Showing posts with label சேலம். Show all posts
Showing posts with label சேலம். Show all posts

Thursday, 1 August 2013

சேலத்தில் பாரதீய ஜனதா பிரமுகர் வெட்டிக் கொலை

- 0 comments
சேலம் கன்னங்குறிச்சி 6–வது வார்டு பகுதியில் உள்ள சின்ன மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 47). பாரதீய ஜனதா கட்சியில் மாவட்ட விவசாய அணி தலைவராக உள்ள இவர் கட்சி நடத்தும் அனைத்து கூட்டங்களிலும், போராட்டங்களிலும் ஆர்வமாக கலந்து கொள்வார்.
இவர் கன்னங்குறிச்சி காந்தி சிலை அருகே கறிக்கடையும் வைத்து உள்ளார். இவருக்கு சொந்தமான நிலம் கன்னங்குறிச்சி புது ஏரிக்கரை அருகே உள்ளது. இன்று காலை 11 மணிக்கு முருகன் தன்னுடைய நிலத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது 10 பேர்கொண்ட கும்பல் அங்கு வந்து அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி விட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் சேலம் அரசு மோகன்குமார மங்கலம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து போனார்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger