Friday, 18 October 2013

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிப்போம்: அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை Catch regime in Delhi assembly election arvind kejriwal

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிப்போம்: அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை Catch regime in Delhi assembly election arvind kejriwal

புதுடெல்லி, அக். 19–

டெல்லி சட்டசபை தேர்தலில் 50 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடிப்போம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், மிசோராம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடை பெறுகிறது.

டெல்லியில் வருகிற டிசம்பர் 4–ந்தேதி ஓட்டுப் பதிவு நடக்கிறது. அங்கு காங்கிரஸ் 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியில் இருந்து வருகிறது. ஷீலா தீட்சித் 3 முறை முதல்–மந்திரி பதவியில் இருந்து வருகிறார்.

வருகிற தேர்தலில் காங்கிரஸ், பாரதீய ஜனதா தவிர அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் களம் இறங்கி உள்ளது. ஊழலுக்கு எதிரான இயக்கம் தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் அன்னா ஹசாரேயுடன் இணைந்து லோக்பால் மசோதாவுக்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்.

டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் நீதி கேட்டு பெரும் போராட்டத்தை நடத்தினார். அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் கட்சி தொடங்குவதை அன்னா ஹசாரே விரும்பவில்லை. என்றாலும் விழிப்புணர்வு பிரசாரம், போராட்டங்கள் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் இளைஞர்களை கவர்ந்துள்ளார். எனவே டெல்லி சட்டசபை தேர்தலில் அவர் காங்கிரஸ், பாரதீய ஜனதாவுக்கு பெரும் சவாலாக உருவாகியுள்ளார்.

சட்டசபை தேர்தலில் குதித்துள்ள கெஜ்ரிவால் டெல்லி முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்து கலக்கி வருகிறார். இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து கணிப்பு நடத்தினார்.

கடந்த செப்டம்பர் 5–ந் தேதி முதல் அக்டோபர் 5–ந்தேதி வரை 3 கட்டங்களாக கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 34,425 வாக்காளர்களிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

இதில் ஆம் ஆத்மி கட்சி 45 முதல் 50 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 16 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி பின்தங்கி உள்ளது. 21 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு ஊசலாட்டத்தில் இருக்கிறது.

இந்த தகவலை அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சி தலைவரும் சமூக ஆய்வாளருமான யோகேந்திர யாதவ் ஆகியோர் நிருபர்களிடம் தெரிவித்தனர். கெஜ்ரிவால் மேலும் கூறியதாவது:–

50 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் டெல்லியில் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம். தேர்தலுக்கு இன்னும் 50 நாட்கள் இருக்கிறது. இடைப்பட்ட நாட்களில் எங்களுக்கு இன்னும் கூடுதல் ஆதரவு கிடைக்கும்.

பிப்ரவரி மாதம் எங்கள் கட்சி செல்வாக்கு 14 சதவீதமாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் 27 சதவீதமாக அதிகரித்தது. செப்டம்பரில் 32 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதே சமயம் காங்கிரசின் செல்வாக்கு பிப்ரவரி மாதத்தில் 35 சதவீதம் இருந்தது. ஆகஸ்ட்டில் அது 28 சதவீதமாகவும், செப்டம்பரில் 26 சதவீதமாகவும் சரிந்துள்ளது.

யோகேந்திர யாதவ் கூறுகையில், டெல்லியில் நாங்கள் மிகப்பெரிய போட்டியாளர்களாக உருவாகி வருகிறோம். எங்களது பிரதான எதிரி காங்கிரஸ் தான். பாரதிய ஜனதா கட்சி வாக்காளர்களை கவர தவறி விட்டது என்றார்.

...

shared via

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger