ஒருதலை காதலில் கல்லூரி மாணவியை கோடாரியால் வெட்டிய டெல்லி மாணவன் விஷம் குடித்து தற்கொலை
புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக் கழகத்தில் படிக்கும் ஆகாஷ்(23) என்ற மாணவர் ரோஷினி(22) என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.அவரது காதலை ரோஷினி ஏற்றுக்கொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆகாஷ் நேற்று காலை 11 மணியளவில் ரோஷினியை வெறித் தனமாக கோடாரியால் வெட்டினார்.
படுகாயமடைந்த ரோஷினி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதை கண்ட ஆகாஷ் விஷத்தை குடித்துவிட்டு கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார்.
இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் ஆகாஷிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, கோடாரி, கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ரோஷினியையும் ஆகாஷையும் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி ஆகாஷ் உயிரிழந்தார். ரோஷினியின் உடல்நிலை தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?