பொகவந்தலாவை பிரதேசத்தில் வைத்து இன்று (21) காலையில் கடத்தப்பட்ட ஹொலிரொசரி கல்லூரியில் தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தேயிலை மலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை 7.00 மணியளவில் முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த இனந்தெரியாத குழுவினரே இந்த மாணவியைக் கடத்திச் சென்றிருந்தனர்.சிறிது நேரத்தின் பின்னர் செப்பல்டன் தேயிலைத் தோட்டத்தின் வழியே வந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் பாடசாலைச் சீருடையுடன் மாணவி ஒருவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் தேயிலைச் செடிகளுக்கு மத்தியில் இருப்பதைக் கண்டு தகவல் கொடுத்துள்ளார்.
இதன் பின்னர் கல்லூரி மூலம் பொகவந்தலாவை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மாணவியை மீட்டுச் சென்றுள்ளனர். மாணவி மயக்க நிலையில் இருந்ததாகக் குறிப்பிடும் ஆசிரியர் ஒருவர், கடத்திச் சென்றவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களையும் மாணவியிடமிருந்து பெற முடியாதுள்ளதாக தெரிவித்தார்.
பொகவந்தலாவை செப்பல்டன் தோட்டத்தைச் சேர்ந்த மேற்படி மாணவி இன்று வழமை போல கல்லூரிக்கு வந்துள்ளார். இதன் போது குறித்த மாணவி வரும் வழியில் ஆட்டோ ஒன்றில் வந்த சிலர் இவரை வழிமறித்து ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?