Saturday, 28 September 2013

ஆரணி அருகே 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராட்டம் Girl near Arni 300 feet fell down well firefighters struggle to recover

ஆரணி அருகே 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராட்டம் Girl near Arni 300 feet fell down well firefighters struggle to recover

Tamil NewsToday,

ஆரணி, செப்.28-

ஆரணி அடுத்த புலவன்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. கடந்த 2 மாதத்துக்கு முன்பு இங்கு ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. 300 அடி ஆழம் தோண்டியும் தண்ணீர் வரவில்லை. இதனால் குழாய் கிணற்றை சாக்கு பை கட்டி மூடியிருந்தனர். இவர்களது பக்கத்து நிலத்துகாரர் பழனி.

இவரது மனைவி மலர்கொடி பழனி தனது நிலத்துக்கு பயிரிப்பட்டு இருந்த மணிலாவை பறிப்பதற்காக தனது மனைவி மற்றும் 4 வயது மகள் தேவியுடன் இன்று காலை 7 மணிக்கு நிலத்துக்கு வந்தார். சிறுமி தேவி சங்கர் நிலம் அருகே விளையாடி கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு சாக்கு பையால் மூடிவைக்கப்பட்டு இருந்த 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழந்தார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடிவந்தனர். மகள் குழாய் கிணற்றில் தவறி விழந்ததை கண்டு கதறி அழுதனர்.

இதுகுறித்து களம்பூர் ஆரணி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சிறுமி 30 அடி ஆழத்தில் உயிருடன் உள்ளார். அவரை உயிருடன் மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஆழ்துளை கிணறு பக்கவாட்டில் ஜேசிபி எந்திரம் மூலம் தோண்டும் பணி நடந்து வருகிறது.மேலும் களம்பூர் ஆரணி போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சிறுமியுடன் குழாய் ஒலிபெருக்கி மூலம் பேசினர். சிறுமி தற்போது நலமாக உள்ளார்.

சிறுமியை உயிருடன் மீட்கும் வகையில் குழாய் கிணற்றுக்குள் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டு சிறுமி சுவாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை கேள்விபட்டதும் அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் பதட்டத்துடன் கூடியுள்ளனர்.
...
Show commentsOpen link

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger