ஐ.நா. சபை கணக்காளர் குழுவின் பதவிக்கு இந்திய தலைமை கணக்காளர் தேர்வு Shashi kant sharma wins UN board of auditors elections
நியூ யார்க், நவ. 2-
ஐக்கிய நாடுகள் சபையின் வரவு - செலவு கணக்குகளை சரிபார்க்கவும், ஐ.நா. சார்பில் நடத்தப்படும் திட்டங்கள் தொடர்பான செலவுகளை கண்காணித்து ஆண்டறிக்கையும், பரிந்துரையும் தாக்கல் செய்ய கணக்காளர்கள் குழு இயங்கி வருகிறது.
இந்த குழுவின் உறுப்பினர் பதவிக்கு 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். ஐ.நா. சபையில் இணைந்துள்ள 186 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் வாக்களித்து புதிய உறுப்பினரை தேர்ந்தெடுப்பார்கள்.
இம்முறை இப்பதவிக்கு இந்தியாவின் சார்பில் தற்போதைய இந்திய தலைமை கணக்காளராக பொறுப்பு வகிக்கும் சசி காந்த சர்மா போட்டியிட்டார்.
மோத்தம் உள்ள 186 வாக்குகளில் 124 வாக்குகளை பெற்ற சசி காந்த் சர்மா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிலிப்பைன்ஸ் நாட்டு வேட்பாளரை விட 62 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
1-6-2014 அன்று இந்த புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் சசி காந்த் சர்மா, தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார்.
...
shared via