அனாமிகாவைத் தொடர்ந்து சிம்புவுக்கு ஜோடியாக இது நம்ம ஆளு, ஜெயம் ரவிக்கு ஜோடியாக தனி ஒருவன் படங்களில் நடித்து வரும் நயன்தாரா, அடுத்தபடியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிப்பது தற்போது உறுதியாகியிருக்கிறது. ஏற்கனவே சூர்யாவுடன் கஜினி, ஆதவன் படங்களில் நடித்த நயன்தாரா இந்த வாய்ப்பினால் உற்சாகத்தில் இருக்கிறார்.
காரணம், ரீ-என்ட்ரியில் முதல் படத்திலேயே அஜீத்துடன் ஆரம்பம் படத்தில் நடித்த நயன்தாரா, அதையடுத்து ஆர்யாவுடன் ராஜாராணியில் நடித்தார். ஆனால் அதையடுத்து கஹானி ரீமேக்கான அனாமிகாவில் டைட்டீல் ரோலில் நடித்தார். ஆக, அவரது ரீ-என்ட்ரி நல்ல அமோகமாகவே இருக்கிறது. இதற்கிடையே தற்போது சிம்பு, ஜெயம்ரவி படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே சூர்யாவுடன் நடிக்க கமிட்டாகி விட்டார்.
இதனால், செகண்ட் இன்னிங்சில் நான் நினைத்து பார்க்காத நல்ல விசயங்களாக நடக்கிறது என்று உற்சாகத்துடன் கூறிவரும் நயன்தாரா, இப்போது சூர்யாவுடனும் மீண்டும் ஜோடி சேர்ந்து விட்ட நான், முதல் ரவுண்டில் நடித்த விஜய்யுடன்தான் இன்னும் ஜோடி சேரவில்லை. ஆனால் அதற்கான காலமும் விரைவில் கனியும் என்று எதிர்பார்க்கிறேன். அது விஜய் நடிக்கும் அடுத்த படமோ இல்லை அதற்கடுத்த படமாகக்கூட இருக்கலாம் என்று தனக்குத்தானே ஆரூடம் சொல்லிக்கொண்டு திரிகிறார் நயன்தாரா.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?