Tuesday, 20 March 2012

மத்திய அரசையோ, தி.மு.கவையோ மன்னிக்க முடியாது – வைகோ தெரிவிப்பு!

- 0 comments

ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகச் செயலை மறைகவே மத்திய அரசு சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க முன்வந்துள்ளது. எனினும் மத்திய அரசையோ, அதில் அங்கம் வகிக்கும் தி.மு.கவையோ மன்னிக்க முடியாது என ம.தி.மு.க. பொதுச்யெலாளர் வை.கோ தெரிவித்துள்ளார்.ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தை மறைப்பதற்காகவே ஐ.நா. சபையின் மனிதவுரிமை பேரவைக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆதரிக்க முன்வந்துள்ளது. இது சந்தர்ப்பவாதம்.

சிறிலங்கா போர்க்குற்றவாளி என்றால், இந்தியா, அந்தப் போர் குற்றத்துக்கு உதவியாக இருந்துள்ளது. எனவே, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசையும், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்த தி..க.வுக்கும் இதில் பங்கு உண்டு. எனவே அவர்கள் தற்போது சிறிலங்காவை எதிர்த்தாலும் அவர்களை மன்னிக்க முடியாது. என்றார்.

ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது, உண்ணாவிரதம் என்று கூறினார்களே தவிர, மத்திய ஆட்சியில் இருந்து இராஜினாமா செய்கிறோம் என்பது போன்ற எந்த முடிவையும் எடுக்காமல் தி.மு.க. சுய நலத்துடன் நடந்து கொண்டதாக சுட்டிகாட்டிய வை.கோ,

சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் இவ்விவகாரத்தில் முழு பரிகாரமாக அமையும் என்று, தான் நம்பவில்லை என்றார்.

[Continue reading...]

முத்து மாமா ...,,,

- 0 comments
 













முந்திரி தோப்பில்
முந்தானைய இழுத்த
என் முத்து மாமா
உன் முத்து சிரிப்பில்
முற்றும் தொலைத்தேன்
என் செல்ல மாமா

உன் அக்கா மகள்
என் அன்பு உனக்குத்தான்
முத்து மாமா
நீ கள்ள தனமாய்
கண்டு ரசிப்பது ஏன்
என் தங்க மாமா

கோயில் குளம்
வேண்டி நிக்கிறேன்
என் முத்து மாமா
நீ வேண்டாதனம்
செய்ய துடிப்பதேன்
என் கண்ணு மாமா

ஜாதி சனம் முன்
உன் தாலிக்காய் தலை குனிவேன்
என் முத்துமாமா
நீ தன்னந்தனியாய்
நின்னு தவிப்பதேன்
என் சின்ன மாமா

வைகாசி மாசம்
பந்தல் போடணும்
என் முத்து மாமா
நீ வேலி அடைத்து
வெள்ளாமை தொடங்கு
என் ஆசை மாமா

ஆடி மாசம்
அம்மா கூப்பிடுவா
என் முத்து மாமா
நீ அங்கே இங்கே நின்னு முழிப்ப
என் அழகு மாமா

நம்ம பேரு விளங்க
பிள்ளைகள் வளரும்
என் முத்து மாமா
நம்ம காலம் முழுவதும்
இன்ப கதை சொல்லுவோம்
என் வீர மாமா

~அன்புடன் யசோதா காந்த் ~
[Continue reading...]

ஐயோ... எல்லாம் போச்சே? சீரியசான வீடியோ இணைப்பு

- 0 comments
 
 

இந்த வீடியோவில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்ற நபர் இப்படித்தான் கத்துவார். ஆம், இரண்டு பேர் வித்தியாசமாக ஏதோ உடற்பயிற்சி செய்கின்றார்கள்.
 
அதில் ஒருவர் அவசரப்பட்டு திட்டமிடாமல் குதித்தான் விளைவு தான் இது..
 
அப்படிக் குதிக்கும் போது தடி ஒன்று மேல் எழும்பி மற்றையவரின் ஆண்குறியைத் தாக்கியுள்ளது.
 
உடனே அவர் கத்திக் கொண்டு கீழே விழுவதைத் தான் நீங்கள் பார்க்கின்றீர்கள்.
 
அவர் நிஜமாகவே எழும்பி நடக்க எவ்வளவு காலம் ஆகுமோ தெரியலையே?
[Continue reading...]

இலங்கைக்கு எதிராக இந்திய வாக்களிக்கும் - மன்மோகன் சிங்

- 0 comments


இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து பிரதமர் கூறுகையில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கையில் நடந்த மனித உரி்மைகள் மீறல் போர்க்குற்றம் குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது கவலைகளை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களது கவலையில் நானும் பங்கேற்கிறேன் பகிர்ந்து கொள்கிறேன்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு நடவடிக்கைளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. அதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம்.

அமெரிக்கா ஆதரவில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து முழுமையாகத் தெரியவில்லை. அதை அறிந்து கொண்ட பின்னர் அதை ஆதரித்து வாக்களிப்போம். இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க இந்தியாவும் முனைப்புடன் உள்ளது என்றார்.

பிரதமரின் இந்த அறிவிப்பை திமுக எம்.பிக்கள் மேசைகளைத் தட்டி வரவேற்றனர். அதேசமயம் அதிமுக எம்.பி. தம்பித்துரை எழுந்து பிரமதரின் பதில் நேரடியாக இல்லை என்று கண்டித்துப் பேசினார். இதனால் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.
[Continue reading...]

இலங்கைக்கு இந்தியா அனுப்பியுள்ள இரகசிய கடிதம்

- 0 comments
 

இலங்கை அரசாங்கம் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல் தீர்வு ஒன்றை எவ்வாறு நடைமுறைப்படுத்தவுள்ளது என்பது தொடர்பாக விளக்கமளிக்குமாறு, இலங்கை அரசாங்கத்தை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இரகசிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்திய நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியை அடுத்தே, இலங்கையிடம் இந்தியா இது பற்றி விளக்கம் கோரியுள்ளது. எனினும், இந்தக் கடித்தத்துக்கு இலங்கைஉடனடியாகவே பதில் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவிடம், இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல்தீர்வு ஒன்றைக் காண்பதில் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger