Thursday, 1 May 2014

கத்தி படப்பிடிப்பில் 27வது பிறந்த நாளை கொண்டாடினார் சமந்தா!

- 0 comments


தென்னிந்தியாவில் மிகவும் பிசியான, காஸ்ட்லியான நடிகைகளில் ஒருவர் சமந்தா. தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக அஞ்சான் படத்திலும், விஜய்க்கு ஜோடியாக கத்தி படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கில் 4 படங்களில் நான்கு பெரிய ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

சென்னையில் நடந்து வரும் கத்தி படப்பிடிப்பில் நேற்று (ஏப்ரல் 28) தனது 27வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். ஹீரோ விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் கருணாமூர்த்தி ஆகியோர் சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். யூனிட்டில் உள்ள அனைவருக்கும் சமந்தா கேக் வழங்கினார்.

மாஸ்கோவின் காவிரி என்ற சிறிய படத்தில் அறிமுகமானவர் சமந்தா. அந்த படம் வந்ததும் தெரியாது போனதும் தெரியாது, அதன் பிறகு முரளி மகன் அதர்வா அறிமுகமான பாணா காத்தாடி படத்தில் நடித்தார், அந்தப்படமும் சரியாக போகவில்லை. விண்ணைத்தாண்டி வருவாயாவின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த பிறகு சமந்தாவின் வாழ்க்கையே திசை மாறியது. கடந்த 4 ஆண்டுகளில் மளமளவென வளர்ந்து உயரத்தில் நிற்கிறார். சித்தார்த்துடன் காதல் என்ற விவகாரம் தவிர்த்து சமந்தா சமத்தான பிள்ளையாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.
[Continue reading...]

சிம்புவைத் தொடர்ந்து சித்துவுடன் காதலா? ஹன்சிகாவை டென்சன் செய்த கேள்வி!!

- 0 comments


இப்போதுதான் சிம்புடனான காதல் பிரச்னையில் இருந்து விடுபட்டு, தமிழ், தெலுங்கில் அதிகப்படியான படங்களை கைப்பற்றி மீணடும் விட்டஇடத்தை பிடித்திருக்கிறார் ஹன்சிகா. அதனால், சில காலம் சரியான திட்டமிடல் என்பது இல்லாமல் கால்சீட் சொதப்பல் நடிகை என்ற பெயரையும எடுத்தார். ஆனால் இப்போது, தன் மீது யாரும் குற்றம் குறை சொல்லக்கூடாது என்று ரொம்ப கவனமாக கால்சீட் கொடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா.

இந்த நேரத்தில், உயிரின் உயிரே படத்தின் நாயகனான நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்துவுடன் ஹன்சிகாவுக்கு காதல் மலர்ந்திருப்பதாக கடந்த சில தினங்களாக மீடியாக்களில் புதிய செய்தி பத்திக்கொண்டது. அதையடுத்து சில மீடியாவினர், இது விசயமாக ஹன்சிகாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, எரியுற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல், கோபத்தில் குபீரென்று கொளுந்து விட்டு எரிந்தாராம்.

இப்பதான் காதலே வேண்டாம், நமக்கெல்லாம் அது சரிப்பட்டு வராதுன்னு கட் பண்ணிவிட்டுட்டு நிற்கிறேன். அதற்குள்ள அடுத்த காதலா? சான்சே இல்லை. தயவு செய்து என்னை விட்டுருங்க. இது விசயமாக மேலும் என்கிட்ட ஏதாச்சும் பேசி டென்சன் பண்ணாதீங்க. இன்னும் இரண்டு வருசத்துக்கு நான் சினிமாவுல ரொம்ப பிஸி என்று கடகடவென்று சொல்லி தனது பேச்சையும் முடித்துக்கொண்டாராம் ஹன்சிகா.
[Continue reading...]

விஜய்யுடனும் விரைவில் நடிப்பேன்!- நயன்தாரா நம்பிக்கை

- 0 comments


அனாமிகாவைத் தொடர்ந்து சிம்புவுக்கு ஜோடியாக இது நம்ம ஆளு, ஜெயம் ரவிக்கு ஜோடியாக தனி ஒருவன் படங்களில் நடித்து வரும் நயன்தாரா, அடுத்தபடியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிப்பது தற்போது உறுதியாகியிருக்கிறது. ஏற்கனவே சூர்யாவுடன் கஜினி, ஆதவன் படங்களில் நடித்த நயன்தாரா இந்த வாய்ப்பினால் உற்சாகத்தில் இருக்கிறார்.

காரணம், ரீ-என்ட்ரியில் முதல் படத்திலேயே அஜீத்துடன் ஆரம்பம் படத்தில் நடித்த நயன்தாரா, அதையடுத்து ஆர்யாவுடன் ராஜாராணியில் நடித்தார். ஆனால் அதையடுத்து கஹானி ரீமேக்கான அனாமிகாவில் டைட்டீல் ரோலில் நடித்தார். ஆக, அவரது ரீ-என்ட்ரி நல்ல அமோகமாகவே இருக்கிறது. இதற்கிடையே தற்போது சிம்பு, ஜெயம்ரவி படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே சூர்யாவுடன் நடிக்க கமிட்டாகி விட்டார்.

இதனால், செகண்ட் இன்னிங்சில் நான் நினைத்து பார்க்காத நல்ல விசயங்களாக நடக்கிறது என்று உற்சாகத்துடன் கூறிவரும் நயன்தாரா, இப்போது சூர்யாவுடனும் மீண்டும் ஜோடி சேர்ந்து விட்ட நான், முதல் ரவுண்டில் நடித்த விஜய்யுடன்தான் இன்னும் ஜோடி சேரவில்லை. ஆனால் அதற்கான காலமும் விரைவில் கனியும் என்று எதிர்பார்க்கிறேன். அது விஜய் நடிக்கும் அடுத்த படமோ இல்லை அதற்கடுத்த படமாகக்கூட இருக்கலாம் என்று தனக்குத்தானே ஆரூடம் சொல்லிக்கொண்டு திரிகிறார் நயன்தாரா.
[Continue reading...]

இப்போது பீல் பண்ணுகிறார் வடிவேலு!

- 0 comments
[vadivelu+girl.jpg]

அரசியல் சுனாமியில் சிக்கி சிதைந்து போன வடிவேலு, சினிமாவில் மறுபிரவேசத்திற்கு தயாரானபோது, அவரை வைத்து ஏற்கனவே இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தை இயக்கிய சிம்புதேவனும் அப்படத்தின் 2ஆம் பாகத்தை இயக்குவதற்காக முந்தைய கதையின் தொடர்ச்சியாக இன்னொரு கதையை சொன்னார்.

ஆனால், அவர் சொன்ன கதை பிடித்தபோதும், மீண்டும் சிம்புதேவனின் இயக்கத்தில் நடித்தால் பழைய சாயல் வந்து விடும் என்று கருதிய வடிவேலு, யுவராஜ் சொன்ன தெனாலிராமன் கதையில் நடிக்க முடிவெடுத்தார். ஆனால், ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு வெளியான அப்படம் இப்போது பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.

விளைவு, சிம்புதேவன் கதை நன்றாக இருந்தது. நான்தான் கடைசி நேரத்தில் யுவராஜ் பக்கம் சாய்ந்து விட்டேன் என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார் வடிவேலு. இந்நிலையில், மறுபடியும் சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசைப்படுகிறாராம். ஆனால், சிம்புதேவனோ, விஜய் எப்போது கத்தி படத்தை முடித்து விட்டு வருவார், அவரை வைத்து படம் இயக்கலாம் என்று காத்துக்கொண்டிருக்கிறார்.

இதனால், தன் மனதில் உள்ள எண்ணத்தை சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.
[Continue reading...]

சிம்புவை வம்புக்கு இழுக்கும் மோனா மோத்வானி!

- 0 comments

வாலு படத்தில் நடிக்க போன இடத்தில் சிம்புவின் காதல் வலையில் விழுந்து கிடந்தார் ஹன்சிகா. ஆனால், அது நீண்டகாலம் நீடிக்கவில்லை. எண்ணி மூன்றே மாதத்தில் காதலுக்கு முழுக்கும் போட்டு விட்டார்கள். இந்த காதல் முறிவுக்கு நடுவே சிக்கியவர் வாலு பட தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திதான்.

சிம்பு-ஹன்சிகா நடிக்க வேண்டிய ஒரு பாடல் காட்சி பேலன்ஸ் இருந்ததால், அவர்களை மீண்டும் ஒன்று சேர்ப்பதற்குள் படாதபாடு பட்டு விட்டார். எப்படியோ ஒருவழியாக எதிரும் புதிருமாக இருந்தவர்களை வைத்து சமீபத்தில் யு ஆர் மை டார்லிங் என்ற ரொமான்டிக்கான அந்த பாடலை படமாக்கி விட்டார்கள். (இரண்டு கோபக்கார பறவைகளும் கொஞ்சி கொஞ்சி எப்படித்தான் ரொமான்ஸ் செய்தார்களோ தெரியவில்லை)

ஆனால் இப்போது அது பிரச்னை இல்லை. சில நாட்களாக, ஜெய்பிரதாவின் மகன் சித்துவுடன் ஹன்சிகாவை இணைத்து காதல் செய்திகள் பரவி கிடக்கிறது. ஆனால் இதற்கு காரணம், சிம்புதான். அவர்தான் என் மகளை அசிங்கப்படுத்த வேண்டுமென்று இப்படி கண்ட செய்திகளை மீடியாக்களிடம் பரப்பி விடுகிறார் என்று அவரைப்பார்த்து சீறிக்கொண்டு நிற்கிறார் ஹன்சிகாவின் தாய்குலம் மோனா மோத்வானி.

குறிப்பாக, ஜெயப்பிரதாவிடம் ஏராளமான சொத்துக்கள் இருப்பதால் அவர் மகன் சித்துவுக்கு ஹன்சிகா ப்ராக்கட் போட்டு விட்டதாகவும் அந்த செய்தியோடு சேர்த்து பரவியது, அவரை இன்னும் டென்சனாக்கி விட்டுள்ளது. யாருக்கு வேணும் சொத்து. மும்பையில் எங்ககிட்ட இல்லாத சொத்தா. நாங்களும் பெரிய ஜமீன் குடும்பம்தான் என்றும் முந்தானையை இழுத்து இடுப்பில் சொறுக்கிக்கொண்டு மார்தட்டிப் பேசுகிறார் மோனா மோத்வானி.

[Continue reading...]

அஜீத்துக்கு இன்று 43வது பிறந்தநாள்...!!

- 0 comments


மே 1 உழைப்பாளர் தினமான இன்று, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜீத்குமாரின் பிறந்தநாளும் கூட. உழைப்பாளர் தினத்தில் பிறந்த அஜீத், இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மற்ற நடிகர்களை போன்று ஆடம்பரமாய் விழா எல்லாம் எடுத்து கொண்டாடுவது கிடையாது. பிறந்தநாள் கொண்டாட்டம், ரசிகர்கள் சந்திப்பு என்று எதையும் செய்ய மாட்டார் அஜீத். ஏன் தனது பிறந்தநாளுக்கு ஒரு புத்தாடை கூட உடுத்துவாரா என்றால்... இல்லை என்று தான் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்தளவுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறார். இந்தாண்டும் பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் கிடையாது. தனது மனைவி மற்றும் குழந்தையோடு புனே சென்றுள்ளார். அங்கு ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று பாபாவை தரிசனம் செய்துவிட்டு இருதினங்களில் சென்னை திரும்பி, கெளதம் மேனன் பட ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளார்.

43வது பிறந்தநாளை கொண்டாடும் அஜீத் பற்றிய சில தகவல்கள்...

1971 மே 1-ம் தேதி, செளகந்திராபாத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்தவர் அஜீத்.

* பைக்ரேஸ் பிரியரான அஜீத், 1992-ம் ஆண்டு தெலுங்கு படமான பிரேம புஸ்தகாம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் அவர் நடித்த முதல்படம் அமராவதி. பின்னர் ஆசை படம்மூலம் பிரபலமான அஜீத், காதல் கோட்டை படம் மூலம் பேசப்படும் நடிகரானார்.

* தொடர்ந்து காதல் நாயகனாக வலம் வந்தவர் அமர்க்களம் படம் மூலம் ஆக்ஷ்ன் ஹீரோவாகவும் உருவெடுத்தார். தீனா, அட்டகாசம், என அதிரடி ஆக்ஷ்ன் படங்களையும் கொடுத்தார்.

* எம்.ஜி.ஆர்., - சிவாஜிக்கு அடுத்தப்படியாக ரஜினி - கமல் உருவானதை போன்று இவர்களுக்கு அடுத்தபடியாக அஜீத் - விஜய் இடையே தொழில் ரீதியான போட்டி உருவானது. ஆனால் இவர்கள் நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்தனர்.

* ஏ.ஆர்.முருகதாஸின் தீனா படத்தில் நடித்தபோது அவரது பெயருக்கு முன்னால் 'தல' எனும் அடைமொழி ஒட்டிக்கொண்டது. அது இப்போதும் தொடர்கிறது.

* அமர்க்களம் படத்தில் நடித்தபோது, அப்படத்தில் தன்னுடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

* ஆக்ஷ்ன், லவ் என்று இல்லாமல், வாலி, வில்லன், வரலாறு போன்ற படங்களில் வித்தியாசமாக நடித்தார். குறிப்பாக சிட்டிசன் படத்தில் பல்வேறு கெட்டப்புகளில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

* பைக் ரேஸ் மட்டுமல்லாது அஜீத், கார் ரேஸ் பிரியரும் கூட. சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துவிட்ட பின்னர் சில காலம் கார் ரேஸ்களில் கவனம் செலுத்தினார். இதனால் அந்த சமயம் அஜீத் மார்க்கெட் டல்லடித்தது.

* பில்லா தந்த பிரேக்... ரஜினி நடித்த பில்லா படத்தை மீண்டும் ரீ-மேக் செய்தனர். விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜீத் நடித்த இப்படம் சூப்பர்-டூப்பர் ஹிட்டானது. குறிப்பாக இப்படத்தின் பின்னணி இசையும், அஜீத்துக்கு அமைந்த தீமும் பெரிதாக பேசப்பட்டது. டல் அடித்த தனது மார்க்கெட்டை பில்லா படம் மூலம் மீட்டார் அஜீத்.

* மங்காத்தா 50... அதன்பின்னர் வெங்கட்பிரபு இயக்கத்தில், அஜீத் நடித்த படம் மங்காத்தா. இது அவரது 50வது படம். இப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானதோடு, வசூல் ரீதியாகவும் அவருக்கு பெரும் சாதனை கொடுத்த படமாகவும் அமைந்தது.

* சால்ட் அண்ட் பெப்பர் லுக்... பொதுவாக நரைமுடி வந்தாலே அதை டை அடித்து மறைத்து இளமையாக காட்டும் நடிகர்கள் ஏராளம். ஆனால் அஜீத் அதையே ஒரு ஸ்டைலாக்கி சால்ட் அண்ட் பெப்பர் லுக் என மங்காத்தா படத்தில் நடித்தார். ரசிகர்களை அது வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து ஆரம்பம், வீரம், இப்போது நடித்து வரும் கெளதம் மேனன் படம் வரை இந்த ஸ்டைல் தொடர்கிறது.

* ரசிகர் மன்றத்தை கலைத்த அஜீத்... பொதுவாக தமிழ் சினிமாவில் அஜீத் படத்திற்கு இருக்கும் ஓப்பனிங் வேறு எந்த படத்திற்கும் இருக்காது. அந்தளவுக்கு அவரது ரசிகர்கள் முதல்நாள் முதல்ஷோவை அமர்க்களப்படுத்தி வரவேற்பர். ஆனால் இந்த விஷயம் எல்லாம் அஜீத்திற்கு சுத்தமாக பிடிக்காது. ஒவ்வொரு முறை தனது ரசிகர்களை பற்றி பேசும்போது, எனக்காக இதுபோன்று எதுவும் செய்யாதீர்கள், அவரவர் வேலையை கவனமாக செய்யுங்கள் என்று அன்பு கட்டளை போடுவார். ஆனபோதும் ஒருகட்டத்தில் அவரது ரசிகர்கள் சிலர் அரசியல், அது, இது என்று இறங்கியதால் கோபமான அஜீத், தனது ரசிகர் மன்றத்தை கலைத்தார். அஜீத்தின் இந்த செயலை பலரும் பாராட்டினர். ரசிகர் மன்றத்தை கலைத்தாலும், அவரது ரசிகர்கள் அஜீத்தின் படத்திற்கு எப்பவும் போல தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி தான் வருகின்றனர். அதேப்போல் பிறந்தநாளையும் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

சினிமாவில் எந்த பின்னணியும் இன்றி கடுமையாக உழைத்து, இன்று இந்தளவுக்கு முன்னேறி இருக்கும் அஜீத்துக்கு வாசகர்களாகிய நீங்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லுங்கள்...!!
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger