சேலம் கன்னங்குறிச்சி 6–வது வார்டு பகுதியில் உள்ள சின்ன மாரியம்மன்
கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 47). பாரதீய ஜனதா கட்சியில்
மாவட்ட விவசாய அணி தலைவராக உள்ள இவர் கட்சி நடத்தும் அனைத்து
கூட்டங்களிலும், போராட்டங்களிலும் ஆர்வமாக கலந்து கொள்வார்.
இவர் கன்னங்குறிச்சி காந்தி சிலை அருகே கறிக்கடையும் வைத்து உள்ளார். இவருக்கு சொந்தமான நிலம் கன்னங்குறிச்சி புது ஏரிக்கரை அருகே உள்ளது. இன்று காலை 11 மணிக்கு முருகன் தன்னுடைய நிலத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது 10 பேர்கொண்ட கும்பல் அங்கு வந்து அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி விட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் சேலம் அரசு மோகன்குமார மங்கலம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து போனார்.
இந்தக் கொலை குறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
அரசியல் ரீதியாக இந்தக் கொலை நடக்கவில்லை என்றும், நிலத்தகராறில் இந்தக்கொலை நடந்து உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
முருகனுக்கும் வேறு சிலருக்கும் இடையே நிலத் தகராறு இருந்தது. இதனால் ஏறபட்ட முன்விரோதத்தில் அவரை பின் தொடர்ந்து வந்த அந்தக்கும்பல் இன்று சமயம் பார்த்து அவரை வெட்டிக்கொன்று விட்டதாக போலீசார் தெரிவித்தனர். முருகனை வெட்டும் போது அதை முருகனின் உறவினர் கணேசன் (65), அவரது மகன் சீனிவாசன் (25), ஆகியோர் தடுத்தனர். அவர்களுக்கும் வெட்டு விழுந்தது. இது போல முருகன் தரப்பினர் வெட்டியதில் எதிர்தரப்பைச் சேர்ந்த ஆறுமுகம் (55), ஜெயராமன் (38) ஆகியோரும் காயம் அடைந்தனர். இந்த 4பேரும் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
முருகனை கொன்ற கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் கொலை காரணமாக கன்னங்குறிச்சி பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
முருகன் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் கன்னங்குறிச்சி பேரூராட்சி தலைவர் குபேந்திரன் மற்றும் தி.மு.க., பாரதீய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
சேலத்தில் பாரதீய ஜனதா பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த 19–ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து இன்று சேலம் 3 ரோடு ஜவகர் திடலில் நடைபெறும் இரங்கல் கூட்டத்தில் அத்வானி கலந்து கொள்கிறார். அவர் கொலை செய்யப்பட்டு குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இன்று பாரதீய ஜனதா பிரமுகர் முருகன் கொலை செய்யப்பட்டு உள்ளது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை செய்யப்பட்ட முருகனின் தந்தை மகாலிங்கமும் கறிக்கடை வைத்து உள்ளார். முருகனின் மனைவி பெயர் பாக்கியலட்சுமி (40). இவர்களுக்கு சதீஷ் என்ற மகனும், சண்முகப்பிரியா என்ற மகளும் உள்ளனர்.

0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?