Friday, 18 October 2013

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிப்போம்: அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை Catch regime in Delhi assembly election arvind kejriwal

- 0 comments

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிப்போம்: அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை Catch regime in Delhi assembly election arvind kejriwal

புதுடெல்லி, அக். 19–

டெல்லி சட்டசபை தேர்தலில் 50 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடிப்போம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், மிசோராம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடை பெறுகிறது.

டெல்லியில் வருகிற டிசம்பர் 4–ந்தேதி ஓட்டுப் பதிவு நடக்கிறது. அங்கு காங்கிரஸ் 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியில் இருந்து வருகிறது. ஷீலா தீட்சித் 3 முறை முதல்–மந்திரி பதவியில் இருந்து வருகிறார்.

வருகிற தேர்தலில் காங்கிரஸ், பாரதீய ஜனதா தவிர அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் களம் இறங்கி உள்ளது. ஊழலுக்கு எதிரான இயக்கம் தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் அன்னா ஹசாரேயுடன் இணைந்து லோக்பால் மசோதாவுக்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்.

டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் நீதி கேட்டு பெரும் போராட்டத்தை நடத்தினார். அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் கட்சி தொடங்குவதை அன்னா ஹசாரே விரும்பவில்லை. என்றாலும் விழிப்புணர்வு பிரசாரம், போராட்டங்கள் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் இளைஞர்களை கவர்ந்துள்ளார். எனவே டெல்லி சட்டசபை தேர்தலில் அவர் காங்கிரஸ், பாரதீய ஜனதாவுக்கு பெரும் சவாலாக உருவாகியுள்ளார்.

சட்டசபை தேர்தலில் குதித்துள்ள கெஜ்ரிவால் டெல்லி முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்து கலக்கி வருகிறார். இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து கணிப்பு நடத்தினார்.

கடந்த செப்டம்பர் 5–ந் தேதி முதல் அக்டோபர் 5–ந்தேதி வரை 3 கட்டங்களாக கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 34,425 வாக்காளர்களிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

இதில் ஆம் ஆத்மி கட்சி 45 முதல் 50 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 16 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி பின்தங்கி உள்ளது. 21 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு ஊசலாட்டத்தில் இருக்கிறது.

இந்த தகவலை அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சி தலைவரும் சமூக ஆய்வாளருமான யோகேந்திர யாதவ் ஆகியோர் நிருபர்களிடம் தெரிவித்தனர். கெஜ்ரிவால் மேலும் கூறியதாவது:–

50 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் டெல்லியில் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம். தேர்தலுக்கு இன்னும் 50 நாட்கள் இருக்கிறது. இடைப்பட்ட நாட்களில் எங்களுக்கு இன்னும் கூடுதல் ஆதரவு கிடைக்கும்.

பிப்ரவரி மாதம் எங்கள் கட்சி செல்வாக்கு 14 சதவீதமாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் 27 சதவீதமாக அதிகரித்தது. செப்டம்பரில் 32 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதே சமயம் காங்கிரசின் செல்வாக்கு பிப்ரவரி மாதத்தில் 35 சதவீதம் இருந்தது. ஆகஸ்ட்டில் அது 28 சதவீதமாகவும், செப்டம்பரில் 26 சதவீதமாகவும் சரிந்துள்ளது.

யோகேந்திர யாதவ் கூறுகையில், டெல்லியில் நாங்கள் மிகப்பெரிய போட்டியாளர்களாக உருவாகி வருகிறோம். எங்களது பிரதான எதிரி காங்கிரஸ் தான். பாரதிய ஜனதா கட்சி வாக்காளர்களை கவர தவறி விட்டது என்றார்.

...

shared via

[Continue reading...]

ஆசாராம் பாபு போதுமான ஆண்மை சக்தியுடன் உள்ளார்: 2 வது பரிசோதனை அறிக்கையில் தகவல் Asaram Bapu passes potency test second time

- 0 comments

ஆசாராம் பாபு போதுமான ஆண்மை சக்தியுடன் உள்ளார்: 2 வது பரிசோதனை அறிக்கையில் தகவல் Asaram Bapu passes potency test second time

அகமதாபாத், அக். 18-

குஜராத்தை சேர்ந்த ஆன்மிக தலைவர் ஆசாராம் பாபு (வயது 72), ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் வைத்து உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 16 வயது பெண் ஒருவரை அவர் கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந்தேதி இரவு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.

அவரது புகாரின் பேரில் ஆசாராம் மீது போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து ஆசாராம் பாபுவை இந்தூர் ஆசிரமத்தில் ராஜஸ்தான் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் விமானம் மூலம், சம்பவம் நடந்த ஜோத்பூருக்கு அழைத்து வரப்பட்டார்.

ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து அவர் ஜோத்பூரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஜாமின் வழங்கக் கோரி ஆசாராம் சார்பில் ஜோத்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆசாராமின் உடல்நிலை சரியில்லாததால், அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஆனால், அவருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், ஆசாராமை வெளியில் விட்டால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்று வாதாடினார்.

அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று, ஆசாராமின் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில், குஜராத்தில் உள்ள சூரத் ஆசிரமத்தில் வைத்து ஆசாராம் பாபுவும் அவரது மகன் நாராயண் சாயும் தங்களை கற்பழித்து விட்டதாக அக்கா- தங்கை இருவர் இவர்கள் மீது புகார் அளித்தனர்.

இது தொடர்பாக சந்த்கேடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசாராம் பாபுவை தங்களிடம் விசாரணைக்காக ஒப்படைக்க வேண்டும் என குஜராத் மாநில போலீசார் ஜோத்பூர் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இதற்கு நீதிபதியும் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து, அகமதாபாத் போலீஸ் துணை கமிஷனர் மனோஜ் நினாமா தலைமையிலான போலீசார் ஆசாராம் பாபுவை விமானம் மூலம் பலத்த பாதுகாப்புடன் குஜராத் தலைநகர் அகமதாபாத்திற்கு அழைத்து வந்தனர்.

அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க காந்திநகர் மாஜிஸ்திரேட் கோர்ட் கடந்த 15-ம் தேதி அனுமதி அளித்தது.

விசாரணையில் ஒருகட்டமாக ஆசாராம் பாபுவின் ஆண்மை தன்மையை உறுதிபடுத்துவதற்காக கடந்த 16-ம் தேதி அவரை உள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.

ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் ஆண்மை பரிசோதனைக்கு தன்னால் ஒத்துழைக்க முடியாது என ஆசாராம் பாபு பிடிவாதம் பிடித்ததால் நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு பரிசோதனை நடத்தாமலேயே போலீசார் அவரை மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இந்நிலையில், ஆசாராம் பாபுவுக்கு இன்று மீண்டும் ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.  பரிசோதனை முடிவில் 72 வயதாகும் அவர் இன்னும் ஆண்மை தன்மையுடன் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே ராஜஸ்தான் மாநில கோர்ட்டில் நடைபெற்று வரும் கற்பழிப்பு வழக்கில் அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டதும், அவர் முழு ஆண்மை தன்மையுடன் உள்ளார் என மருத்துவ அறிக்கை குறிப்பிட்டதும் நினைவிருக்கலாம்.

...

shared via

[Continue reading...]

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா குருசாய்தத் காலிறுதிக்கு முன்னேற்றம் Denmark open badminton Saina Gurusaidutt quarters Improvement

- 0 comments

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா குருசாய்தத் காலிறுதிக்கு முன்னேற்றம் Denmark open badminton Saina Gurusaidutt quarters Improvement

ஓடென்ஸ், அக். 18-

டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகள் ஓடென்ஸ் நகரில் நடைபெற்று வருகின்றன. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதிக்கு முன்னேறினார்.

நடப்பு சாம்பியனான சாய்னா, இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து வீராங்கனை கிறிஸ்டி கில்மோரை எதிர்கொண்டார். அபாரமாக ஆடிய சாய்னா, 21-12, 21-7 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று, அரை மணி நேரத்தில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

முன்னதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்று ஆட்டங்களில் இந்திய வீரர்கள் பருபள்ளி காஷ்யப், அஜய் ஜெயராம் ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினர். அஜய் ஜெயராமை வீழ்த்திய இந்திய வீரர் குருசாய்தத் காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். காலிறுதியில் குருசாய்தத்துக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது. சீனாவின் 3-ம் தரநிலை வீரர் டியு பெங்யூவை அவர் எதிர்கொள்ள உள்ளார். 

...

shared via

[Continue reading...]

உலகின் மோசமான விமான நிலைய டெர்மினல் பிலிப்பைன்சில் உள்ளது: ஆன்லைன் சர்வே முடிவு The world worst airport terminal

- 0 comments

உலகின் மோசமான விமான நிலைய டெர்மினல் பிலிப்பைன்சில் உள்ளது: ஆன்லைன் சர்வே முடிவு The world worst airport terminal

மணிலா, அக். 18-

விமான நிலையங்களின் தரம் மற்றும் பயணிகளுக்கு செய்து கொடுக்கும் வசதிகள் ஆகியவை குறித்து ஆன்லைன் போக்குவரத்து இணையதளம் மூலம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பின்படி, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலைய முனையம் (டெர்மினல்) உலகின் மிக மோசமான விமான நிலைய முனையம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாழடைந்த வசதிகள், நேர்மையற்ற விமானநிலைய ஊழியர்கள் மற்றும் டாக்சி டிரைவர்கள், நீண்ட நேர காத்திருப்பு, கடுமையாக நடந்துகொள்ளும் அதிகாரிகள் என பிலிப்பைன்ஸ் முதல் டெர்மினல் பற்றி பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

தூய்மை, வாடிக்கையாளர் சேவை மற்றும் பயணிகளின் வசதி ஆகிய அடிப்படையில், ஏராளமான மக்கள் வந்து செல்லும் மணிலா விமான நிலையத்தின் முதல் டெர்மினல், உலகின் மிக மோசமான டெர்மினல்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளதாக அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பு முடிவினை விமான நிலைய அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதெல்லாம் பழைய பிரச்சினைகள், தற்போது நிலைமை மேம்பட்டிருக்கிறது என்று முதல் டெர்மினல் மேலாளர் கூறுகிறார்.

ஆண்டுக்கு 6.5 மில்லியன் பயணிகள் வரை வந்து செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ள மணிலா விமான நிலையத்தில் தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 8.1 மில்லியன் பயணிகள் வந்துள்ளனர்.

மொத்தம் உள்ள 4 டெர்மினல்களில், முதல் டெர்மினல் 32 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். இதனை புதுப்பிக்க அரசு 58 மில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்து, பணிகள் நடைபெற்று வருகின்றன. 

...

shared via

[Continue reading...]

வேளச்சேரி வங்கி அதிகாரியை கொன்றது நண்பர்கள்: போலீஸ் விசாரணையில் தகவல் police information velachery bank officer killed in friend

- 0 comments

வேளச்சேரி வங்கி அதிகாரியை கொன்றது நண்பர்கள்: போலீஸ் விசாரணையில் தகவல் police information velachery bank officer killed in friend

வேளச்சேரி, அக். 18–

வேளச்சேரி வீனஸ் காலனி விரிவு 2–வது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் பெசன்ட்நகர் கிளை உதவி மேலாளராக பணியாற்றி வந்த இவர் நேற்று முன்தினம் இரவு தனது மாடி வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர்களால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.

நாகராஜ் கழுத்து பெல்ட்டால் இறுக்கப்பட்டு இருந்தது. அவரது செல்போன், இருசக்கர வாகனங்கள் கொள்ளை போய் இருந்தது. வீட்டில் இருந்த பீரோ ஒன்று உடைக்கப்பட்டு இருந்தது.

மேலும் படுக்கை அறையில் இருந்த பீரோ சாவியை காணவில்லை. வீடு முழுக்க மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது.

மறுநாள் காலை கீழ் வீட்டில் இருந்த தாய் கமலம் மாடிக்கு வந்து பார்த்த போதுதான் நாகராஜ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இந்த கொலை குறித்து அடையாறு துணை கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா, உதவி கமிஷனர் மோகன்ராஜ், வேளச்சேரி இன்ஸ்பெக்டர் சேகர்பாபு ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

கொலையாளிகள் திட்டமிட்டு கொலையை அரங்கேற்றியுள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவத்தன்று இரவு நாகராஜ் தனது நண்பர்கள் 3 பேருடன் வீட்டுக்கு வந்தார். அவர்களுடன் நீண்ட நேரம் மது அருந்தினார். நள்ளிரவு நண்பர்கள் திரும்பிச் சென்று விட்டனர். அப்போது நாகராஜின் இரு சக்கர வாகனத்தை அவர்கள் எடுத்துச் சென்றனர். வாகனத்தை எடுத்துச் செல்வதை கீழ் வீட்டில் இருந்த நாகராஜ் தாயார் கமலம் பார்த்து உள்ளார்.

எனவே நாகராஜை அவரது நண்பர்கள்தான் கொலை செய்து இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மது அருந்தும்போது ஏற்பட்ட மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

அந்த கொலைகார நண்பர்கள் யார்? என்று தெரியவில்லை. அவர்களை பிடிக்க பல்வேறு தடயங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

கொள்ளைபோன நாகராஜின் செல்போன், இரு சக்கர வாகனத்தை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் முதலில் ஈடுபட்டுள்ளனர். நாகராஜ் வீட்டுக்கு அடிக்கடி வரும் நண்பர்கள் யார்– யார்? என்ற தகவலும் சேகரிக்கப்படுகிறது.

நாகராஜுக்கு செல்வி என்ற மனைவியும், திருமணமான கலையரசன் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். கலையரசன் துபாயில் குடும்பத்துடன் வசிக்கிறார். திவ்யா அமெரிக்காவில் கணவருடன் வசிக்கிறார். அமெரிக்காவில் உள்ள மகள் திவ்யா வீட்டுக்கு செல்வி சென்று உள்ளார்.

துபாயில் இருக்கும் மகன் கலையரசனும், அமெரிக்காவில் இருக்கும் நாகராஜ் மனைவி செல்வியும் நாளை சென்னை திரும்புகிறார்கள்.

நாகராஜ் நண்பர்கள் பற்றி மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

...

shared via

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger