Wednesday 23 November 2011

புலியின் வீரமும�� தமிழனின் அன்பும்...!!!

- 0 comments



 ஒரு காட்டுக்குள்ளே புலி இருக்குறதா தகவல் கிடைச்சதும், ஐநா சபை ஒரு டெஸ்ட்டுக்காக அமெரிக்கன் போலீஸ், ரஷ்யன் போலீஸ், இந்தியன் போலீஸ் டீமை தேர்ந்தேடுத்துச்சாம்....


முதலில் பேரிக்காய் ச்சே ச்சீ அமெரிக்க போலீசை காட்டுக்குள் அனுப்பினார்களாம், அவர்களும் போயி பார்த்துட்டு புலி இல்லைன்னு திரும்பி வந்துட்டாயிங்களாம்...


அடுத்து ரஷ்யன் போலீஸ் டீம் போனதாம், அவர்களும் போயி பார்த்துட்டு புலி இல்லைன்னு சொல்லிட்டு திரும்பிட்டாங்களாம்...

கடைசியா களம் புகுந்த நம்ம இந்தியன் டீம், ரொம்ப நேரமாகியும் திரும்பலையாம், அதிர்ச்சி ஆன ஐநா தலைவர், இவங்களுக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துருச்சுன்னு பார்க்கலாம் வாருங்கள் என காட்டுக்குள் போயி பார்த்தால்.....

நம்மாளுங்க ஒரு கரடியை பிடிச்சி கட்டி வச்சி அடி பின்னிட்டு இருந்துருக்காங்க, நான்தான் புலி'ன்னு சொல்லு சொல்லுன்னு அடிச்சிட்டு இருந்துருக்காங்க.....[[ஹா ஹா ஹா ஹா ஹா எப்பூடி]]

கொசுறு : எங்கேயோ படிச்சது...!!!


டிஸ்கி : சம்மந்தமே இல்லாத என் நண்பனை என்கவுன்டரில் கொன்ற மும்பை போலீஸ்.....!!!

டிஸ்கி : நானும் இந்தியன்தான், கருத்து சொல்றவன் இங்கே வந்து கருத்து சொல்லு பதில் சொல்ல ஆளுங்க ரெடியா இருக்காங்க ஹி ஹி....


டிஸ்கி : புலின்னு சொன்னாலே மலையாளிகளுக்கு கொலை நடுங்குது, ஏன்னு என் உண்மை பேசும் மலையாளி நண்பன்கிட்டே கேட்டேன், அவன் சொன்னது ஆச்சர்யமா இருந்தது, பொறாமையும், கடுப்பும், இயலாமையும்தான் காரணம்னு சொன்னான்....!!!!





http://galattasms.blogspot.com





  • http://dinasarinews.blogspot.com



  • [Continue reading...]

    நகைச்சுவை நடிகர�� சிவாஜி ஆர் சந்த��னம் அவர்களின் சூப்பர்ப் பேட்டி...!!!

    - 0 comments


    நடிகர் சிரிப்பு திலகம்' சிவாஜி ஆர் சந்தானம் அவர்களை தெரியாத தமிழர்கள் கிடையாது, அபூர்வ சகோதரர்கள் படம் மூலம் "தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க" என்ற வார்த்தை பேச்சு, அன்றைய, இன்றைய மக்களிடையே மிகவும் பாப்புலராக பேசப்படுகிறது, இப்பவும் நாம் நண்பர்களிடம் இப்படி சொல்லி கலாயிப்பது உண்டு, இவர் எப்போதுமே என்னை கவர்ந்தவர்....!!! அவர் பாடி லேங்க்வேஜ் எனக்கு ரொம்ப பிடிக்கும்....!!!



    ரெண்டு நாளைக்கு முன்னாடி, நாஞ்சில்மனோ வலைத்தளத்துக்கு உங்களை பேட்டி எடுக்கலாமா என்று கொஞ்சம் பயத்துடனே கேட்டேன், எடக்குமடக்கா கேட்டுராதீங்கப்பா என சொன்னபடியே உடனே சம்மதித்தார், எந்த ஒரு பந்தாவோ பாவ்லாவோ இல்லாமல், மனுஷர் அநியாயத்துக்கு எளிமையா இருக்கிறார்....!!! [[மிக்க நன்றி சார்]]


    இனி, நாஞ்சில்மனோ'வின் கேள்விகளும், சந்தானம் சிவாஜி அவர்களின் பதில்களும்....

    ௧ : உங்கள் முதல் படம் எது சார்...?

          உதவி இயக்குநராக " பண்ன்ரீர் புஷ்பங்கள் "
       நடிகனாக : எனது முதல் படமான பன்ன்ரீர் புஷ்பங்களில்யிருந்து நடித்து கொண்டு


       வருகிறேன் . என்னை ஒரு நடிகனாக பிரபலம் ஆக்கியது "ஆபூர்வ சகோதரர்கள்'

    ௨ : நீங்கள் நடித்ததில் உங்களுக்கு பிடிச்ச சினிமா எது சார்...?

       பிரதாப் போத்தன் இயக்கிய "மீண்டும் ஒரு காதல் கதை"

    ௩ : உங்களுக்கு பிடித்த நகைச்சுவை நடிகர் யார்...?

       எல்லோரையும் பிடிக்கும்...


    ௪ : இப்போதைய தமிழ் சினிமாவின் வளர்ச்சி எப்படி இருக்கிறது, உங்கள்
    பார்வையில் சொல்லுங்கள்...?

       நல்லாவும் இருகிறது , பயமாவும் இருகிறது....



    ௫ : உங்களை கவர்ந்த நடிக, நடிகைகள் யார் யார்....?

    நடிகர் திலகம் , மக்கள் திலகம் , என். எஸ்.கே , மார்ல்ன் பிராண்டோ ,
    அல்பாச்சினோ , ராபர்ட் டி நிரோ , டஸ்டின் ஹாஃப்மன் , கமல்ஹாசன்,
    ரஜினிகாந்த், முத்துராமன், பிரபு, கார்த்திக் (முத்துராமன்)
    விமல் , விதார்த் மற்றும் இன்றைய புதுமுக நடிகர்கள் இயல்பாக இருக்கிறது
    இவர்களின் நடிப்பு
    பத்மினி , கே.ஆர்.விஜயா , கண்ணாம்பாள். ரேவதி , அஞ்சலி, அனன்யா...

    அபிநயா,   பாவனா , மற்றும் இன்றைய புதுமுக நடிகையர்கள் (இயல்பாக
    இருக்கிறது இவர்களின் நடிப்பு)


    ௬ : உங்கள் முதல் காதல் அனுபவம் [[மாட்னாருய்யா ஹி ஹி]]....?

    [[மாட்டலைய்யா ஹி ஹி]]....உண்டு...ஆனால் தோல்வி அடைந்தது ...கல்லூரி
     படிக்கும்போது...


    ௭ : உங்கள் நகைச்சுவையை விரும்பி ரசிப்பவர்கள் நாங்கள், ஆனால் தற்போது
    உங்களை அதிகமாக சினிமாவில் பார்க்க முடியவில்லையே...?

           யாரும் கூப்பிடுவதில்லை ......


    ௮ : மதிப்புக்குரிய நகைச்சுவை நடிகர் ஜனகராஜை நீங்கள் சந்திப்பது உண்டா...?

        உண்டு

    ௯ : இப்போது காமெடியில் அசத்திக்கொண்டிருக்கும் நடிகர் சந்தானம் குறித்து
    உங்கள் கருத்து...?

    திறமைசாலி....!!!


    ௰ : எப்படி இருக்கிறது உங்கள் சினிமா வாழ்க்கையும், நிஜ வாழ்க்கையும்...?

    இரண்டும் இரு துருவங்கள்...


    ௧௧ : அரசியல் மாற்றங்களை கவனித்து வருகிறீர்களா...?

    அரசியலில் இடுபாடு கிடையது.



    ௧௨ : அணு உலைகள் பற்றி கருத்து சொல்ல முடியுமா...?

    நான் சொல்வதை கேட்கவா போகிறார்கள்...?


    ௧௩ : தங்கம் போல விலைவாசி ஏறுகிறதே நம்ம மக்களின் கதி...?

    தங்கத்தையும் வாங்கும் நம்ம மக்களுக்கு இது ஒன்றுமில்லை...



    ௧௪ : உங்களுக்கு மிகவும் பிடித்த டைரக்டர் பற்றி சொல்லுங்க சார்...?

    டைரக்டர் சி.வி ஸ்ரீதர் ......புதுமை விரும்பி, இளமை, புதிய பரிமாண கதைகள்

    யாரும் பார்த்திராத ஷாட்ஸ், பல புதுமுக நடிக நடிகைகளின்,அந்த
    காலக்கட்டதில் தைரியமாக அறிமுக படுத்தியவர், , பாடல்கள் எடுக்கும் திறமை
    நிறைய அவரைப்பற்றிஅடுக்கிக்கொண்டே போகலாம்..அவருக்கு தாதா சாஹப் பால்கே
    விருது கொடுக்காம்ல் போனது எனக்கு வருத்தம்...!



    ௧௫ : கடைசி கேள்வி [[அவ்வ்வ்வ் அடிக்க வராதீங்க சார்]] உங்களுக்கும்
    அரசியலில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஆவல் உண்டா...?
    [[ஒடுலேய் மனோ ஓடு அண்ணன்கிட்டே அடி வாங்குமுன்]]

     ஹா ஹா அடிக்க மாட்டேன்...அந்த எண்ணமெல்லாம் கிடையாது.....


    டிஸ்கி : மிக்க நன்றி சிவாஜி சந்தானம் சார்......!!!

    நன்றி : எனது போட்டோவை கார்ட்டூன் ஆக்கிய நண்பன் "வீடு" அவர்களுக்கு....



    http://galattasms.blogspot.com





  • http://dinasarinews.blogspot.com



  • [Continue reading...]

    நட்சத்திரங்களின் பேட்டி, இன்றைக்கு பாத்திமா பாபு....!!!

    - 0 comments


    பிரபல செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான மதிப்பிற்குரிய பாத்திமா பாபு அவர்களிடம், நாஞ்சில்மனோ வலைத்தளத்திற்கு பேட்டி தரமுடியுமா என்று கேட்டதும், அன்பாக ஒப்புகொண்டார்கள்...



    எனக்கு நம்பவே முடியலை, நேற்று சிவாஜி சந்தானம் சார் பேட்டியையே இன்னும் நம்ப முடியாமல் இருக்கேன், இதோ அடுத்த நட்சத்திர தேவதையும் பேட்டிக்கு தயாரா வந்ததை நினைத்து பூரித்துப் போனேன்....


    எவ்வளவு எளிமையாக பழகுகிறார்கள், அதனால்தான் இவர்கள் நட்சத்திரங்களாக மின்னுகிரார்கள்...!!! தூரத்தில் இருந்து பார்க்கும் போது நாம் மிரண்டு போகிறோம் இவர்களைப் பார்த்து, அருகில் போனால் இனியவர்கள், மிகவும் அன்பாக இருக்கிறார்கள்...!!! வாழ்த்துக்கள் மேடம், நன்றிகளும்....


    இனி நாஞ்சில்மனோ'வின் கேள்விகளும், பாத்திமா பாபு'வின் பதில்களும்....

    1 : ஒரு டிவி செய்தி வாசிப்பாளரா ஆன உங்களுக்குத்தான் முதல் தகவல்கள் வரும், அதிர்ச்சியான செய்திகள் வரும் போது உங்கள் மன நிலை எப்படி இருக்கும்...?

    கேட்கும் உங்களுக்கு இருப்பது போலவே...


    2 : பார்த்தேன் ரசித்தேன் படத்துல சிறப்பாக கலகலப்பான பேர்வழியா நடிச்சி அசத்தி இருந்தீங்க, உங்க கூட நடிச்ச பிரசாந்த், லைலா, சிம்ரன் பற்றி சொல்லுங்க மேடம்...? 

    லைலாவிடம் விளையாட்டுத்தனம் அதிகம். ப்ரஷாந்த் அந்த காலத்திலேயே கணிணியை அபரிமிதமாக நேசித்தவர் 
    சிம்ரன் முதல் படத்தில் (விஐபி) பார்த்ததற்கும் அப்போதைக்கும் அபரிமிதமாக பரிமளித்திருந்தார்...நடிப்பில் ஒரு முதிர்ச்சி இருந்தது...!!!


    3 : உங்களுக்கு பிடிச்ச உலக தலைவர்கள்...?

    ஒபாமா, நெல்சன் மண்டேலா, ஆங் சாங் சூ கீ....!


    4 : இயற்கை பேரழிவுகள், எந்த ரூபத்தில் எப்போது வரும் என கனிக்க முடியாத இந்த வேளையில், அணுமின் நிலையங்கள் இன்னும் தேவையா...?

    அணுமின் நிலையங்களின் சாதகங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும், பாதுகாப்பு விஷயங்களை மேம்படுத்தி மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். 
    கரண்ட் கூடத்தான் ஷாக் அடிக்கும்....பெட்ரோல், எரிவாயு போன்றவையும் கவனமாக கையாளப்பட வேண்டியவை...நாம் உபயோகிக்கவில்லையா? அணுவும் அது போலவே...


    5 : உங்களுக்கு பிடித்த நடிகர்கள், நடிகைகள் பற்றி சொல்லுங்களேன்...?

    எல்லோரையும் பிடிக்கும்....கமல், மோஹன்லால், நந்திதாதாஸ், ரேகா(ஹிந்தி), பெரிய லிஸ்ட்....அது...


    6 : உங்க வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் சொல்லுங்களேன்..?

    இன்னும் எத்தனை வருடங்களுக்கு இந்த கேள்வி கேட்கப்பட்டுக்கொண்டிருக்கும்? so very cliched it sounds..


    7 : எப்போதாவது பல்பு வாங்கிட்டு முழிச்ச சம்பவங்கள் உண்டா...?

    இல்லைன்னா அது பொய்யா இருக்கும்....


    8 : தைரியமாக வேலை செய்ய போய்க்கொண்டிருக்கும் பெண்களுக்கு உங்கள் அறிவுரை...?

    CONTINUE.....


    9 : எப்போதும் உற்சாகமாக அழகா இருக்கிறீர்களே அதன் ரகசியம் என்ன...?

    உங்க கேள்வியிலேயே பதிலும் இருக்கு,,,,உற்சாகம்....ஆமாம் மனசுல எந்த negative thoughts ம் இல்லாம சந்தோஷமா இருக்கறேன்....அது காரணமா இருக்கலாம்.


    10 : மீடியா, நடிப்பு, குடும்பம், எப்பிடி இருக்கு வாழ்க்கை...?

    ஒவ்வொன்றிற்குமான நேரம் கிடைக்கிறது.


    11 : உங்களுக்கு பிடித்த இயக்குனர், வெள்ளித்திரை, சின்னத்திரை...?

    மணிரத்னம், கே பாலசந்தர் வெள்ளித்திரையில்....சின்னத்திரையில்....என்னை தெலுங்கில் அறிமுகப்படுத்திய உப்பலபட்டி நாராயண ராவ்...


    12 : வேகமாக வளர்ந்து பெருகி வரும், பதிவுலகம், பதிவர்கள் பற்றி சொல்லுங்க மேடம்...? 

    நல்ல ஆரோக்கியமான அறிவியல் வளர்ச்சி....


    13 : பதிவுலகில் அட்டகாசமாக பிரகாசித்து வரும் பெண் பதிவர்களுக்கு [[ஆண் பதிவர்களுக்கும்]] உங்கள் ஆலோசனை என்ன...?

    நானே ஒன்றரை ஆண்டுகளாகத்தான் பதிவுலகில் தடம் பதித்திருக்கிறேன்....அவர்கள் தான் எனக்கு அறிவுரை சொல்ல வேண்டும்..... 
    சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.,,,,censor இல்லை இங்கே...


    14 : இப்போது என்னென்ன படங்களில் நடித்து கொண்டு இருக்குறீர்கள்...?

    தமிழில் - என் பெயர் குமாரசாமி மலையாளத்தில் ஜோஸ் ஏட்டண்டெ ஹீரோ & தி கிங் அண்ட் தி கமிஷ்னர்.


    15 : உங்களை அன்புடன் தாங்கும் உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்கள்...? 

    கணவர் பாபு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் அக்கௌண்ட்ஸ் ஆஃபிஸர், மகன் ஆஷிக் ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரிங் மூன்றாம் ஆண்டு, மகன் ஷாருக் எட்டாம் வகுப்பு
    அத்தனை பேருக்கும் நான் தான் குழந்தை போல...


    16 : கடைசி ஸ்பெஷல் கேள்வி, சந்தானம் சிவாஜி சார் நழுவின மாதிரி சொல்லிறாதீங்க, அரசியலில் ஈடுபட்டு பெண்களுக்காக போராட வேண்டும் என்ற எண்ணம் 
    மனதில் எழுந்தது உண்டா....? [[ஹை மாட்டிகிட்டாங்களே]] 

    கீதையிலிருந்து - எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது....எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்...


    டிஸ்கி : மிகவும் நன்றி மேடம்...



    http://galattasms.blogspot.com





  • http://dinasarinews.blogspot.com



  • [Continue reading...]

    பிரபல பதிவர்கள் ���ாடல் கும்மி....!!!

    - 0 comments


    படத்தை பார்த்தாலே எந்தெந்த பதிவர்னு நமக்கு தெரிஞ்சிரும் இல்லையா, அதனால அவிங்க அவிங்க கேரக்டரை வச்சும், எழுதுறதை வச்சும் என் கற்பனை கலந்த பாடல்கள்....



    கும்தலக்கடி கும்தலக்கடி பாட்டு.....[[மன்னன்]]



    தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியதே...[[கண்ணோடு காண்பதெல்லாம்]]

    கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்...[[மாயாபஜார்]]


    கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பும் [[பருப்பும்]] ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்...[[கில்மா பாட்டு, திருடா திருடா]]


    செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா [[முள்ளும் மலரும்]]


    கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம்...[[புன்னகை மன்னன்]]


    அக்கறை சீமை அழகினிலே மனம் ஆடக்கண்டேனே [[பிரியா]]


    கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா, பிறந்த கதை சொல்லவா, வளர்ந்த கதை சொல்லவா...[[நவராத்திரி]]


    கொலம்பஸ் கொலாம்பஸ் விட்டாச்சு லீவு கொண்டாட கண்டுபிடிச்சு கொண்டா ஒரு தீவு.....[[ ஜீன்ஸ் ]]


    அஞ்சாத சிங்கம் என் காளை இது பஞ்சா பறக்க விடும் ஆளை, இந்த ஆபத்தை நாடிடும் மாவீரன் பாரிலே யாரடி....[[வீரபாண்டிய கட்டபொம்மன்]]


    அமைதியான நதியினிலே ஓடம், ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்...[[ஆண்டவன் கட்டளை]]


    ஊரைதெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி...[[படிக்காதவன்]]


    வாங்கய்யா வாத்தியாரய்யா வரவேற்க வந்தோமய்யா, வாங்கய்யா வாத்தியாரய்யா...[[இதயக்கனி]]

    கண்மணி அன்போடு காதலன் நான் நான் எழுதும் கடிதாசி ச்சே ச்சீ கடிதம்ன்னு வச்சிக்கோ, இடையிடையே மானே தேனே பொன்மானேன்னு போட்டுக்கோ...[[ மனோ ஸாரி குணா]]


    ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே....


    இம்சை அரசன் யாருன்னு கேட்டா சின்னபுள்ளையும் சொல்லும், அருவாப்பய யாருன்னு கேட்டா எழுந்து ஓடிடும் துள்ளும் [[சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா ஸ்டைலில் பாடவும் ஹி ஹி]]


    தண்ணீரிலே நீ அழுதால் உன் கண்ணீரை யாரறிவார், தனிமையிலே நீ அழுதால்...[[மைதிலி என்னை காதலி]]


    அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே....[[பலே பாண்டியா]]


    என்ன சமையலோ ம்ஹும் எதிர்த்து கேட்க யாருமில்லை என்ன சமையலோ, அண்ணி சமையல் தின்று தின்று நாக்கு மரத்து போனதே...[[உன்னால் முடியும் தம்பி காமெடி பாடல், மனோரமாவை கலாயித்து ]]


    தண்ணி தொட்டி தேடிவந்த கன்னுகுட்டி நான்.....



    நானே என்றும் ராஜா ஆனால் முள்ளில் ரோஜா, ஒன்னா ரெண்டா எந்தன் பாதை பெண்ணா என்னை வெல்லக்கூடும்...[[பொல்லாதவன்]]


    நான் யார் நான் யார் நான் யார், நாலும் தெரிஞ்சவன் யார் யார், நீ யார் நான் யார் அறியார்....[[குடியிருந்த கோவில்]]


    அவளொரு நவரச நாடகம், ஆனந்த கவிதையின் ஆலயம்....[[உலகம் சுற்றும் வாலிபன்]]


    அடியே காந்தா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....


    கத்தாழை கண்ணால குத்தாதே நீ என்னை, இல்லாத இடுப்பால இடிக்காதே நீ என்னை...[[அஞ்சாதே]]


    காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம், மாதங்களில் அவள் மார்கழி, மலர்களிலே அவள் மல்லிகை...[[ பாவமன்னிப்பு]]


    திருநெல்வேலி அல்வாடா, திருச்சி மலை கோட்டைடா திருப்பதிக்கு லட்டு தந்த சாமிடா,இருட்டுகட அல்வாடா, இட்லிகடை ஆயாடா, உருட்டு கட்டை சத்தம் கேட்ட சாமிடா...[[ சாமி ]]


    செல்லம் எந்தன் செல்லம் என்ன வேணும் கேளு, எல்லாம் தாரேன் கேளு...[[சிறுத்தை ]]


    கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ, எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா....[[ஆறிலிருந்து அறுபது வரை]]


    நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார், உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை, அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார், அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார், ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்...[[ எங்க வீட்டு பிள்ளை]] [[எப்பா இப்போ சவுக்கை வேற கையில் எடுத்தாச்சா...]]


    நல்ல பெயரை வாங்கவேண்டும் பிள்ளைகளே நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே...[[நம் நாடு]]


    ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம். பூவின் இதழ் எல்லாம்  மவுனராகம் மவுனராகம்...[[கண்ணுக்குள் நிலவு]]


    மை நேம் இஸ் பில்லா, வாழ்க்கை எல்லாம் நானும் பாக்காதா ஆளில்லை, போகாத ஊர் இல்லை அய்யா, நல்ல நண்பன் இல்லையென்றால், எங்கு போனாலும் விடமாட்டேன் நானாக தொடமாட்டேன்....[[ரஜினியின் பில்லா]]


    ஒ காதல் என்னை காதலிக்கவில்லை ஒ காற்றும் என்னை ஆதரிக்கவில்லை அவ்வ்வ்வ்வ்வ்......[[கொடி பறக்குது]]


    சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன், கருத்தகோழி மொளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்.....[[ஷாஜகான் ]]


    வெத்தலை போட்ட ஷோக்குல நான் குத்துனம்பாரு மூக்குல வந்தது பாரு ரத்தம் இந்த மனோ மனசு சுத்தம், வாராவதி இறக்கம் வந்து நின்னா கிறக்கும் மனோ பேரை சொன்னாதானே சோடா பாட்டல் பறக்கும், அய்சாலக்கிடி மெட்டுதானுங்க மனோ பாட்டுலதான் கெட்டிகாரங்க [[ அடிக்க வராதீங்க எதுன்னாலும் பேசி தீர்த்துக்குவோம் ஹி ஹி]]

    டிஸ்கி : எல்லாரும் சும்மா ஜாலியா எடுத்துக்கோங்க......



    http://galattasms.blogspot.com





  • http://dinasarinews.blogspot.com



  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger