Wednesday, 23 November 2011

நட்சத்திரங்களின் பேட்டி, இன்றைக்கு பாத்திமா பாபு....!!!



பிரபல செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான மதிப்பிற்குரிய பாத்திமா பாபு அவர்களிடம், நாஞ்சில்மனோ வலைத்தளத்திற்கு பேட்டி தரமுடியுமா என்று கேட்டதும், அன்பாக ஒப்புகொண்டார்கள்...



எனக்கு நம்பவே முடியலை, நேற்று சிவாஜி சந்தானம் சார் பேட்டியையே இன்னும் நம்ப முடியாமல் இருக்கேன், இதோ அடுத்த நட்சத்திர தேவதையும் பேட்டிக்கு தயாரா வந்ததை நினைத்து பூரித்துப் போனேன்....


எவ்வளவு எளிமையாக பழகுகிறார்கள், அதனால்தான் இவர்கள் நட்சத்திரங்களாக மின்னுகிரார்கள்...!!! தூரத்தில் இருந்து பார்க்கும் போது நாம் மிரண்டு போகிறோம் இவர்களைப் பார்த்து, அருகில் போனால் இனியவர்கள், மிகவும் அன்பாக இருக்கிறார்கள்...!!! வாழ்த்துக்கள் மேடம், நன்றிகளும்....


இனி நாஞ்சில்மனோ'வின் கேள்விகளும், பாத்திமா பாபு'வின் பதில்களும்....

1 : ஒரு டிவி செய்தி வாசிப்பாளரா ஆன உங்களுக்குத்தான் முதல் தகவல்கள் வரும், அதிர்ச்சியான செய்திகள் வரும் போது உங்கள் மன நிலை எப்படி இருக்கும்...?

கேட்கும் உங்களுக்கு இருப்பது போலவே...


2 : பார்த்தேன் ரசித்தேன் படத்துல சிறப்பாக கலகலப்பான பேர்வழியா நடிச்சி அசத்தி இருந்தீங்க, உங்க கூட நடிச்ச பிரசாந்த், லைலா, சிம்ரன் பற்றி சொல்லுங்க மேடம்...? 

லைலாவிடம் விளையாட்டுத்தனம் அதிகம். ப்ரஷாந்த் அந்த காலத்திலேயே கணிணியை அபரிமிதமாக நேசித்தவர் 
சிம்ரன் முதல் படத்தில் (விஐபி) பார்த்ததற்கும் அப்போதைக்கும் அபரிமிதமாக பரிமளித்திருந்தார்...நடிப்பில் ஒரு முதிர்ச்சி இருந்தது...!!!


3 : உங்களுக்கு பிடிச்ச உலக தலைவர்கள்...?

ஒபாமா, நெல்சன் மண்டேலா, ஆங் சாங் சூ கீ....!


4 : இயற்கை பேரழிவுகள், எந்த ரூபத்தில் எப்போது வரும் என கனிக்க முடியாத இந்த வேளையில், அணுமின் நிலையங்கள் இன்னும் தேவையா...?

அணுமின் நிலையங்களின் சாதகங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும், பாதுகாப்பு விஷயங்களை மேம்படுத்தி மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். 
கரண்ட் கூடத்தான் ஷாக் அடிக்கும்....பெட்ரோல், எரிவாயு போன்றவையும் கவனமாக கையாளப்பட வேண்டியவை...நாம் உபயோகிக்கவில்லையா? அணுவும் அது போலவே...


5 : உங்களுக்கு பிடித்த நடிகர்கள், நடிகைகள் பற்றி சொல்லுங்களேன்...?

எல்லோரையும் பிடிக்கும்....கமல், மோஹன்லால், நந்திதாதாஸ், ரேகா(ஹிந்தி), பெரிய லிஸ்ட்....அது...


6 : உங்க வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் சொல்லுங்களேன்..?

இன்னும் எத்தனை வருடங்களுக்கு இந்த கேள்வி கேட்கப்பட்டுக்கொண்டிருக்கும்? so very cliched it sounds..


7 : எப்போதாவது பல்பு வாங்கிட்டு முழிச்ச சம்பவங்கள் உண்டா...?

இல்லைன்னா அது பொய்யா இருக்கும்....


8 : தைரியமாக வேலை செய்ய போய்க்கொண்டிருக்கும் பெண்களுக்கு உங்கள் அறிவுரை...?

CONTINUE.....


9 : எப்போதும் உற்சாகமாக அழகா இருக்கிறீர்களே அதன் ரகசியம் என்ன...?

உங்க கேள்வியிலேயே பதிலும் இருக்கு,,,,உற்சாகம்....ஆமாம் மனசுல எந்த negative thoughts ம் இல்லாம சந்தோஷமா இருக்கறேன்....அது காரணமா இருக்கலாம்.


10 : மீடியா, நடிப்பு, குடும்பம், எப்பிடி இருக்கு வாழ்க்கை...?

ஒவ்வொன்றிற்குமான நேரம் கிடைக்கிறது.


11 : உங்களுக்கு பிடித்த இயக்குனர், வெள்ளித்திரை, சின்னத்திரை...?

மணிரத்னம், கே பாலசந்தர் வெள்ளித்திரையில்....சின்னத்திரையில்....என்னை தெலுங்கில் அறிமுகப்படுத்திய உப்பலபட்டி நாராயண ராவ்...


12 : வேகமாக வளர்ந்து பெருகி வரும், பதிவுலகம், பதிவர்கள் பற்றி சொல்லுங்க மேடம்...? 

நல்ல ஆரோக்கியமான அறிவியல் வளர்ச்சி....


13 : பதிவுலகில் அட்டகாசமாக பிரகாசித்து வரும் பெண் பதிவர்களுக்கு [[ஆண் பதிவர்களுக்கும்]] உங்கள் ஆலோசனை என்ன...?

நானே ஒன்றரை ஆண்டுகளாகத்தான் பதிவுலகில் தடம் பதித்திருக்கிறேன்....அவர்கள் தான் எனக்கு அறிவுரை சொல்ல வேண்டும்..... 
சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.,,,,censor இல்லை இங்கே...


14 : இப்போது என்னென்ன படங்களில் நடித்து கொண்டு இருக்குறீர்கள்...?

தமிழில் - என் பெயர் குமாரசாமி மலையாளத்தில் ஜோஸ் ஏட்டண்டெ ஹீரோ & தி கிங் அண்ட் தி கமிஷ்னர்.


15 : உங்களை அன்புடன் தாங்கும் உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்கள்...? 

கணவர் பாபு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் அக்கௌண்ட்ஸ் ஆஃபிஸர், மகன் ஆஷிக் ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரிங் மூன்றாம் ஆண்டு, மகன் ஷாருக் எட்டாம் வகுப்பு
அத்தனை பேருக்கும் நான் தான் குழந்தை போல...


16 : கடைசி ஸ்பெஷல் கேள்வி, சந்தானம் சிவாஜி சார் நழுவின மாதிரி சொல்லிறாதீங்க, அரசியலில் ஈடுபட்டு பெண்களுக்காக போராட வேண்டும் என்ற எண்ணம் 
மனதில் எழுந்தது உண்டா....? [[ஹை மாட்டிகிட்டாங்களே]] 

கீதையிலிருந்து - எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது....எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்...


டிஸ்கி : மிகவும் நன்றி மேடம்...



http://galattasms.blogspot.com





  • http://dinasarinews.blogspot.com



  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger