Friday, 18 October 2013

வேளச்சேரி வங்கி அதிகாரியை கொன்றது நண்பர்கள்: போலீஸ் விசாரணையில் தகவல் police information velachery bank officer killed in friend

வேளச்சேரி வங்கி அதிகாரியை கொன்றது நண்பர்கள்: போலீஸ் விசாரணையில் தகவல் police information velachery bank officer killed in friend

வேளச்சேரி, அக். 18–

வேளச்சேரி வீனஸ் காலனி விரிவு 2–வது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் பெசன்ட்நகர் கிளை உதவி மேலாளராக பணியாற்றி வந்த இவர் நேற்று முன்தினம் இரவு தனது மாடி வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர்களால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.

நாகராஜ் கழுத்து பெல்ட்டால் இறுக்கப்பட்டு இருந்தது. அவரது செல்போன், இருசக்கர வாகனங்கள் கொள்ளை போய் இருந்தது. வீட்டில் இருந்த பீரோ ஒன்று உடைக்கப்பட்டு இருந்தது.

மேலும் படுக்கை அறையில் இருந்த பீரோ சாவியை காணவில்லை. வீடு முழுக்க மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது.

மறுநாள் காலை கீழ் வீட்டில் இருந்த தாய் கமலம் மாடிக்கு வந்து பார்த்த போதுதான் நாகராஜ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இந்த கொலை குறித்து அடையாறு துணை கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா, உதவி கமிஷனர் மோகன்ராஜ், வேளச்சேரி இன்ஸ்பெக்டர் சேகர்பாபு ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

கொலையாளிகள் திட்டமிட்டு கொலையை அரங்கேற்றியுள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவத்தன்று இரவு நாகராஜ் தனது நண்பர்கள் 3 பேருடன் வீட்டுக்கு வந்தார். அவர்களுடன் நீண்ட நேரம் மது அருந்தினார். நள்ளிரவு நண்பர்கள் திரும்பிச் சென்று விட்டனர். அப்போது நாகராஜின் இரு சக்கர வாகனத்தை அவர்கள் எடுத்துச் சென்றனர். வாகனத்தை எடுத்துச் செல்வதை கீழ் வீட்டில் இருந்த நாகராஜ் தாயார் கமலம் பார்த்து உள்ளார்.

எனவே நாகராஜை அவரது நண்பர்கள்தான் கொலை செய்து இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மது அருந்தும்போது ஏற்பட்ட மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

அந்த கொலைகார நண்பர்கள் யார்? என்று தெரியவில்லை. அவர்களை பிடிக்க பல்வேறு தடயங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

கொள்ளைபோன நாகராஜின் செல்போன், இரு சக்கர வாகனத்தை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் முதலில் ஈடுபட்டுள்ளனர். நாகராஜ் வீட்டுக்கு அடிக்கடி வரும் நண்பர்கள் யார்– யார்? என்ற தகவலும் சேகரிக்கப்படுகிறது.

நாகராஜுக்கு செல்வி என்ற மனைவியும், திருமணமான கலையரசன் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். கலையரசன் துபாயில் குடும்பத்துடன் வசிக்கிறார். திவ்யா அமெரிக்காவில் கணவருடன் வசிக்கிறார். அமெரிக்காவில் உள்ள மகள் திவ்யா வீட்டுக்கு செல்வி சென்று உள்ளார்.

துபாயில் இருக்கும் மகன் கலையரசனும், அமெரிக்காவில் இருக்கும் நாகராஜ் மனைவி செல்வியும் நாளை சென்னை திரும்புகிறார்கள்.

நாகராஜ் நண்பர்கள் பற்றி மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

...

shared via

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger