நயன்தாராவை நான் காதலிக்கவே இல்லைங்க.. வீட்ல பொண்ணு பாக்கிறாங்க!
– ஆர்யா
by abtamil
.. - Tamil newsToday,
சென்னை: நயன்தாராவை நான் காதலிக்கவே இல்லை. வீட்டில் எனக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார். நயன்தாராவும், ஆர்யாவும் காதலிப்பதாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கிசுகிசுக்கள் வருகின்றன. இருவரும் நடித்த முதல் படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இப்போது ராஜாராணி படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். நயன்தாராவுடன் இணைத்து தொடர்ந்து வெளியாகும் கிசுகிசுக்களுக்கு ஆர்யா அளித்துள்ள விளக்கத்தில், "ரொம்ப நாளா என்னையும் நயன்தாராவையும் இணைச்சி கிசுகிசுக்கள் வந்துக்கிட்டிருக்கு. குறிப்பா நயன்தாராவுக்கும், எனக்கும் திருமணம் என ராஜா ராணிக்காக அழைப்பிதல் வெளியிட்டதில் இருந்து எங்களை இணைத்து வதந்திகள் அதிகமாக பரவி வருகின்றன.
கணவன் – மனைவியாக ராஜா ராணி படத்தில் நாங்கள் கணவன்-மனைவியாக நடிக்கிறோம். எனவே படத்தை விளம்பரப்படுத்த அழைப்பிதழ் அச்சிட்டு வெளியிடுவது என முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து நயன்தாராவிடம் பேசி அவரது அனுமதியும் பெற்றுத்தான் அழைப்பிதழ் வெளியிட்டோம்.
நயன்கோபமாக இருக்கிறார் என்று வெளியான செய்திகளில் உண்மை இல்லை. நயன்தாரா என்னுடன் நடித்த சக நடிகை. அந்த வகையில் எனக்கு அவருடன் தொடர்பு உள்ளது. எங்களுக்குள் இருப்பது நட்புதான். அதை தாண்டி எந்த உறவும் இல்லை.
வீட்டில் பெண் பார்க்கிறார்கள் எனக்கு திருமணத்துக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள். அவர்கள் பார்க்கும் பெண் எனக்கு பிடித்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன்.
6 ஆண்டுகள் காதலித்தேன் பள்ளியில் படித்த போது ஒரு பெண்ணை காதலித்தேன். ஆறு வருடம் இந்த காதல் இருந்தது. படிப்பு முடிந்து வெளியே போனதும் அது மறந்து போய்விட்டது.
ராஜா ராணி ராஜா ராணி படம் தமிழ் கலாசாரத்துக்கு எதிரானது என்பதில் உண்மை இல்லை. தமிழ் பண்பாட்டை அவமதிக்கும் காட்சிகள் எதுவும் கிடையாது. ஜாலியான காமெடி படமாக இருக்கும்.
இரட்டை கதாநாயகர்கள் படம் இரு கதாநாயகர்களை உள்ளடக்கிய கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. உள்ளம் கேட்குமே படத்தில் இருந்து இரண்டு ஹீரோ படங்களில் நடித்து வருகிறேன். திறமையான இயக்குநர் அமைந்தால் அது போன்ற படங்களில் தாராளமாக நடிக்கலாம்.
அஜீத்துடன் அஜீத்துடன் ஆரம்பம் படத்தில் நடிக்கிறேன். அவருடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
பாலா படத்திலிருந்து நீக்கமா? பாலா எடுக்கும் புதிய படத்தில் இருந்து என்னை நீக்கி விட்டதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. அவர் என்னை அணுகவே இல்லை. ஏற்கனவே இரண்டு படங்களில் என்னை நடிக்க வைத்ததே பெரிய விஷயம்.
Show commentsOpen link