடம் இதை வலியுறுத்த வேண்டும்'' என, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பேசினார்.
 
கோவை, காளப்பட்டியில் உள்ள டாக்டர் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லூரியில், டாக்டர் அப்துல் கலாம் பங்கேற்ற, சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் சுவாமிநாதன், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் கருணாகரன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தர் முருகேச பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கோவை மெடிக்கல் சென்டர் அண்ட் ஹாஸ்பிட்டல் (கே.எம்.சி.எச்.,) மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் தவமணி வரவேற்றார். கே.எம்.சி.எச்., சேர்மன் டாக்டர் நல்லா ஜி. பழனிச்சாமி தலைமை வகித்தார்.
 
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பேசியதாவது:
 
மாணவர்கள், வாழ்க்கையில் மூன்று பேரை, முக்கியமாக பின்பற்ற வேண்டும். தாய், தந்தை மற்றும் ஆரம்பக் கல்வி அளிக்கும் ஆசிரியர். தாய், தந்தையர், ஒழுக்கத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர், ஒழுக்கத்தைப் போதிப்பவராக இருக்க வேண்டும். அறிவே, மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம். அறிவால், எதையும் ஆக்கவும் முடியும்; அழிக்கவும் முடியும். என்னாவாக விரும்புகிறோம் என நினைக்கிறோமோ, அதை அடையும் வல்லமை படைத்தது. தடைகளை எல்லாம், உடைக்கக்கூடிய ஆற்றல் பெற்றது, அறிவு.இந்தியா ஆற்றல் மிகுந்த நாடாக மாற வேண்டும் என்றால், கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் குறைய வேண்டும். தூய்மையான குடிநீர், சரிசம மின்சக்தி கிடைக்க வேண்டும். இந்தியாவை மாற்ற, அனைவரும் உழைக்க வேண்டும். விவசாயம், தொழில்களை ஒருங்கிணைத்து மேம்படுத்த வேண்டும். சமூக, பொருளாதார மாற்றங்களை உருவாக்க அனைவரும் உழைக்க வேண்டும். வறுமை, நோய் இல்லாத கிராமங்கள் உருவாக வேண்டும்.ஒவ்வொரு மாணவருக்கும் தலைமைப் பண்பு அவசியம். தொழில் நுட்பங்கள் நிறைந்த உலகில், சுகாதாரம் மிகவும் அவசியம். அறிவு சார்ந்த சமுதாயம் உருவாக வேண்டும்.இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.
 
மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, அப்துல் கலாம் பேசியதாவது:
 
நாட்டில் லஞ்ச ஊழலை ஒழிக்க, ஒவ்வொரு மாணவரும், ஒவ்வொரு குழந்தைகளும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் தந்தை, ஊழல் செய்பவராக இருந்தால், அவரிடம் குழந்தைகள் அன்பாக பேசி, அவரது தவறை உணர்த்த வேண்டும். ஆசிரியர்கள் சொல்லும் கருத்துகளையும், சமுதாயத்தில் ஊழல் செய்வோரின் நிலையையும் எடுத்துக் கூற வேண்டும். ஊழல் செய்து வரும் பணத்தை வாங்க மறுத்தாலே, ஒரு குடும்பத்தில் யாரும் ஊழல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வராது. 40 கோடி மாணவர்கள் உள்ள இந்த நாட்டில், இவ்வாறு அனைவரும் கூறினாலே, பெருமளவு லஞ்ச ஊழல் மறைந்து விடும்.இவ்வாறு அப்துல் கலாம் பதிலளித்தார்.



[Continue reading...]

குடிக்க பணம் தராததால் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன்!

- 0 comments
 

மது குடிக்க பணம் தராத மனைவியை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், ஆரணியை அடுத்த ஏ.என்.குப்பம் அணைக்கட்டு அருகே தனியார் செங்கல் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது. அங்கு ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த 450 குடும்பத்தினர் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர்.

இதில் ஒரிசாவின் பெலாங்கீர் மாவட்டம், கோன்கூடாவைச் சேர்ந்த சதா ராணா(35) தனது குடும்பத்துடன் கடந்த 2 மாதங்களாக செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். இவருடன் மனைவி புஷ்பா(32), மகன்கள் ஜெயந்து(7), ஸ்ரீவன்து(3), மாமியார் சுபிதா(60) ஆகியோர் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் குடிப்பழக்கமுள்ள சதா குடிப்பதற்காக பணம் கேட்டு மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் வார சம்பளத்தை பெற்ற அவர் அதில் பெரும் பகுதியை குடித்தே தீர்த்ததாகக் கூறப்படுகின்றது.

இதனால் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று அதிகாலை 3 மணி வரை நீடித்த வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த அவர் அருகில் கிடந்த கோடாரியால் புஷ்பாவின் சரமாரியாக வெட்டினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு, அவரது தாய் சுபிதா மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் ரத்த வெள்ளத்தில் சரிந்த புஷ்பா உயிரழந்தார். அதற்குள் ராணா அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த போந்தவாக்கம் கிராம நிர்வாக அதிகாரி செல்வராஜ், ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், ஆரணி சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, தட்சணாமூர்த்தி, ஏகாம்பரம் மற்றும் போலீசார் புஷ்பாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள சதா ராணாவை தேடி வருகின்றனர். ஏற்கனவே அவர் மீது மனைவியை கொடுமைப்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

[Continue reading...]

தமிழில் கவர்ச்சிதான் கைகொடுக்கும் – சுனிதா வர்மா

- 0 comments
 

நடிகைகளுக்கு கவர்ச்சிதான் கைகொடுக்கும் என்று சுனிதா வர்மா கூறினார். மேலும் அவர் கூறியதாவது: தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறேன்.தெலுங்கில் பெரும்பாலும் கவர்சியால் படங்கள் தயாராவதால் கவர்ச்சி தவிர்க்க முடியாதது. மலையாளத்தில் கதையம்சமுள்ள படத்துக்கு திறமைதான் முக்கியம்.

அது இருந்தால்தான் மலையாளத்தில் ஜெயிக்க முடியும். தமிழில் ஜெயிக்க இந்த இரண்டும் முக்கியம். அதை சரியாக புரிந்து கொள்ளாததால்தான் தமிழில் உரிய இடத்தை என்னால் பிடிக்க முடியவில்லை. கவர்ச்சிதான் கைகொடுக்கும் என்பது இப்போது புரிந்திருக்கிறது.

[Continue reading...]

கடத்தப்பட்ட மாணவி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

- 0 comments
 

பொகவந்தலாவை பிரதேசத்தில் வைத்து இன்று (21) காலையில் கடத்தப்பட்ட ஹொலிரொசரி கல்லூரியில் தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தேயிலை மலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை 7.00 மணியளவில் முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த இனந்தெரியாத குழுவினரே இந்த மாணவியைக் கடத்திச் சென்றிருந்தனர்.சிறிது நேரத்தின் பின்னர் செப்பல்டன் தேயிலைத் தோட்டத்தின் வழியே வந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் பாடசாலைச் சீருடையுடன் மாணவி ஒருவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் தேயிலைச் செடிகளுக்கு மத்தியில் இருப்பதைக் கண்டு தகவல் கொடுத்துள்ளார்.

இதன் பின்னர் கல்லூரி மூலம் பொகவந்தலாவை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மாணவியை மீட்டுச் சென்றுள்ளனர். மாணவி மயக்க நிலையில் இருந்ததாகக் குறிப்பிடும் ஆசிரியர் ஒருவர், கடத்திச் சென்றவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களையும் மாணவியிடமிருந்து பெற முடியாதுள்ளதாக தெரிவித்தார்.
பொகவந்தலாவை செப்பல்டன் தோட்டத்தைச் சேர்ந்த மேற்படி மாணவி இன்று வழமை போல கல்லூரிக்கு வந்துள்ளார். இதன் போது குறித்த மாணவி வரும் வழியில் ஆட்டோ ஒன்றில் வந்த சிலர் இவரை வழிமறித்து ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளனர்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger