Tuesday, 20 March 2012

இலங்கைக்கு இந்தியா அனுப்பியுள்ள இரகசிய கடிதம்

 

இலங்கை அரசாங்கம் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல் தீர்வு ஒன்றை எவ்வாறு நடைமுறைப்படுத்தவுள்ளது என்பது தொடர்பாக விளக்கமளிக்குமாறு, இலங்கை அரசாங்கத்தை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இரகசிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்திய நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியை அடுத்தே, இலங்கையிடம் இந்தியா இது பற்றி விளக்கம் கோரியுள்ளது. எனினும், இந்தக் கடித்தத்துக்கு இலங்கைஉடனடியாகவே பதில் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவிடம், இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல்தீர்வு ஒன்றைக் காண்பதில் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger