வாலு படத்தில் நடிக்க போன இடத்தில் சிம்புவின் காதல் வலையில் விழுந்து கிடந்தார் ஹன்சிகா. ஆனால், அது நீண்டகாலம் நீடிக்கவில்லை. எண்ணி மூன்றே மாதத்தில் காதலுக்கு முழுக்கும் போட்டு விட்டார்கள். இந்த காதல் முறிவுக்கு நடுவே சிக்கியவர் வாலு பட தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திதான்.
சிம்பு-ஹன்சிகா நடிக்க வேண்டிய ஒரு பாடல் காட்சி பேலன்ஸ் இருந்ததால், அவர்களை மீண்டும் ஒன்று சேர்ப்பதற்குள் படாதபாடு பட்டு விட்டார். எப்படியோ ஒருவழியாக எதிரும் புதிருமாக இருந்தவர்களை வைத்து சமீபத்தில் யு ஆர் மை டார்லிங் என்ற ரொமான்டிக்கான அந்த பாடலை படமாக்கி விட்டார்கள். (இரண்டு கோபக்கார பறவைகளும் கொஞ்சி கொஞ்சி எப்படித்தான் ரொமான்ஸ் செய்தார்களோ தெரியவில்லை)
ஆனால் இப்போது அது பிரச்னை இல்லை. சில நாட்களாக, ஜெய்பிரதாவின் மகன் சித்துவுடன் ஹன்சிகாவை இணைத்து காதல் செய்திகள் பரவி கிடக்கிறது. ஆனால் இதற்கு காரணம், சிம்புதான். அவர்தான் என் மகளை அசிங்கப்படுத்த வேண்டுமென்று இப்படி கண்ட செய்திகளை மீடியாக்களிடம் பரப்பி விடுகிறார் என்று அவரைப்பார்த்து சீறிக்கொண்டு நிற்கிறார் ஹன்சிகாவின் தாய்குலம் மோனா மோத்வானி.
குறிப்பாக, ஜெயப்பிரதாவிடம் ஏராளமான சொத்துக்கள் இருப்பதால் அவர் மகன் சித்துவுக்கு ஹன்சிகா ப்ராக்கட் போட்டு விட்டதாகவும் அந்த செய்தியோடு சேர்த்து பரவியது, அவரை இன்னும் டென்சனாக்கி விட்டுள்ளது. யாருக்கு வேணும் சொத்து. மும்பையில் எங்ககிட்ட இல்லாத சொத்தா. நாங்களும் பெரிய ஜமீன் குடும்பம்தான் என்றும் முந்தானையை இழுத்து இடுப்பில் சொறுக்கிக்கொண்டு மார்தட்டிப் பேசுகிறார் மோனா மோத்வானி.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?