நந்தம்பாக்கத்தில் இளம்பெண் எரித்து கொலை young girl murder in nandambakkam
Tamil NewsToday,
ஆலந்தூர், செப். 28–
பரங்கிமலையை அடுத்த நந்தம்பாக்கத்தில் மத்திய அரசின் நிறுவனமான 'ஐ.டி.பி.எல்.' குடியிருப்பு உள்ளது. நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் காவலாளி ரோந்து சென்றபோது குடியிருப்பு அருகே உள்ள முட்புதரில் கிணற்றின் அருகே தீ எரிந்து கொண்டிருந்தது.
அருகில் சென்று பார்த்த போது நிர்வாண நிலையில் இளம்பெண் உடல் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து நந்தம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பெண்ணின் உடல் முழுவதும் எரிந்து கரிக் கட்டையாக கிடந்தது. நகை எதுவும் இல்லை. அவருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.
உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை பிணம் கிடந்த முட்புதர் பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு கிடந்த கையுறை ஒன்றை கைப்பற்றினர். அது கொலையாளி பயன்படுத்தியதாக இருக்கலாம் என்று தெரிகிறது.
பெண் எரிக்கப்பட்ட இடம் ஆட்கள் நடமாட்டம் இல்லாத முட்புதர் நிறைந்த பகுதி ஆகும். எனவே விபசார அழகியை யாரேனும் அழைத்து வந்து உல்லாசம் அனுபவித்து விட்டு எரித்து கொன்று இருக்கலாம் என்று போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
பிணமாக கிடந்தவர் உடலில் நகை எதுவும் இல்லாததால் நகைக்காக அவரை மர்ம கும்பல் கடத்தி வந்து எரித்து கொன்றனரா? அல்லது கள்ளக்காதல் விவகாரமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.
நந்தம்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மாயமான இளம்பெண்கள் குறித்த பட்டியலை சேகரித்து விசாரிக்கின்றனர். மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு அருகே இளம் பெண் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?