புதுடெல்லி:ராணுவத்துக்கு தாத்ரா வாகனங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்(பி.இ.எம்.எல்) தலைவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி கோரியுள்ளது. மத்திய அரசு நிறுவனமான பி.இ.எம்.எல். மூலமாக ராணுவத்துக்கு ‘தாத்ரா’ வாகனங்கள் வாங்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பா� � சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந் நிலையில் அந்த நிறுவனத்தின் தலைவர் வி.ஆர்.எஸ். நடராஜன் மீது சில புகார்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது [...]
டமாஸ்கஸ்:எதிர்ப்பாளர்களை அடக்கி ஒடுக்கும் சிரியா பஸ்ஸாரின் அரசு இம்மாதம் 10-ஆம் தேதிக்குள் ராணுவத்தை மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து வாபஸ் பெறுவது உள்ளிட்ட அரபுலீக்-ஐ.நா அமைதித்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக மத்தியஸ்தர் கோஃபி அன்னன் தெரிவித்துள்ளார். சிரியாவில் நடைபெறும் மோதலை முடிவுக்கு கொண்டுவர அமைதி திட்டங்களை அமல்படுத்த அந்நாட்டு அர� �ுக்கு கோஃபி அன்னன் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தார். கால அவகாசத்தை ஒப்புக்கொள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலும் சிரியா அரசை வலியுறுத்த வேண்டும் என்று [...]
5வது ஐபிஎல் டுவென்டி 20 கிரிக்கெட் தொடரின் தொடக்க விழா இன்று இரவு சென்னையில் கோலாகலமாக நடந்தேறியது. அமிதாப் பச்சன் கவிதை பாட, பிரியங்கா சோப்ராவும், கரீனாவும் ஆட்டம் போட, பிரபுதேவா மின்னல் வேக நடன ம் ஆட, கேத்தி பெர்ரியின் கலக்கல் பாடலுடன் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் தொடங்கிய இந்த கண்கவர் விழாவில் பல்வேறு கலை நிகழ்சசிகளும் இடம் பெற்றன. ஒய்எம்சிஏ மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடக்க விழா தொடங்கியது.
9 ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள், வீரர்கள், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்� ��னர்.
சினிமாக்காரர்களின் நடனமும், கலைஞர்களின் ஆட்டத்தையும் பார்த்தபோது, இது கிரிக்கெட் தொடக்க விழாவா அல்லது திரைப்பட விருது விழாவா என்ற சந்தேகம் எழுந்தது. அந்த அளவுக்கு களேபரமாக இருந்தது நடனமும், பாடல்களும்.
ஆரம்பம் முதல் இறுதி வரை சினிமாத்தனமானகவே இருந்தது தொடக்க விழா. கிரிக்கெட் சம்பந்தமான எதையும் பார்க்க முடியவில்லை. அமிதாப் பச்சன் பாடிய கவிதை மட்டு� �ே கிரிக்கெட்டுடன் தொடர்புடையதாக இருந்தது. மற்றவை அனைத்துமே சினிமா பாடல்களும், நடனங்களும்தான்.
இருந்தாலும் கூடியிருந்த ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது ஐபிஎல் 5ன் தொடக்க விழா நிகழ்ச்சிகள்.
நாளை முதல் ஆட்டம்
ஏப்ரல் 4ம் தேதியான நாளை முதல் போட்டிகள் தொடங்குகின்றன. அடுத்த 54 நாட்களுக்கு அதிரடி, சரவெடி, அதிரிபுதிரியான போட்டிகள் கிரிக்கெட் ரசிக ர்களை, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சிறார் பட்டாளத்தை சிறகடிக்க வைக்கப் போகின்றன.
மொத்தம் 9 அணிகள் -அத்தனையிலும் ஏராளமான சர்வதேச வீரர்கள், எக்குத்தப்பான இந்திய வீரர்கள் - தத்தமது திறமைகளால் தங்களது அணியை வெற்றியின் உச்சத்திற்குக் கொண்டு செல்ல துடிப்புடன் காத்திருக்கின்றனர்.
தத்தமது நாட்டு தேசிய அணியில் இடம் பிடிக்க இந்த ஐபிஎல் வளரும் வீரர்களுக்கு ஒரு வர� ��் பிரசாதம். இங்கு ஜொலித்தால், அங்கு இடம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுடன் ஒவ்வொரு வீரரும் தங்களது திறமைகளை இங்கு கொட்டிக் கவிழ்க்கவும், கூடவே கை நிறைய காசுகளைப் பார்க்கவும் ஆர்வமாக உள்ளனர்.
நாளை நடைபெறும் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸும், மும்பை இந்தியன்ஸ் அணிகளும் மோதுகின்றன. சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் போட்� ��ி நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் மே 27ம் தேதி வரை 12 இடங்களில் 76 போட்டிகள் நடைபெறவுள்ளன. லீக் போட்டிகள் மட்டும் 72 ஆகும். ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் ஆடும்.
டோனி , போலின்கர் நடனம் படு ஜாலியாக கேப்டன் டோணியுடன் உரையாட, உரையாடலுக்கு நடுவே, இப்போது போடப்படும் பாடல� ��க்கு ஏற்ப என்னோடு யாராவது டான்ஸ் ஆடுங்கள் என்று கேட்டார். அடுத்த விநாடி நாக்கமூக்க பாடல் ஒலிபரப்பானது.
பிரியங்கா சக் சக்கென்று அதிரடியாக ஸ்டெப்ஸைப் போட்டார். ஆனால் அவருடன் ஆடுவதற்குத்தான் ஆள் யாரும் முன்வரவில்லை. கேப்டன் டோணி நைஸாக அங்குமிங்கும் நழுவினார். மண்ணின் மைந்தர்களான முரளி விஜய், பத்ரிநாத், அஸ்வின் ஆகியோரும் நழுவினர்.
கடைசியில் பார்த்தால், ஆஸ் திரேலியாவின் போலிஞ்சர் அட்டகாசமாக இடுப்பை ஆட்டி டான்ஸைப் போட கூட்டத்தில் விசில் சத்தம் பறந்தது. தொடர்ந்து அஸ்வினும் லேசாக ஆடி வைத்தார். மற்றவர்கள் வெட்கத்தோடு விளையாடிக் கொண்டிருந்தனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் உறுப்பினர்கள் சிலரை தாம் விடுவிப்பதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. நேற்றைய தினம் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள ராமகிருஷ்ன மண்டபத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது. சுமார் 380 பேர் இதில� � விடுவிக்கப்பட்டனர். இந் நிகழ்வுகளில் பெண் போரளிகளை நாகரீக உடைகள் அணிந்து கலந்து கொண்டனர்.
fa shion show by captured ltte members. fashion show , beauty , make up , srilanka