பேச்சிப்பாறையில் படகுசவாரி காளிகேசத்தில் மலையேற்றம் ₹ 500 கட்டணத்தில் குமரி காடுகளை ரசிக்கலாம்
******************************
நாகர்கோவில், ஜன.3:
குமரியில் வனத்துறை சார்பில் எக்கோ டூரிசம் திட்டம் வருகிற மார்ச் மாதம் முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
கேரளா மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வனத்துறை மற்றும் மலைவாழ் மக்கள் இணைந்து எக்கோ டூரிசம் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அந்தந்த பகுதிகளில் வரும் சுற்றுலா பயணிகள் அந்த பகுதிகளின் சிறப்பை அறிந்து கொள்வதுடன், அவர்களை கவரும் வகையில் தேவையான வசதிகளை செய்து தருவது, பாரம்பரிய உணவு வழங்குவது, அருவிகள் பராமரிப்பு, மலைப் பாதையில் நடை பயணம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள், அரசு நிர்ணயம் செய்த கட்டணத்துடன் வழங்கப்பட்டு வருகின்றன.
இயற்கை வளங்களும் 14 வகையான வனப்பகுதிகளை கொண்ட குமரியிலும் எக்கோ டூரிசம் தொடங்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகளும் எக்கோ டூரிசம் குறித்து திட்டங்களை உருவாக்க தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பி இருந்தனர். தற்போது அதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
வருகிற மார்ச் மாதம் முதல் இத்திட்டத்தை செயல்படுத்தும் வகை யில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி அழகியபாண்டியபுரம் வனச்சரக அலுவலகத்திலிருந்து காலை யில் வாகனம் கிளம்பும். இவ்வாகனத் தில் 22 பேர் பய ணம் செய்ய லாம். முதலில் உலக்கை அருவிக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு குளியலை முடித்து விட்டு காளிகேசத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
அங்கு மலைப்பாதையில் மலையேற்ற பயிற்சி, குளியல் முடித்து விட்டு மதிய உணவு வழங்கப்படுகிறது. இதில் காணி இனமக்களின் பாரம்பரிய உணவுகளான கப்பக்கிழங்கு, காந்தாரி மிளகாய் துவையல், மீன், இறைச்சி, சிகப்பு அரிசி சாதம் போன் றவை வழங்கப்படுகிறது. பின்னர் பேச்சிப்பாறை ஜீரோ பாயின்ட் அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கு பேச்சிப்பாறை அணையில் படகு சவாரி மற்றும் அணையில் உள்ள சிறு தீவுகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். சிறு தீவு களில் சிற் றுண்டி வழங்கப்படும். பின்னர் மீண்டும் அழகியபாண்டியபுரம் திரும்ப அழைத்து வரப்படுகின்றனர்.
இதே போல் ஜீரோ பாய்ன்டிலிருந்தும் 22 பேர் படகுசவாரி, ஐலேன்ட் விசிட் முடித்து விட்டு காளிகேசம் & உலக்கைஅருவி வந்து விட்டு மீண்டும் ஜீரோ பாயின்ட் அழைத்து செல்லப்படுவார்கள். இதற்கு கட்டணமாக
₹ 500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி வனத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, குமரி வனப்பகுதியை பற்றி அறியும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு நபருக்கு ₹500 கட்டணம் ஆகும். இதில் வாகன செலவு, சிற்றுண்டி மற்றும் மதிய உணவு, படகுசவாரி உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அடங்கும். அதிகாலையில் கிளம்பும் அந்த பயணம் நிறைவு பெற இரவு ஆகிவிடும். வாரத்திற்கு இரு நாட்கள் இந்த பயணம் இருக்கும். இதற்கான வரவேற்பு மற்றும் சூழலை பொறுத்து தினசரி இந்த சுற்றுலா செயல்படுத்தப்படும் என்றனர்.
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago