தொட்டு பார்க்க முயற்சித்த ரசிகர்! கோபத்தோடு வெளியேறினார்!ஐஸ்வர்யா!
by abtamil
- Tamil newsToday,
லூதியானாவில் நகைக்கடை திறப்பு விழாவிற்கு வந்த ஐஸ்வர்யாவை தொட்டுப் பார்க்கும் ஆசையில் ரசிகர்கள் மொய்த்த காரணத்தால் தடுமாறி விழப்போனார் ஐஸ்வர்யா. இதனால் கோபம் கொண்டு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பைக்கூட கேன்சல் செய்து விட்டு வெளியேறினார் ஐஸ்வர்யா.
உலக அழகியாக தேர்வான பின்னர் சினிமாவில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். திருமணத்திற்கு பின்னரும் கவர்ச்சியாகவும், பிற நடிகர்களுடன் நெருக்கமாகவும் நடித்தவர் ஐஸ்வர்யா. ஆனால் குழந்தை பிறந்த பின்னர் சினிமாவில் நடிக்கவில்லை. மாறாக விளம்பரப்படங்களில் நடித்துவருகிறார்.
பிரபல நகைக்கடையில் பிராண்ட் அம்பாசிடராக உள்ள ஐஸ்வர்யாராய் கடை திறப்பு விழாவில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்றார்.
ஐஸ்வர்யா ராய் வருவது தெரிந்ததும் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். ஐஸ்வர்யாராய் அந்த இடத்துக்கு வந்தததும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. செல்போனில் போட்டோ எடுக்க முண்டியடித்தனர்.
தற்போது ஐஸ்வர்யாராய் முன்னை விட பொலிவாக இருக்கிறார் என்று ரசிகர்களிடையே பேச்சு நிலவுகிறது. இதனால் சிலர் ஆர்வத்தில் ரசிகர்கள் ஐஸ்வர்யாவை தொட்டுப்பார்க்க அவர் மீது பாய்ந்தார்கள்.
இதனை எதிர்பார்க்காத ஐஸ்வர்யா தடுமாறி கீழே விழ இருந்தார். அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை தாங்கிப்பிடித்தனர்.
கோபம் அடைந்த ஐஸ்வர்யாராய் அங்கு ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு புறப்பட்டார்.
அந்த நிலையிலும் ஒரு நிருபர் ஐஸ்வர்யா முன்பு மைக்கை நீட்டவே, 'லுதியானாவுக்கு முதன்முறையாக வருகிறேன். ரசிகர்களின் அன்பு என் மீது பொங்கி வழிகிறது என்று கோபமாக பதில் அளித்தபடி காரில் ஏறி பறந்தார்
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?