ஈராக்கில் தூத்துக்குடி நர்சு பத்திரமாக இருப்பதாக தகவல் iraq tuticorin nurse safe information சென்னை, ஜூன். 20– ஈராக்கில் உள் நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. அங்குள்ள திக்ரித், மொசூல் நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மொசூல் நகரில் 40 இந்திய தொழிலாளர்களும், திக்ரித் நகரில் 46 இந்திய பெண் நர்சுகளும் பணி புரிந்து வந்தனர். அவர் களை தீவிரவாதிகள் தங்கள் பிடியில் வைத்து உள்ளனர். 46 இந்திய நர்சுகளில் 6 பேர் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தருமகிரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது தூத்துக்குடியைச் சேர்ந்த நர்சு ஒருவரும் இவர்களுடன் இருப்பது தெரிய வந்துள்ளது. அவரது பெயர் லெஜிமா ஜெரோஷ் மோனிகா. இவர் ஈராக்கின் தெக்ரித் நகர் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். இவருடன் கூடலூர் உள்ளிட்ட இந்திய நர்சுகள் 46 பேரும் பணிபுரிந்து வந்தனர். திக்ரித் நகரை கைப்பற்றிய தீவிரவாதிகள் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த 46 நர்சு களையும் தங்கள் பிடியில் வைத்துள்ளனர். லெஜிமா ஜெரோஷ் மோனிகா அங்கிருந்து தூத்துக்குடியில் உள்ள உறவினர்களுடன் டெலிபோனில் பேசினார். அப்போது, தீவிரவாதிகள் தங்களை வேறோரு ஆஸ்பத்திரியில் வைத்து இருப்பதாகவும் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தீவிரவாதிகள் தங்களை நல்ல முறையில் நடத்துகிறார்கள், குடிநீர், உணவு, இருப்பிட வசதிகள் செய்து கொடுத்துள்ளனர். இந்திய நர்சுகள் அனைவரும் நலமுடன் இருக்கிறோம் என்றும் லெஜிமா போனில் தெரிவித்தார். நேற்று கூடலூர் நர்சு சினி தனது கணவர் தில்சனிடம் பேசினார். இங்கு தங்களுக்கு ஒரு வாரத்துக்கு தேவையான உணவு உள்ளிட்ட எல்லா வசதியும் உள்ளது. எந்தப் பிரச்சினையும் இல்லை. உள்நாட்டு போர் நீடித்தால் உணவு தட்டுப்பாடு வரும், எனவே இந்தியா திரும்ப விரும்புகிறோம். ஆனால் போக்குவரத்து முடங்கியுள்ளதால் வெளியில் செல்ல முடியவில்லை என்று கூறினார். ஈராக்கில் தவிக்கும் தமிழக நர்சுகளை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். ... |
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago